search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் ராதாபுரம்-சீலாத்திகுளம் சாலை- செப்பனிட பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை
    X

    குண்டும் குழியுமான சாலையை படத்தில் காணலாம்

    குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் ராதாபுரம்-சீலாத்திகுளம் சாலை- செப்பனிட பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை

    • நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து சீலாத்திகுளம் செல்லக்கூடிய சாலை 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
    • ராதாபுரம் தாலுகா அலுவலகம் அருகில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து சீலாத்திகுளம் செல்லக்கூடிய சாலை 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது. சீலாத்திகுளம் பகுதிகளில் கல்குவாரிகள் அதிக அளவில் இயங்கி வருவதால் இந்த சாலை வழியாக அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக சென்று வருகிறது. இதனால் ராதாபுரம் தாலுகா அலுவலகம் அருகில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் இந்த சாலை வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போது இரவு நேரங்களில் செல்லக்கூடிய வெளியூர் வாகனங்கள் சாலைகளில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகிறது. ஆகவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சேதம் அடைந்த சாலையை செப்பனிட வேண்டுமென ராதாபுரம் பாரதீய ஜனதா கட்சியின் தெற்கு ஒன்றிய ஊடகப்பிரிவு தலைவர் ராதை காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×