search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராதாபுரம் பகுதியில் குவாரிகளில் இருந்து நள்ளிரவில் கனிம வளங்கள் கடத்தல்? -சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
    X

    இரவு நேரத்தில் கனரக லாரியில் கனிம வளங்கள் கடத்தி செல்லப்படும் காட்சி.

    ராதாபுரம் பகுதியில் குவாரிகளில் இருந்து நள்ளிரவில் கனிம வளங்கள் கடத்தல்? -சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

    • நெல்லையை அடுத்த அடைமிதிப்பான்குளத்தில் நடந்த கல்குவாரி விபத்துக்கு பிறகு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளும் ஆய்வு செய்யப்பட்டன.
    • அரசு விதிகளை மீறி அதிக அளவில் கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்ட குவாரிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அதிரடியாக மூட உத்தரவிட்டார்.

    பணகுடி:

    நெல்லையை அடுத்த அடைமிதிப்பான்குளத்தில் நடந்த கல்குவாரி விபத்துக்கு பிறகு மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்குவாரிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

    இதில் அரசு விதிகளை மீறி அதிக அளவில் கனிமவளங்கள் வெட்டி எடுக்கப்பட்ட குவாரிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அதிரடியாக மூட உத்தரவிட்டார்.

    கடந்த 2 மாதங்களாக மாவட்டத்தில் உள்ள 54 குவாரிகளும் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ராதாபுரம் பகுதியில் உள்ள சில கல்குவாரிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் கனிமவள கொள்ளை நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஆவரைகுளம் பகுதியில் உள்ள குவாரிகளில் இருந்து இரவு நேரத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு எடுத்து செல்லப்படுவது அந்த பகுதியில் உள்ள ஒரு சி.சி.டி.வி. காமிராக்களில் பதிவாகி உள்ளது.

    அந்த காட்சி பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான குவாரிகள் அரசியல் பிரமுகர்களுக்கு சொந்தமானதாக இருப்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×