search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "villages"

    • கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • தடுப்பூசி குழுவினர், ஆங்காங்கே முகாம் அமைத்து இப்பணியை செய்து வருகின்றனர்.

    குடிமங்கலம்

    உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் வாயிலாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது கேரளாவில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.இதனால் மாநில எல்லையையொட்டிய தமிழக கிராமங்களில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி உடுமலை அடுத்த கோடந்தூர், தளிஞ்சி, ஈசல்தட்டு, குழிப்பட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் கால்நடைத்துறையால் கோமாரி தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் கால்நடைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறியதாவது:-

    தமிழக - கேரள மாநில எல்லையையொட்டி கிராமங்களில் கோமாரி தடுப்பூசி போடப்படுகிறது. குறிப்பாக 12,000 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தடுப்பூசி குழுவினர், ஆங்காங்கே முகாம் அமைக்கும்போது கால்நடை வளர்ப்போர் தங்களது 4 மாத வயதிற்கு மேற்பட்ட பசு மற்றும் எருமைகளுக்கு தவறாது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 4 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
    • தோட்டக்கலை உதவி இயக்குநர் சுபா வாசுகி கலந்து கொண்டு திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-24-ம் ஆண்டிற்கு கபாலிபாறை, ரெங்கசமுத்திரம், அத்தாளநல்லூர், சங்கன்திரடு ஆகிய 4 கிராம பஞ்சாயத்துக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    இதனையொட்டி இந்த பஞ்சாயத்துக்களில் அனைத்து துறையின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்திட கிராம திட்ட செயலாக்க குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தோட்டக்கலை உதவி இயக்குநர் சுபா வாசுகி கலந்து கொண்டு தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். கூட்டத்தில் வேளாண்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை மற்றும் மீன்வளத்துறை அலுவலர்கள், சங்கன் திரடு ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகளின் கருத்துக்கள், கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

    • தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் வினியோகம் குறித்து விளக்கினர்.
    • அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

    உடுமலை :

    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிமங்கலம் வட்டாரத்தில் ஆமந்தகடவு, கொங்கல்நகரம், சோமவாரபட்டி, பண்ணைக்கிணறு, கொசவம்பாளையம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இக்கிராமங்களில் ஊராட்சி தலைவர்கள், வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, பட்டு வளர்ச்சி, கால்நடை, வருவாய், ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

    குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, திட்டத்தின் நோக்கம், வேளாண் துறை சார்பில் தரிசு நில மேம்பாடு, உபகரணங்கள் மானிய விலையில் வழங்குதல், தென்னங்கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் வினியோகம் குறித்து விளக்கினர்.

    கிராமங்களுக்கு தேவையான தடுப்பணை, குட்டைகள், சமுதாய உறிஞ்சு குழிகள், ரோட்டோர மரக்கன்று நடுதல், வண்டிப்பாதை, மண் சாலை அமைத்தல், உலர் களம், தானிய கிடங்கு கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

    சிறு, குறு விவசாயிகளுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பண்ணை குட்டை, வட்டப்பாத்தி அமைத்தல், வரப்பு அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.திட்ட கிராமங்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள், ஆமந்தகடவு - கோதண்டபாணி, கொங்கல்நகரம் -- செந்தில்குமார், சோமவாரபட்டி - ஜெயலட்சுமி, பண்ணைக்கிணறு - அசாருதீன், கொசவம்பாளையம் - கார்த்திக் ஆகியோர் நியமிக்கப்பட்டு கிராம அளவிலான கூட்டங்கள் நடத்தப்பட்டது.

    • ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1.5 கோடிக்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
    • ரூ.4 கோடி வரையில் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் வழங்கப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் இன்று மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலை வர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமை தாங்கி னார். செயலர் சுப்பிர மணியன் முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து மாவட்ட பஞ்சாயத்து சார்பில் செய்யப்பட்டுள்ள பணிகள், வரவு-செலவு உள்ளிட்ட அறிக்கை வாசிக்கப்பட்டது. பின்னர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பேசியதாவது:-

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1.5 கோடிக்கு ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.4 கோடி வரையில் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் வழங்கப்பட உள்ளது. அந்த தொகையை வைத்து கவுன்சிலர்கள் தங்களது பகுதிக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளை தேர்வு செய்து அங்கு அத்தியாவசிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதியை செலவு செய்யலாம்.

    அனைத்து கவுன்சி லர்களும் தங்களது பகுதிக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் முக்கிய தேவைகள் குறித்து தேர்வு செய்து அதற்கான ஆவணங்களை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் 10 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.

    தற்போது நெல்லை மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யாத காரணத்தினால் வறட்சி ஏற்படும் நிலை உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும். எனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை குடிதண்ணீருக்கு முக்கியத்துவம் அளித்து ஆழ்துளை கிணறு அமைத்தல், மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்தல், குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    மாவட்டம் முழுவதும் உள்ள 204 பஞ்சாயத்துகளில் குறிப்பிட்ட வறட்சி கிராமங்களை தேர்வு செய்து 50 ஆழ்துளை கிணறுகள் வரை அமைக்க வேண்டும். மேலும் நெல்லை மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சா யத்துகளில் பணியாற்றும் சுமார் 1,497 தூய்மை பணியாளர் களுக்கு மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து கையுறைகள், ஆடைகள் உள்ளிட்ட வற்றை ஒரு மாதத்துக்குள் வழங்கு வதற்கு ஏற்பாடு செய்ய ப்பட்டு வருகிறது. அவற்றை கலெக்டர் கார்த்திகேயன், சபாநாயகர் அப்பாவு ஆகியோர் தலை மையில் வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் சாலமோன் டேவிட், கனகராஜ், கிருஷ்ணவேணி, தனித் தங்கம், மகேஷ் குமார், பாஸ்கர், அருண் தவசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழடி அகழ்வாராய்ச்சியால் கிராமங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.
    • கீழடி பஞ்சாயத்து தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்தார்.

    மானாமதுரை, மார்ச்.5-

    சிவகங்கை மாவட்டம் கீழடிபகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பணியால் தற்போது இந்த பகுதியில் உள்ள ஊராட்சிகள் வளர்ச்சி அடைந்து வருகிறது.

    தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் பண்டைய தமிழர்களின் வாழ்வியல் முறைகளை உலகில் அனைவரும் தெரிந்து கொள்ள அகழ்வாராய்ச்சி பணிகளுக்கு கூடுதல் நிதிஒதுக்கீடு செய்து கீழடி மட்டுமின்றி அருகே உள்ள கொந்தகை, மணலூர்ஆகிய பகுதிகளில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன.

    இங்கு கிடைத்த அரிய பொருள்களை தமிழக மக்கள் அனைத்து பகுதி களிலும் இருந்து பார்க்கும் வகையில் சுமார் ரூ.18 கோடி செலவில் தமிழக கட்டிட கலைக்கு எடுத்து காட்டாக கீழடி அருங் காட்சியகம் கட்டப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் திருக்கரங்கலால் இன்று மாலை இது திறக்கப் படுகிறது. இதுதவிர தமிழகத்தில் இன்னும் பலகிராம ஊராட்சி பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிநடைபெற்றுவருகிறது. இந்த பணிகளால் கீழடி பகுதியில் புதியதார்சாலை, சிமெண்டு சாலை, பள்ளி களில் மேம்பாடுவசதி, கூடுதல் போக்குவரத்து வசதிகள் கிடைத்தன.

    மேலும் கீழடி ஊராட்சி தமிழகத்தின் சுற்றுலா தலமாக மாறி வருகிறது என்று கீழடி பஞ்சாயத்து தலைவர் வெங்கடசுப்பிரமணியன் தெரிவித்தார்.

    • இரு தரப்பினரிடையே மோதல்; 2 கிராமங்களில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ராஜ கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் (வயது26). இவர் புல்ல நாயக்கன்பட்டி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பெட்ரோல் தீர்ந்து வண்டி நின்றது.

    இதையடுத்து அருகில் விசாரித்து ரவி என்பவரி டம் சென்று பெட்ரோல் கேட்டுள்ளார். அதற்கு அவர் இங்கு பெட்ரோல் கிடைக்கும் என யார் சொன்னது என விசாரித்த தாகவும், இதுகுறித்து இரு வருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒரு வரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டதாகவும் கூறப்படு கிறது.

    இவர்களின் வாக்கு வாதத்தை கேட்டு இருவருக்கும் தெரிந்த நபர்கள் அந்தப் பகுதியில் திரண்டதால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    இந்த நிலையில் சிலர் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். கலைந்து செல்லும் போது ஒரு தரப்பினர் மேலையூர் கிராமத்தில் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சரவணகுமார் அளித்துள்ள புகாரில், ரவி தரப்பினர் தங்களிடம் அவதூறாக பேசி தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவி தரப்பில் அளிக்கப் பட்டுள்ள புகாரில் சரவண குமார் தரப்பினர் வீட்டுக்குள் புகுந்து பெண்களை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

    இருதரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டு களை கூறி வருவதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. பரளச்சி போலீசார் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வரும் நிலையில் 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • கிராமங்கள்தோறும் தி.மு.க.வின் சாதனைகளை பரப்ப வேண்டும் மாநில மாணவரணி தலைவர் பேசினார்.
    • இவர் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி கிராமத்தை சேர்ந்த சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ஆவார்.

    பனைக்குளம்

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தேர்போகி கிராமத்தை சேர்ந்தவர் சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராஜீவ்காந்தி. இவரை தி.மு.க. மாணவர் அணி தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    இதை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் தேர்போகி கிராமத்திற்கு வந்த அவரை பரமக்குடி, மஞ்சூர், சத்திரக்குடி, அச்சுந்தன் வயல், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    தொடர்ந்து சித்தார் கோட்டை சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தேர் போகி கிராமத்திற்கு வந்த இவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் பொதுபட்டியலில் இருந்து கல்வியை மாநில பட்டியலில் சேர்க்கக்கோரி இல்லம் தேடி கல்வித் திட்டம் போல பள்ளி, கல்லூரிகள்தோறும் திண்ணை பிரசாரத்தில் தி.மு.க. மாணவர் அணி ஈடுபடும். தி.மு.க.வின் சாதனைகளை கிராமங்கள்தோறும் பரப்பு வோம். முதல்-அமைச்சரின் பேச்சு மற்றும் எழுத்துக்களை பள்ளி, கல்லூரி மாணவர் இயக்கத்தை தயார்படுத்தி திராவிட இயக்கத்தின் சாதனைகளை கொண்டு செல்லுவோம். திராவிடம் இருந்ததால் என்னை போன்றவர்கள் சட்டக்கல்லூரி படித்து வக்கீலாக வர முடிந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் காயாம்பு, மண்டபம் ஒன்றிய மத்திய செயலாளர் முத்துக்குமார், தேர்போகி ஊராட்சி மன்ற தலைவர் மோகன்குமார். மானாங்குடி பத்மநாதன், பெரியபட்டினம் மீரான், சேக். நாகூர்கனி, ஹரி கிருஷ்ணன், கணேசன், சம்பத்குமார், ராஜேஷ், முனியசாமி, விஜயராகவன், பாண்டி, விஜயராஜ், காளிமுத்து திருமுருகன், சக்திவேல், யாசர், அன்பரசன், பிரபா, சாலமன், கனி, முத்துப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

    • தனியார் நிறுவன வங்கியில் 7 ஆயிரம் மக்காச்சோள மூட்டைகளை இருப்பு வைத்துள்ளனர்.
    • வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு, சமைத்த உணவுப்பொருட்கள் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் உள்ளது கொளத்துப்பாளையம். இந்த பேரூராட்சிக்கு உட்பட்டது ஆலம்பாளையம், சாவடித்தோட்டம் உள்ளிட்ட கிராமங்கள். இந்த பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.இந்நிலையில் சாவடித் தோட்டத்தில் சென்னாக்கல் வலசை சேர்ந்த ஒய்வு பெற்ற வங்கி ஊழியர் நடராஜ் என்பவருக்கு சொந்தமாக உள்ள குடோன்களை வாடகைக்கு் எடுத்து தனியார் நிறுவனம் ஒன்று மக்காச்சோள வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த தனியார் நிறுவன வங்கியில் 7 ஆயிரம் மக்காச்சோள மூட்டைகளை இருப்பு வைத்துள்ளனர்.

    ஆனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள மக்கா ச்சோளத்தை எந்தவித பராமரிப்பு இன்றியும் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது இருப்பு வைக்கப்படும் மக்காச்சோளத்திற்கு பூச்சி மருந்து அல்லது பூச்சிகளை ஒழிக்கும் மாத்திரைகளை வைத்து தார்பாய் போட்டு மூடி வைப்பது வழக்கம். ஆனால் இந்த கிடங்கில் அதுபோன்று எதுவும் கடைபிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மக்காச்சோள மூட்டைகளில் இருந்து உருவான கோடிக்கணக்காக வண்டுகள் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குள் படையெடுக்கின்றன. வீடுகளில் உள்ள அரிசி, பருப்பு, சமைத்த உணவுப்பொருட்கள் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    கடந்த ஆறு மாதங்களாக இந்த பகுதி கிராம மக்களை தூங்கவிடாமல் கடித்து துன்புறுத்தி வருகிறது. இதனால் பெண்களுக்கு கை கால் அலர்ஜி ஏற்படுவது உடன் மாதவிடாய் பிரச்சனை, வயிற்று கோளாறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும். அதேபோன்று ஆண்களை இந்த பூச்சி வண்டு கடித்ததனால் நாக்கில் வறட்டு தன்மை ஏற்படுவது உடன் கை கால்கள் சிவந்து தோள்கள் மந்தமாகி அரிப்பு தன்மை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் திடிரென்று வண்டுகள் பதுங்கியிருக்கும் குடோனை 70க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதனைத் தொடர்ந்து மூலனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து குடோனில் வைக்கப்பட்டுள்ள அனைத்து மக்காச்சோளம் மூட்டைகளும் வேறு இடத்திற்கு மாற்று இடத்துக்கு எடுத்து செல்வதாகவும் இதுபோன்று பிரச்சனைகள் இனிமேல் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர் மக்காசோள விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

    • ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர் .

    திசையன்விளை:

    ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர் .

    இந்த கூட்டத்தில் கிராம பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் பல்வேறு திட்டங்களின் கீழ் அடிக்கல் நாட்டப்பட்டு நடைபெற்று வரும் பணிகள் குறித்து மற்றும் அவற்றின் நிலை குறித்தும் ஆலோசிக்கபட்டது. மேலும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவைகள் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது.

    குடிநீர் தட்டுப்பாடு குறித்து அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என கூறப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், ராஜா,ஞான சர்மிளா கெனிஸ்டன்,படையப்பா முருகன், இசக்கி பாபு, ஆவுடைபாலன், அரிமுத்தரசு,காந்திமதி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சற்குணராஜ்,சேகர்,பைக் முருகன்,பொன் மீனாட்சி அரவிந்தன்,வைகுண்டம் பொன் இசக்கி,அருள்,பேபி முருகன், முருகேசன், முருகன், ராதிகா சரவண குமார்,வாழ வந்த கணபதி பாலசுப்ரமணியம், சூசை ரத்தினம்,மணிகண்டன், ஆனந்த்,சாந்தா மகேஷ்வரன்,வின்சி மணியரசு, வளர்மதி, சந்தனமாரி, சகாயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் தங்கள் கிராம பஞ்சாயத்துகளில் மேற்கொள்ள வேண்டிய நலத்திட்டங்கள் குறித்தும் கலந்து ஆலோசனை நடத்தபட்டது.

    • கோவை மாவட்டத்தில் 37 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கு பொருள் இலக்காக 1,300 எக்டோ் மற்றும் நிதி இலக்காக ரூ.1,496.37 லட்சம் பெறப்பட்டுள்ளது.

    கோவை:

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 56 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 37 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இக்கிராம ஊராட்சிகளில் குறைந்தபட்சம் 15 ஏக்கா் தரிசு நிலம் மற்றும் குறைந்தபட்சம் 8 விவசாயிகள் அடங்கிய தொகுப்புகள் அமைக்க வேண்டும். அதன்படி அன்னூா் வட்டாரத்தில் ஆம்போதி, அ.செங்கம்பள்ளி, வட வள்ளி, பெரியநாயக்க ன்பாளையம் வட்டாரத்தில் நாயக்கன்பாளையம், பொள்ளாச்சி (வடக்கு) வட்டாரத்தில் புரவி பாளையம் ஆகிய 5 கிரா மங்களில் 5 தொகுப்புகள் தோ்வு செய்யப்பட்டு குழுக்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு திட்டத்தின்கீழ் கோவை மாவட்டத்துக்கு 460 எக்டோ் பரப்புக்கு பசுந்தாள் உரப்பயிா் விதைகள் 23 மெட்ரிக் டன் விநியோக இலக்காகப் பெறப்பட்டுள்ளது. நுண்ணீா்ப் பாசனத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கு பொருள் இலக்காக 1,300 எக்டோ் மற்றும் நிதி இலக்காக ரூ.1,496.37 லட்சம் பெறப்பட்டுள்ளது.

    தோட்டக்கலைத் துறையின் சாா்பில் தோட்டக்கலைப் பயிா்களான பழங்கள் மற்றும் காய்கறிகளை நடப்பு ஆண்டில் பரப்பு விரிவாக்கம் செய்யும் பொருட்டு மொத்த இலக்கு 1 லட்சத்து 31 ஆயிரத்து 725 எக்டோ் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    பிரதம மந்திரியின் நுண்ணீா்ப் பாசனத் திட்டம் 2022-2023-ம் ஆண்டுக்கு 3,253 எக்டோ் பொருள் இலக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 56 கிராமங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

    மாநில தோட்டக்கலை வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 470 எக்டோ் பொருள் இலக்காகவும், ரூ.115.63 லட்சம் நிதி இலக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின்கீழ் துல்லிய பண்ணையத் திட்டம், ஊடுபயிா் சாகுபடியை ஊக்குவித்தல், உயா் தொழில்நுட்ப முறையில் தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்தல், ஹைட்ரோ போனிக்கஸ், செங்குத்துத் தோட்டத்தளைகள், உழவா் சந்தையை சுற்றியுள்ள கிராமங்களில் காய்கறி பயிா் சாகுபடி ஊக்குவிக்க பயிா் ஊக்கத் தொகை, முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் அமைக்க தளைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவ ரீதியான நிவாரணங்களில் ஈடுபட்டு வருகிறார். #GajaCyclone #TamilisaiSoundararajan
    சென்னை:

    கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவ ரீதியான நிவாரணங்களில் ஈடுபட்டு வருவது மக்களை கவர்ந்துள்ளது.

    பாரத் பெட்ரோலிய நிறுவனத்திடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மருந்து பொருட்களை வாங்கி, தனது சொந்த செலவிலும் ரூ.5 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை சேகரித்தார். ஒரு நடமாடும் ஆம்புலன்சையும் தயார் செய்து 10 டாக்டர்களை கொண்ட மருத்துவ குழுவுடன் களத்தில் இறங்கி இருக்கிறார்.

    3 நாட்களாக அங்கேயே முகாமிட்டு மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளார். உட்புற கிராமங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் சென்று மருத்துவ பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கி வருகிறார்.



    பேராவூரணி, புதுக்கோட்டையை சுற்றி இருக்கும் கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளித்தார். போகும் வழிகளில் இறங்கி சேதங்களை பார்வையிட்டு ஆறுதல் கூறியும், அவர்களுக்கு உடனடி தேவை என்ன என்பதையும் கேட்டு குறித்து கொள்கிறார். மறுநாள் அதில் முடிந்தவற்றை செய்து கொடுக்கிறார். மருத்துவ குழுவினருடன் பா.ஜனதா தொண்டர்களும் செல்கிறார்கள்.

    நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் 37 கிராமங்களுக்கு இந்த குழுவினர் சென்று சிகிச்சை அளித்தனர்.

    பகல் முழுவதும் புயல் பாதித்த பகுதிகளிலேயே சுற்றிவரும் இந்த குழுவினர் கிராமங்களில் மக்களுடன் மக்களாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.

    இரவு வரை நிவாரண உதவிகள் வழங்கும் அவர்கள் அந்த பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளின் வீடுகளிலேயே தங்குகிறார்கள்.

    அந்த பகுதியில் உள்ள மக்கள் இரவை தாண்டியும் யாராவது வரமாட்டார்களா ஆறுதலாக இருக்க மாட்டார்களா என்று ஏங்குகிறார்கள். அவர்களுக்கு இப்போது மனரீதியான ஆறுதலும் தேவை. அவர்களுடன் அமர்ந்தாலே வலியை மறந்து ஆறுதல் அடைகிறார்கள்.

    முகாம்களில் உள்ளவர்களுக்கு உடல்வலி, சளி, இருமல், காய்ச்சல் உள்ளது. அதற்கு தேவையான மருந்துகளை வழங்கி வருகிறோம்.

    மேலும் சத்து மருந்துகள், புரோட்டீன், நாப்கின், டெட்டால் போன்றவற்றையும் வழங்குகிறோம். தொடர்ந்து நிவாரண பணிகளில் தொண்டர்கள் ஈடுபடுவார்கள்.

    இந்த மனிதாபிமான உதவிகளைகூட கொச்சைப்படுத்தி சமூக வலைத் தளங்களில் பதிவிடுகிறார்கள். அதைப்பற்றி எனக்கு எந்த கவலையும் கிடையாது. களத்தில் மக்களோடு மக்களாக இருக்கிறேன். அவர்களின் ஆதரவும், செய்யும் நிவாரண பணிகளும் மனதுக்கு திருப்தியாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #TamilisaiSoundararajan

    இந்தியா முழுவதும் உள்ள சுமார் 7.71 லட்சம் கிராமங்களில் 13 ஆயிரம் கிராமங்களில் பள்ளிகள் இல்லை என ஊரக வளர்சித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #India #VillageSchools
    புதுடெல்லி:

    நாட்டில் கல்வியின் தரத்தை உலக அளவில் உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், நாட்டின் 13,511 கிராமங்களில் பள்ளிகளே இல்லை. மற்ற மாநிலங்களை விட வடகிழக்கு மாநிலங்களின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. மிசோரமில் உள்ள அனைத்து கிராமங்களிலும் பள்ளிகள் உள்ளன. 

    பள்ளிகள் இல்லாத கிராமங்கள் பட்டியலில் உத்தரபிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 107452 கிராமங்களில் 3474 கிராமங்களில் பள்ளிகள் இல்லை, அடுத்ததாக பீகார் மாநிலத்தில் 1493 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. அடுத்து மேற்கு வங்க மாநிலம் 1277 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. தொடர்ந்து  கர்நாடகாவில் 29736 கிராமங்களில் 1167 கிராமங்களில் பள்ளிகள் இல்லை , மத்திய பிரதேசம்  ராஜஸ்தான் முறையே 1025 மற்றும் 1000 கிராமங்களில் பள்ளிகள் இல்லை.



    தென்னிந்தியாவில் கேரளாவில் தான் 1553 கிராமங்களில் 3 கிராமங்களில் மட்டும் பள்ளிகள் இல்லை. தமிழகத்தில் 170891 கிராமங்களில் 47 கிராமங்களில் மட்டும் தான் பள்ளிகள் இல்லை. 

    தெலுங்கானாவில் 10434 கிராமங்களில் 55 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. கர்நாடகாவில் 29736 கிராமங்களில் 1167 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. ஆந்திராவில் 28293 கிராமங்களில் 154 கிராமங்களில் பள்ளிகள் இல்லை. 
    ×