search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Radhapuram"

    • தமிழகத்தில் 11 மாநகராட்சியில் பெண்கள் மேயர்களாக உள்ளனர்.
    • ராதாபுரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் வகுப்பறை, வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை என பல்லாயிரம் கோடிக்கான திட்டங்களை 20 மாதங்களில் வழங்கியுள்ளார்.

    வள்ளியூர்:

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நெல்லை கிழக்கு மாவட்டம் ராதாபுரம் மேற்கு ஒன்றியம் ராதாபுரத்தில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நெல்லை மாவட்ட ஊராட்சி தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட அவைத் தலைவர் ம.கிரகாம்பெல், பேரூர் செயலாளர்கள் ஜான்கென்னடி, சேதுராம லிங்கம், தமிழ் வாணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜாண்ரூபா கிங்ஸ்டன், ராதாபுரம் ஊராட்சிமன்ற தலைவர்கள் கூட்டமைப்புத் தலைவர் அனிதாபிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப்பெல்சி வரவேற்று பேசினார். தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், தமிழ்நாடு பாட நூல் கழகதலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்புரையாற்றி 1500 பேருக்கு நலத்திட்ட உதவி களை வழங்கினார்.

    அவர் பேசியதாவது:- பெண்ணுரிமை காக்கின்ற முதல்- அமைச்சராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திகழ்கிறார். பெண்ணுரிமை காக்கும் திராவிட மாடல் ஆட்சியை முதல்-அமைச்சர் நடத்து கிறார்.

    பெண்களுக்கு உள்ளாட்சியில் 50 சதவிகிதம் வழங்கி உள்ளார். இதனால் தமிழகத்தில் இன்று 11 மாநகராட்சியில் மேயர்களாக பெண்கள் உள்ளனர்.

    மேலும் நமது முதல்- அமைச்சர் ராதாபுரம் தொகுதியில் சர்வதேச தரத்தில் ஒரு விளையாட்ட ரங்கம், ரூ.3 கோடியில் ராதா புரத்தில் மினி ஸ்டேடியம், ரூ.605 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம், ராதா புரத்தில் அனைத்து பள்ளி களுக்கும் ஸ்மார்ட் வகுப்பறை, வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை என பல்லாயிரம் கோடிக்கான திட்டங்களை 20 மாதங்களில் வழங்கியுள்ளார்.

    இவற்றை எல்லாம் ராதா புரம் சட்டப் பேரவை உறுப்பி னரும், சபாநாய கருமான மு.அப்பாவு தனது முயற்சி யால் பெற்றுத் தந்து கொண்டி ருக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ். தங்க பாண்டியன், போர்வெல்கணேசன், ஆரோக்கிய எட்வின், பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவ அய்யப்பன், கனகராஜ், எட்வின் வளனரசு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் பாஸ்கர், சாந்திசுயம்புராஜ், சாலமோன் டேவிட், இளைஞரணி ஜாண் ரபீந்தர், திசையன்விளை பேரூராட்சி உறுப்பினர்கள் கண்ணன், நடேஷ் அரவிந்த், ஒன்றியகுழு உறுப்பினர்கள் பரிமளம், நடராஜன், மெர்லின், இசக்கிபாபு, அனிதா ஸ்டெல்லா, ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், அந்தோணி அருள், முருகேசன், கந்தசாமி, மணி கண்டன், வைகுண்டம் பொன் இசக்கி, கு.முருகன், சாகய பெபின்ராஜ், பஞ்சவர்ணம் ஜெயக்குமார், ஆ.முருகன், வி.எஸ்.முருகன், சூசைரத்தினம், சாந்தா மகேஷ்வரன், ஜேய்கர், ராதிகா சரவணகுமார் மற்றும் கிளை செயலாளர்கள், ஒன்றிய பிரதிநிதி கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்திற்கான ஏற்பாடு களை ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி செய்திருத்தார்.

    அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவிப்பு

    பணகுடியில் தி.மு.க. சார்பில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் கிரகாம்பெல் தலைமையில் நடைபெற்றது. விழாவில் அலங்கரிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    விழாவை முன்னிட்டு பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பணகுடி அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் பணகுடி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, துணைத்தலைவர் சகாய புஷ்பராஜ், வள்ளியூர் ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் எஸ்.ஏ.வி பள்ளி தாளாளர் திவாகரன், மணி, அலீம், ஆனந்தி, ஆசா, ஹரிதாஸ், முத்துராமன், வெள்ளைச்சாமி, மாணிக்கம், அசோக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பங்கு பெற்ற வர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    • ராதாபுரத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) குறித்து பொதுமக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    • நீதிபதி ஆனந்த் மற்றும் வக்கீல்கள் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வள்ளியூர்:

    ராதாபுரத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) குறித்து பொது மக்களிடையே நீதிபதி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தரப்பி னர் முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலை யில் பேசி சுமூகமான தீர்வு ஏற்படுத்தும் விதமாக லோக் அதாலத் மூலம் வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது.

    இதனை பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் மற்றும் வக்கீல்கள் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், பயணிகள் மற்றும் வியாபாரிகளிடம் விழிப்பு ணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    அதில் லோக் அதலாத் வாயிலாக வழக்குகளுக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டால் முழு கோர்ட்டு கட்டணத்தை திரும்ப பெறுவதுடன், பிரச்சினைகளை விரைவாக கையாண்டு, கட்டணம் இல்லாமல் தீர்வுகளை பெற முடியும். சமரச மையத்தில் நடக்கும் அனைத்து பேச்சு வார்த்தைகள் எந்த வகையிலும் பதிவு செய்யப்படுவதில்லை. மேலும் பேச்சு வார்த்தைகள் ஒருவருக்கு எதிராக சாட்சி யங்களாக பயன்படுத்து வதில்லை. எளிய முறையில் துரிதமாகவும், பணம் விரயமின்றியும் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு தீர்வுகளை பெறுவதற்கு சமரசம் உதவுகிறது. இதனால் சமரசத்தில் இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற நிலைப்பாடு ஏற்படும்.

    மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது என்பதால் இதற்கு மேல் முறையீடு கிடை யாது என்பது போன்ற விழிப்புணர்வு மேற் கொள்ளப்பட்டது.

    • தடுமாறி விழுந்த அந்த பெண் மீது லாரி டயர் ஏறியது.
    • உயிரிழந்த பெண் ரம்மதபுரத்தை சேர்ந்த மாதவி என்பது விசாரணையில் தெரியவந்தது.

    நெல்லை:

    ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தில் இருந்து முடவன்குளத்திற்கு செல்லும் சாலையில் இன்று காலை கனரக வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. எதிரே ஒரு பெண் மொபட்டில் வந்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்க டயரில் மொபட் சிக்கியது.

    இதில் தடுமாறி விழுந்த அந்த பெண் மீது லாரி டயர் ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே அந்த பெண் ரத்த வெள்ளத்தில் பலியானார். உடனே லாரி டிரைவர் அங்கேயே லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

    தகவல் அறிந்த ராதாபுரம் போலீசார் அங்கு விரைந்த சென்றனர். விபத்தில் சிக்கி இறந்த பெண் யார் என்று விசாரணை நடத்தியதில், அவர் திசையன்விளை அருகே உள்ள ரம்மதபுரத்தை சேர்ந்த மாதவி(வயது 45) என்பதும், அவர் தெற்கு கள்ளிகுளம் அருகே ஆறுபுளியில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ராதாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

    • உஷா வீட்டில் பல்லவிளையை சேர்ந்த ஜெயா வேலைப்பார்த்து வந்தார்.
    • கடந்த மாதமே ஜெயா உள்ளிட்டவர்கள் கொள்ளையில் ஈடுபட முயன்றுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சிவசுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் அருள்மிக்கேல். இவரது மனைவி உஷா (வயது 68).

    கொலை - கொள்ளை

    கணவர் இறந்ததால் தனியாக வசித்து வந்த உஷா வீட்டில் பல்லவிளை பகுதியை சேர்ந்த ஜெயா என்பவர் பணிப்பெண்ணாக வேலைப்பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று ஜெயாவின் மகன் ரஞ்சித் (18), அவரது உறவுக்கார சிறுவன் ஒருவன் ஆகிய 2 பேர் சேர்ந்து உஷாவை கொலை செய்து அவரிடமிருந்த 11 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். போலீஸ் விசாரணையில் 2 பேரும் புதிய மோட்டார் சைக்கிள் வாங்குதற்காக உஷாவை கொலை செய்து நகையை கொள்ளையடித்து தெரியவந்தது.

    பணிப்பெண் சிக்கினான்

    இதையடுத்து ரஞ்சித், சிறுவன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக அவர்களின் உறவினர்களான உதயபிரகாஷ், அவரது மனைவி சுபா ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

    இந்நிலையில் பணிப்பெண் ஜெயாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. உஷா வீட்டில் நடப்பதை நோட்டமிட்டு ஜெயா அவரது மகன் ரஞ்சித் மற்றும் கொலையில் ஈடுபட்ட சிறுவனிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

    1 மாதத்திற்கு முன்பே திட்டம்

    இதன்படியே சம்பவத்தன்று அவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடந்த மாதமே ஜெயா மற்றும் அவரது மகன் உள்ளிட்டவர்கள் கொள்ளையில் ஈடுபட முயன்றுள்ளனர். இதற்காக ஜெயா வீட்டில் துப்புரவு பணி செய்த போது அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராக்களின் வயர்களை துண்டித்துள்ளார். ஆனால் திடீரென உஷாவின் வீட்டிற்கு உறவினர்கள் வந்ததால் கொள்ளையடிக்கும் திட்டம் நிறைவேறவில்லை.

    இதற்கிடையே தங்களது வீட்டில் சி.சி.டி.வி. வயர்கள் துண்டிக்கப்பட்டது குறித்து தகவலறிந்து வெளிநாட்டில் வசித்து வரும் உஷாவின் மகன் போலீசில் புகார் செய்தார். அப்போது பணிப்பெண் ஜெயா மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

    2 பேர் கைது

    இந்நிலையில் ஜெயா உள்ளிட்டவர்கள் ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வீட்டை நோட்டமிடுவதற்காக தனது மகன் ரஞ்சித் மற்றும் மற்றொரு சிறுவனை உஷாவின் வீட்டிற்கு கூலி வேலைக்காக பணிப்பெண் ஜெயா அழைத்து சென்று சுற்றிக்காட்டியதும் விசாரணையில் அம்பலமானது.

    இதைத்தொடர்ந்து பணிப்பெண் ஜெயா மற்றும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது உறவினரான இந்துஜூடன் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட சிறுவனின் அண்ணணான ஜான்சன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஜான்பிரிட்டோ மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகம் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் தேடி வருகிறார்கள்.

    • நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
    • முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ராதாபுரம் யூனியனுக்கு வழங்கப்படும் நிதி மிகவும் குறைவாக உள்ளது .எனவே அந்த நிதியை அதிகரித்து வழங்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

    அதில், ''ராதாபுரம் பஞ்சாயத்து யூனியனில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி வழங்கிட வேண்டும். முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ராதாபுரம் யூனியனுக்கு வழங்கப்படும் நிதி மிகவும் குறைவாக உள்ளது.

    எனவே அந்த நிதியை அதிகரித்து வழங்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அலெக்ஸ் அப்பாவு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்ய ப்பன், கனகராஜ், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், கல்லிடைக்குறிச்சி பேரூர் செயலாளர் இசக்கி பாண்டியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர்.ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ராதாபுரம் அருகே உள்ள இருக்கன்துறையில் முத்தாரம்மன்கோவில் உள்ளது.
    • இந்த கோவிலின் உபயதாரராக அதே ஊரை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் தங்கசாமி(வயது 30) இருந்து வருகிறார்.

    நெல்லை:

    ராதாபுரம் அருகே உள்ள இருக்கன்துறையில் முத்தாரம்மன்கோவில் உள்ளது. இந்த கோவிலின் உபயதாரராக அதே ஊரை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரது மகன் தங்கசாமி(வயது 30) இருந்து வருகிறார்.

    இவர் கடந்த 17-ந்தேதி கோவிலில் பூஜை முடிந்த பின்னர் கோவிலை பூட்டிவிட்டு வீடு திரும்பிவிட்டார். அதன்பின்னர் நேற்று காலை கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது அங்குள்ள உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5 ஆயிரம் திருட்டு போயிருந்தது.

    மேலும் கோவில் கருவறையில் வைக்கப்பட்டு இருந்த 5 பவுன் தங்கநகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக தங்கசாமி பழவூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • புனித ஆகத்தம்மாள் ஆலயம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • புனித ஆகத்தம்மாள் சப்பரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பணகுடி:

    ராதாபுரம் அருகே ரம்மதபுரம் புனித ஆகத்தம்மாள் ஆலயம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றாலயமாகும்.

    இங்கு ஆண்டுதோறும் 2 நாட்கள் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா மாலை ஆராதனை அருட்தந்தை இருதயசாமி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு புனித ஆகத்தம்மாள் ரத வீதிகளில் சப்பரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் பக்தர்கள் நேர்த்தி கடனாக உப்பு, மிளகு தூவியும் வழிபட்டனர். நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.விழா ஏற்பாடுகளை பங்குதந்தை ஸ்டார்லின் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    • ராதாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் திசையன்விளையை அடுத்த அப்புவிளைமாளவியா வித்யாகேந்திர பள்ளியில் நடந்தது.
    • ராதாபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 43 கிளைகளிலும் பூத் கமிட்டி அமைத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் வடக்கு ஒன்றிய பா.ஜனதா செயற்குழு கூட்டம் திசையன்விளையை அடுத்த அப்புவிளைமாளவியா வித்யாகேந்திர பள்ளியில் நடந்தது. வடக்கு ஒன்றியதலைவர் சக்திவேல்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்சாமி, திசையன்விளை பேரூராட்சி பா.ஜனதா கவுன்சிலர் லிவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் ஆனந்த பாண்டி வரவேற்று பேசினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் கட்டளை ஜோதி, மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் விவேகானந்தன், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கோபால் மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ராதாபுரம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள 43 கிளைகளிலும் தலா 15 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திசையன்விளைவாரச்சந்தை வளாகத்தில் நவீன முறையில் கட்டப்பட உள்ள வணிக வளாகத்தில் ஏற்கனவே அங்கு கடை வைத்து உள்ளவர்களுக்கு தலா ஒரு கடை மட்டும் வழங்க பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • ராதாபுரம் அருகே உள்ள தனக்கர்குளம் கிராமத்தில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது.
    • தனியாருக்கு சொந்தமான ஒரு காற்றா லையில் மர்மநபர்கள் சிலர் புகுந்து அங்கிருந்த காப்பர் வயர்களை திருடிச்சென்றனர்

    நெல்லை:

    ராதாபுரம் அருகே உள்ள தனக்கர்குளம் கிராமத்தில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் தனியாருக்கு சொந்தமான ஒரு காற்றா லையில் மர்மநபர்கள் சிலர் புகுந்து அங்கிருந்த காப்பர் வயர்களை திருடிச்சென்றனர்.

    இதுதொடர்பாக காற்றாலை நிறுவன மேலாளர் ஆறுமுகம் என்பவர் ராதாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காற்றாலையில் ெபாருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து பார்த்தனர். அதில் 3 வாலிபர்கள் இரவு நேரத்தில் காற்றாலைக்குள் புகுந்த காட்சி பதிவாகி உள்ளது. அதனை வைத்து போலீசார் மர்மநபர்களை தேடிவருகின்றனர்.

    • புத்தேரி என்னும் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது.
    • போராட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈடுபட்டனர்.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரம் இருக்கன்துறை ஊராட்சி புத்தேரி என்னும் கிராமத்தில் அரசு அனுமதி பெற்ற தனியாருக்கு சொந்தமான கல்குவாரி அமைந்துள்ளது.

    கல்குவாரி

    இதில் நேற்று முன்தினம் கல்குவாரியில் கற்களை தகர்க்க சக்தி வாய்ந்த வெடிப்பொருட்களை பயன்படுத்தியதாக தெரிகிறது.

    இதனால் அந்தப் பகுதியில் பயங்கர சத்தத்துடன் கற்கள் வெடித்து சிதறியதில் சுடலை மற்றும் இசக்கியப்பன் என்பவரது வீட்டின் மேற்கூறையும் மற்றும் வீட்டின் பக்கவாட்டின் சிமெண்ட் பூச்சிகள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

    வாழைகள சேதம்

    மேலும் கல் குவாரிகளில் வெடித்து சிதறிய கற்கள் விவசாயிகள் பயிரிட்ட வாழைகள் மீது விழுந்துள்ளது. இதனால் வாழை பயிர்களும் சேதம் அடைந்துள்ளது.

    இதையறிந்த ஊர் பொதுமக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஊரின் மையப் பகுதியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கஞ்சி காட்சியும் போராட்டம் நடத்தினர். நேற்று இரவு விடிய, விடிய நடைபெற்ற போராட்டம் இன்றும் தொடர்கிறது.

    சம்பவ இடத்திற்கு பாரதீய ஜனதா மாவட்ட பொருளாளர் செட்டிகுளம் பாலகிருஷ்ணன் சென்று ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில், புத்தேரியில் கல் குவாரி அமைக்க ஆரம்பத்தில் இருந்து பாரதீய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

    போலீஸ் குவிப்பு

    கல்குவாரியால் இவ்வளவு விளைவுகள் நடந்த பின்பும் அதிகாரிகள் பொதுமக்களை வந்து சந்திக்கவில்லை. கல்குவாரியை மூடவில்லை என்றால் பொதுமக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

    இதனால் புத்தேரி கிராமத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • நாகேந்திரன் குடும்பத்துடன் குலசை கோவிலுக்கு சென்றுள்ளார்.
    • ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் நல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆதிச்சை பிள்ளை மகன் நாகேந்திரன் (வயது 48).

    பாலத்தில் மோதி கவிழ்ந்தது

    ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 18-ந் தேதி குடும்பத்துடன் குலசை கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் சாமி கும்பிட்டு விட்டு மதியம் ஆட்டோவில் ஊருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

    ராதாபுரம் அருகே உள்ள பெத்தரங்கபுரம் ஊருக்கு கிழக்கே உள்ள பாலத்தில் சென்றபோது ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர பாலத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் நாகேந்திரன் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தார். அவரது குடும்பத்தினர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதனிடையே அந்த வழியாக சென்றவர்கள் விபத்து நடந்ததை பார்த்து ராதாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகேந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை நாகேந்திரன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ராதாபுரம் தாலுகா தனக்கார்குளம் பஞ்சாயத்து கோலியான் குளத்தில் பாரம்பரியமிக்க இயற்கை விவசாய பயிற்சி கண்காட்சி நடந்தது.
    • இயற்கை உணவு தயாரிக்கும் முறை குறித்து பயிற்சியில் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

    பணகுடி:

    ராதாபுரம் தாலுகா தனக்கார்குளம் பஞ்சாயத்து கோலியான் குளத்தில் பாரம்பரியமிக்க இயற்கை விவசாய பயிற்சி கண்காட்சி நடந்தது. இதில் இயற்கை விவசாய அமைப்பினர், பசுமை இயக்கம், ராதாபுரம் வட்டார விவசாயிகள் நலச்சங்கம், ஜெய் பீம் பொதுநல இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் இணைந்து கண்காட்சியை நடத்தினர். கண்காட்சியில் இயற்கை சார்ந்த பண்டைய காலத்தில் மூதாதையர்கள் பயன்படுத்திய உணவுப் பொருட்கள், தானிய வகைகள் இடம் பெற்றிருந்தன. அரிசி ரகங்களில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, குட வாழை, காட்டு யானம், தூய மல்லி, சொர்ணம் சூரி, குதிரைவாலி, சாமை போன்ற அரிசி ரகங்களை கண்காட்சியில் பங்கு பெற்ற பொதுமக்கள் வாங்கிச் சென்றனர்.

    குறிப்பாக தானிய வகைகள், நாட்டு மருந்துகள், பழங்காலத்தில் வீடுகளில் பயன்படுத்திய உபயோகப் பொருட்கள், தேன் கலந்த பருப்பு வகைகள், செவ்வாழை பழ அல்வா போன்றவை கண்காட்சியில் வெகுவாக கவர்ந்தது. சிரட்டை, ஓலைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் வியப்படைய செய்தன. இயற்கை உணவு தயாரிக்கும் முறை குறித்து பயிற்சியில் பல விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இயற்கை வெல்லம், அவல் வகைகள், மரச்செக்கு தேங்காய் எண்ணையில் தயாரிக்க ப்பட்ட மகா தச கவ்யம் சோப்பு சோப்பு என இடம் பெற்றிருந்த பொருட்களை பொதுமக்கள் ஆவலுடன் வாங்கிச் சென்றனர்.

    முக்கிய அங்கமாக பல வகையான மரக்கன்றுகள் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்தது. மண் பாண்டங்கள், தானியங் களில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் விற்ப னையை அலங்க ரித்தது. மூலிகைகளால் தயாரான பல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் முக்கியத்துவமாக இருந்தது. பெண்கள் மத்தியில் எதை வாங்குவது என்ற குழப்பத்தில் ஆழ்ந்ததுடன் பல்வேறு வகையான உணவுப் பொருள்கள், ஓலைப் பொருட்கள் என கண்காட்சியில் இடம் பெற்றிருந்த ஏராளமான பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    ×