search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Radhapuram"

    • ராதாபுரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்துகுறிச்சி, இளையநயினார்குளம், சிதம்பராபுரம், திருவம்பலாபுரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளது.
    • தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பலை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ராதாபுரம் தெற்கு ஒன்றிய பா.ஜனதா ஊடக பிரிவு ராதை காமராஜ் தெரிவித்துள்ளார்.

    பணகுடி:

    ராதாபுரம் போலீஸ் நிலைய எல்ைலைக்குட்பட்ட ஆத்துகுறிச்சி, இளையநயினார்குளம், சிதம்பராபுரம், திருவம்பலா புரம் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளது.

    மின் வயர் திருட்டு

    இந்த தோட்டங்களை குறிவைத்து பல மாதங்களாக மின் வயர் மற்றும் மின் மோட்டார்களை ஒரு கும்பல் திருடி வருகிறது. இதுகுறித்து விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு சிதம்பரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆத்துக்குறிச்சி ஊருக்கு அருகே உள்ள தோட்டத்தில் திருட்டு கும்பல் மீண்டும் கைவரிசை காட்டி உள்ளது.

    இதனால் அப்பகுதி விவசாயிகள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பலை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ராதாபுரம் தெற்கு ஒன்றிய பா.ஜனதா ஊடக பிரிவு ராதை காமராஜ் தெரிவித்துள்ளார்.

    • ராதாபுரம் தாலுகாவைச் சேர்ந்த ஆவரைகுளம்,செட்டிகுளம் ஆகிய கிராமங்களில் திருவாவடு துறை ஆதீனத்திற்கு பாத்தியப் பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்களும் மற்றும் குடியிருப்பு புஞ்சை நிலங்களும் உள்ளன.
    • பல லட்ச ரூபாய் செலவில் சீரமைத்து, சமப்படுத்தி, திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு பெற்று விவசாயம் செய்து வருகிறார்கள்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் தாலுகாவில் திருவாவடுதுறை ஆதீன இடங்களை ஏற்கனவே வசித்தவர்களுக்கு உரிமம் வழங்கி குத்தகை வசூலிக்க வேண்டும் என்று கலெக்டருக்கு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்துள்ளார்.

    கலெக்டருக்கு மனு

    இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு, நெல்லை மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராதாபுரம் தாலுகாவைச் சேர்ந்த ஆவரைகுளம், கடம்பன்குளம், பழவூர், மதகனேரி, சவுந்தர லிங்கபுரம், ஊரல்வாய் மொழி, ஊரல்வாய்மொழி காலனி, சண்முகபுரம், அடங்கார் குளம், மேலக்கிளாக்குளம், கீழக்கிளாக்குளம், செட்டிகுளம் ஆகிய கிராமங்களில் திருவாவடு துறை ஆதீனத்திற்கு பாத்தியப் பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்களும் மற்றும் குடியிருப்பு புஞ்சை நிலங்களும் உள்ளன.

    இந்த நிலங்களில் பல நூறு ஆண்டுகளாக அந்தந்த ஊரைச் சேர்ந்தவர்கள் திருவாவடுதுறை ஆதீன நிலத்தில் குடியிருப்போர் குத்தகை உரிமம் பெற்று தங்களது சொந்த உழைப்பின் மூலமும், பல லட்ச ரூபாய் செலவு செய்து வீடுகள் அமைத்து மின் இணைப்புகள் பெற்றும், ஆண்டாண்டு காலமாக குடியிருந்தும் வருகிறார்கள்.

    இதுபோல் விவசாயிகள் ஆதீனத்திலிருந்து குத்தகை உரிமம் பெற்று நிலத்தை தங்களது சொந்த உழைப்பின் மூலமும், பல லட்ச ரூபாய் செலவில் சீரமைத்து, சமப்படுத்தி, திறந்தவெளி கிணறு, ஆழ்துளை கிணறு அமைத்து மின் இணைப்பு பெற்று விவசாயம் செய்து வருகிறார்கள்.

    இவ்வாறு குத்தகை பெற்று அனுபவித்து வருபவர்கள் காலம் சென்று விட்டால் அவர்களது வாரிசுதாரர் யாரேனும் ஒருவர் குடியிருப்புகளில் குடியிருந்து வருவார், நிலங்களில் விவசாயம் செய்து வருவார்.

    இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று தவறாக எடுத்துக் கொண்டு சிலர் அப்புறப்படுத்தியும், அப்புறப்படுத்த முயற்சித்தும், அவர்கள் குத்தகை செலுத்த முயன் றாலும் அவர்களுக்கு குத்தகைக்கு கொடுக்கா மலும், மாவட்ட கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரி களின் கவனத்திற்கு தெரியபடுத்தாமலும், தன்னிச்சையாக செயல்பட்டு பிற நபர்களுக்கு குடியிருப்பு நிலங்களையும், விவசாய நிலங்களையும் மேற்படி நபர்கள் கூட்டாக பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ரூ. ஆயிரத்துக்கு மட்டும் ரசீது கொடுத்து விட்டு குடியிருப்போர்களையும், விவசாயிகளையும் அப்புறப்படுத்தி வருவதாக என்னிடம் பலபேர் எழுத்துபூர்வமாக புகார் கொடுத்துள்ளனர்.

    நடவடிக்கை எடுக்க வேண்டும்

    அவ்வாறு அனுபவத்தில் இருப்பவர்களை அப்புறப்படுத்தியிருந்தால் மீண்டும் அதே குடியிருப்புகளிலும், அதே விவசாய நிலத்திலும் மீண்டும் அனுமதிக்க வேண்டுவதோடு, சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் மேற்படி நபர்கள் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அதுபோல் அவர்களது வாரிசுதாரர்களுக்கும், அனுபவத்தில் இருந்தவர் களுக்கும் திருவாவடுதுறை ஆதீனமும், மாவட்ட வருவாய்த்துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து வெளிப் படை யாக அறிவித்து குத்தகையை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.

    விதிகளுக்கு உட்பட்டு

    மேலும் எனது தலைமை யிலும், சேரன்மகாதேவி உதவி கலெக்டர் முன்னிலையிலும் கடந்த 24.12.2022 அன்று ராதாபுரம் தாசில்தார் அலுவலகத்தில் வைத்து நடந்த சமாதானக் கூட்டத்தில் எடுத்த முடிவுபடி தற்போது நிலம் அல்லது வீடு யார் அனுபவத்தில் உள்ளதோ அவர்களுக்கு மேற்படி நிலங்களை முறையான விசாரணையின் படி அரசு விதிகளுக்கு உட்பட்டு குத்தகை வழங்க வேண்டும்.

    நிலங்களின் நிலை எவ்வாறு உள்ளதோ அதே நிலை தொடர வேண்டுமென முடிவு செய்யப் பட்டதை செயல் படுத்த வேண்டுகிறேன்.மேற்படி விஷயங்களில் மாவட்ட நிர்வாகம் தனிக் கவனம் செலுத்தி மேற்படி கிராமங்களில் வாழ்கின்ற குடியிருப்போர்களுக்கும், விவசாயிகளுக்கும் அவர் களது வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் அளிப்பதோடு, இந்த அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் இருக்கின்ற நன்மதிப்புக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து சீலாத்திகுளம் செல்லக்கூடிய சாலை 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
    • ராதாபுரம் தாலுகா அலுவலகம் அருகில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து சீலாத்திகுளம் செல்லக்கூடிய சாலை 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது. சீலாத்திகுளம் பகுதிகளில் கல்குவாரிகள் அதிக அளவில் இயங்கி வருவதால் இந்த சாலை வழியாக அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக சென்று வருகிறது. இதனால் ராதாபுரம் தாலுகா அலுவலகம் அருகில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் இந்த சாலை வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போது இரவு நேரங்களில் செல்லக்கூடிய வெளியூர் வாகனங்கள் சாலைகளில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகிறது. ஆகவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சேதம் அடைந்த சாலையை செப்பனிட வேண்டுமென ராதாபுரம் பாரதீய ஜனதா கட்சியின் தெற்கு ஒன்றிய ஊடகப்பிரிவு தலைவர் ராதை காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • நெல்லை மாவட்டத்தில் வறட்சி பகுதியான ராதாபுரம் தாலுகா பகுதிகளில் வேலிகள் மற்றும் சாலை யோர பகுதிகளில் பல்வேறு காட்டுச் செடிகள் இயற்கையாகவே வளர்வதுண்டு.
    • இவற்றில் ஒரு சில செடி வகைகள் அருகிலுள்ள மரங்களை பாதுகாப்பாக பற்றிக் கொண்டு வளர்கின்றன.

    பணகுடி:

    நெல்லை மாவட்டத்தில் வறட்சி பகுதியான ராதா புரம் தாலுகா பகுதிகளில் வேலிகள் மற்றும் சாலை யோர பகுதி களில் பல்வேறு காட்டுச் செடிகள் இயற்கை யாகவே வளர்வதுண்டு.

    செங்காந்தாள் மலர்கள்

    இவற்றில் ஒரு சில செடி வகைகள் அருகிலுள்ள மரங்களை பாதுகாப்பாக பற்றிக் கொண்டு வளர்கி ன்றன. ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாதத்தில் மட்டுமே பூக்கும் செங்காந்தாள் மலர்கள் கார்த்திகை பூ என்று அழைக்கப்படுவதுடன், தமிழக மாநில மலர் என போற்றப்படுகிறது.

    இப்பூக்கள் புற்றுநோய்க்கு மருந்தாக இருப்பது முக்கியத்துவமாகும். அரியவகை மூலிகை செடி யாகவும் கருதப்படுகிறது. தற்போது ராதாபுரம் தாலுகா பகுதிகளில் பணகுடி, கூடங்குளம், வடக்கன்குளம், பழவூர், சமூகரெங்கபுரம், பணகுடி உட்பட பல்வேறு கிராமப்புற சாலைகளில் செங்காந்தாள் மலர்கள் பூத்துள்ளன.

    ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் இந்த மலர்களை அரசு தொடர் நடவடிக்கையின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது பல்வேறு சமூக அமைப்பு களின் வேண்டுகோளாக இருக்கிறது.

    தற்போது மேற்கு மலைத்தொடர்ச்சி பகுதி யான பணகுடி பகுதிகளில் செங்காந்தாள் மலர்கள் அதிகமான அளவில் பூத்துள்ளன. மருத்துவ குணம் கொண்ட செங்காந்தாள் செடிகளை முறையாக வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ராதாபுரம் தாலுகா இளைய நைனார் குளத்தில் இசக்கி முத்து என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது.
    • மின்மோட்டாரை சரி செய்துவிட்டு கிணற்றில் இருந்து கயிறு வழியே மேலே ஏறி வரும் பொழுது கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்தார்.

    வள்ளியூர்:

    ராதாபுரம் தாலுகா இளைய நைனார் குளத்தில் இசக்கி முத்து என்பவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்கு மின்மோட்டார் பழுது ஏற்பட்டது. அதனை சரி செய்வதற்காக அவரது மகன் செல்வராஜ் (வயது30) 90 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கினார்.

    மின்மோட்டாரை சரி செய்துவிட்டு கிணற்றில் இருந்து கயிறு வழியே மேலே ஏறி வரும் பொழுது கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்தார். உடனே பக்கத்தில் இருக்கிறவர்கள் பார்த்து வள்ளியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் உடனே வந்து கிணற்றுக்குள் இறங்கி செல்வராஜ்யை கயிறுகட்டிஉயிருடன் மீட்டனர். சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • அரசின் ஆவின் நிறுவனத்தில் இருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பாக்கெட் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
    • ராதாபுரம் வட்டார பகுதிகளான பணகுடி, வள்ளியூர், வடக்கன்குளம் உட்பட பல இடங்களுக்கு நாள்தோறும் பால் விநியோகம் செய்யப்படுவது நடைமுறையில் இருக்கிறது.

    பணகுடி:

    நெல்லையில் இயங்கி வரும் அரசின் ஆவின் நிறுவனத்தில் இருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பாக்கெட் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    ராதாபுரம் வட்டார பகுதிகளான பணகுடி, வள்ளியூர், வடக்கன்குளம் உட்பட பல இடங்களுக்கு நாள்தோறும் பால் விநியோகம் செய்யப்படுவது நடைமுறையில் இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக இங்கு ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கப்பெறாமல் பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.

    ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலிற்கு குறைந்தபட்ச தொகை வழங்குவதாக கூறப்படுகிறது. இக்காரணத்தை முன்வைத்து கறவை மாடுகள் வளர்ப்போர் தனியாருக்கு பாலை விற்பனை செய்கின்றனர். இதன் எதிரொலியாக ஆவின் நிறுவனத்தில் பால் கொள்முதல் வெகுவாக குறைந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர் .

    திசையன்விளை:

    ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர் .

    இந்த கூட்டத்தில் கிராம பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் பல்வேறு திட்டங்களின் கீழ் அடிக்கல் நாட்டப்பட்டு நடைபெற்று வரும் பணிகள் குறித்து மற்றும் அவற்றின் நிலை குறித்தும் ஆலோசிக்கபட்டது. மேலும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவைகள் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

    குடிநீர் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், ராஜா,ஞான சர்மிளா கெனிஸ்டன்,படையப்பா முருகன், இசக்கி பாபு, ஆவுடைபாலன், அரிமுத்தரசு,காந்திமதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சற்குணராஜ்,சேகர்,பைக் முருகன்,பொன் மீனாட்சி அரவிந்தன்,வைகுண்டம் பொன் இசக்கி,அருள்,பேபி முருகன், முருகேசன், முருகன், ராதிகா சரவண குமார்,வாழ வந்த கணபதி பாலசுப்ரமணியம், சூசை ரத்தினம்,மணிகண்டன், ஆனந்த்,சாந்தா மகேஷ்வரன்,வின்சி மணியரசு, வளர்மதி, சந்தனமாரி, சகாயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் தங்கள் கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ள வேண்டிய நலத்திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசனை நடத்தபட்டது.

    • நாங்குநேரி, திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 248 குடியிருப்புக்கான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • இந்த திட்டம் தொடங்கி 20 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் 80 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 45 ஒப்பந்த பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு, பா.ஜனதா ராதாபுரம் தெற்கு ஒன்றிய ஊடக பிரிவு தலைவர் காமராஜ் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    பற்றாக்குறை

    நாங்குநேரி, திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 248 குடியிருப்புக்கான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நெல்லை தாமிரபரணியில் தொடங்கி இந்த திட்டம் பத்தமடை, சிங்கிகுளம், ராதாபுரம், வடக்கன்குளம் ,ஆவரைகுளம், நாங்குநேரி, திசையன்விளை பேரூராட்சி உட்பட 15 நீரேற்றும் நிலையங்களை கொண்டுள்ளது.

    ஒரு நீரேற்று நிலையத்திற்கு எலக்ட்ரீசியன், காவலாளி, ஆபரேட்டர்கள் பணியாற்ற வேண்டும். இந்த திட்டம் தொடங்கி 20 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் 80 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 45 ஒப்பந்த பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ரூ.7 ஆயிரம் மட்டுமே சம்பளமாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

    குடிநீர் வினியோகம் பாதிப்பு

    சமீபத்தில் ஒப்பந்தம் எடுத்த ஒரு நிறுவனம் 45 பணியாளர்கள் இருந்த இடத்தில் 15 பணியாளர்களாக குறைத்துவிட்டது. இதனால் பல பகுதிகளில் உள்ள நீரேற்று நிலையங்களில் பம்பு ஆபரேட்டர்கள் இல்லாமல் நீர் விநியோகிப்பதில் கடும் சிக்கல் நிலவி வருகிறது.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தான் இந்த திட்டத்தின் கீழ் வரக்கூடிய அனைத்து கிராமங்களுக்கும் தங்கு தடையின்றி தாமிரபரணி குடிநீர் வழங்க முடியும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் கணேசன்.
    • இவர் ராதாபுரத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார்

    பணகுடி:

    ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் ராதாபுரத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.நேற்று இரவு இவரது கடையின் அருகே உள்ள சாலையில் ஒரு பணப்பை கிடந்தது.

    அதை பார்த்த கணேசன் பணத்தை எடுத்து கொண்டு ராதாபுரம் போலீஸ் நிலையம் சென்றார். அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகத்திடம் அந்த பையை வழங்கினார். அதை பெற்று கொண்ட சப்-இன்ஸ்பெக்டர், மெக்கானிக்கின் நேர்மையை பாராட்டி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

    • குளத்தின் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
    • குளம் அருகே ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சமன் செய்யும் பணி நடந்து வருகிறது.

    பணகுடி:

    ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட உதயத்தூர் கிராமத்தில் ஆத்துகுறிச்சி குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 42 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    புதிய கல்குவாரி

    இந்த குளம் ராதாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. குளத்தின் மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அந்த குளத்தின் அருகே தனியார் நிறுவனம் ஒன்று கல்குவாரி அமைக்க அரசிடம் மனு அளித்துள்ளது.

    இந்த பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வரும் நிலையில், குளம் அருகே ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் சமன் செய்யும் பணி நடந்து வருகிறது.

    விவசாயிகள் எதிர்ப்பு

    இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதோடு அவர்களுடைய குடும்பம் ஏழ்மை நிலைக்கு தள்ளப்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.

    எனவே ராதாபுரம் தொகுதிக்கு நீர் ஆதாரமாக திகழும் ஆத்துகுறிச்சி குளத்தில் கல்குவாரி அமைக்க கூடாது என்று பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
    • முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இட்டேரி பகுதியை சேர்ந்தவர் ஐகோர்ட் மகாராஜா(52). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் 350 அடி நீளமுள்ள காப்பர் வயரை கொண்டு சென்றுள்ளார்.

    நெல்லை,:

    ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராக்கள், மின்மோட்டார்கள், காப்பர் வயர்கள் உள்ளிட்டவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

    இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் மேலாளரான குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்த அனித்(வயது 29) அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    முன்னீர்பள்ளம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இட்டேரி பகுதியை சேர்ந்தவர் ஐகோர்ட் மகாராஜா(52). இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் 350 அடி நீளமுள்ள காப்பர் வயரை கொண்டு சென்றுள்ளார்.

    தாமரைசெல்வி-ரெட்டியார்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வயலுக்கு சென்ற அவர் திரும்பி வந்து பார்த்தபோது வயரை காணவில்லை.

    ரூ.15 ஆயிரம் மதிப்பிலான வயரை திருடிச்சென்ற மர்ம நபர் குறித்து அவர் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

    • நெல்லையை அடுத்த அடைமிதிப்பான்குளத்தில் நடந்த கல்குவாரி விபத்துக்கு பிறகு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
    • அரசு விதிகளை மீறி அதிக அளவில் கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்ட குவாரிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அதிரடியாக மூட உத்தரவிட்டார்.

    பணகுடி:

    நெல்லையை அடுத்த அடைமிதிப்பான்குளத்தில் நடந்த கல்குவாரி விபத்துக்கு பிறகு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

    இதில் அரசு விதிகளை மீறி அதிக அளவில் கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்ட குவாரிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அதிரடியாக மூட உத்தரவிட்டார்.

    கடந்த 2 மாதங்களாக மாவட்டத்தில் உள்ள 54 குவாரிகளும் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ராதாபுரம் பகுதியில் உள்ள சில கல்குவாரிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் கனிமவள கொள்ளை நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆவரைகுளம் பகுதியில் உள்ள குவாரிகளில் இருந்து இரவு நேரத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு எடுத்து செல்லப்படுவது அந்த பகுதியில் உள்ள ஒரு சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகி உள்ளது.

    அந்த காட்சி பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான குவாரிகள் அரசியல் பிரமுகர்களுக்கு சொந்தமானதாக இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    ×