search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bharatiya Janata Party"

    • சாலை பணி தொடங்கபட்டபோது அங்கே இருந்த உயர் கோபுர மின் விளக்கு அகற்றப்பட்டது.
    • மின் விளக்குகள் இல்லாததால் அந்தப் பகுதி இருள் சூழ்ந்து குற்றவாளிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் துறைமுகம்-மதுரை பைபாஸ் -உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த சாலை பணி தொடங்கபட்டபோது அங்கே இருந்த உயர் கோபுர மின் விளக்கு அகற்றப்பட்டது. போக்குவரத்து வழி காட்டிகளும் கூகுள் செயலிலில் மாற்றப்பட்டது. இந்த வழியாக தினசரி ஆயிரக்கணக்கான லாரிகள், பஸ்கள், இருசக்கர வாகனங்களும் பயணம் செய்து வருகின்றன. மின் விளக்குகள் இல்லாததால் அந்தப் பகுதி இருள் சூழ்ந்து குற்றவாளிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்து வழிப்பறிகளும் நடைபெற்று வருகிறது.வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி மற்றும் வாகன ஓட்டிகள் அரசியல் கட்சிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலை துறைக்கும் பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் அதே நிலை தொடர்வதாக புகார் கூறி உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும்,இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கும் பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகின்றனர்.

    இந்த பக்தர்களின் பாதுகாப்பு கருதி துறைமுகச் சாலை பகுதியில் உடனடியாக தற்காலிக மின் விளக்குகள் அமைத்து பக்தர்களின் உடமைகளையும், பொதுமக்கள் வாகன ஓட்டிக ளின் உயிரையும் பாதுகாத்திட நெடுஞ்சாலைத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து சீலாத்திகுளம் செல்லக்கூடிய சாலை 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது.
    • ராதாபுரம் தாலுகா அலுவலகம் அருகில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் இருந்து சீலாத்திகுளம் செல்லக்கூடிய சாலை 7 கிலோமீட்டர் தூரம் உள்ளது. சீலாத்திகுளம் பகுதிகளில் கல்குவாரிகள் அதிக அளவில் இயங்கி வருவதால் இந்த சாலை வழியாக அதிக பாரங்களை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக சென்று வருகிறது. இதனால் ராதாபுரம் தாலுகா அலுவலகம் அருகில் சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

    இதனால் இந்த சாலை வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தற்போது இரவு நேரங்களில் செல்லக்கூடிய வெளியூர் வாகனங்கள் சாலைகளில் சிக்கி விபத்துக்குள்ளாகி வருகிறது. ஆகவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த சேதம் அடைந்த சாலையை செப்பனிட வேண்டுமென ராதாபுரம் பாரதீய ஜனதா கட்சியின் தெற்கு ஒன்றிய ஊடகப்பிரிவு தலைவர் ராதை காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • பெரியார் பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டதை கண்டித்து ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ஈரோடு:

    பெரியார் பல்கலை க்கழகத்தில் சர்ச்சைக்குரிய கேள்வி கேட்டதை கண்டித்து ஈரோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி தெற்கு மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்ட தலைவர் எஸ். டி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாநில செயலாளர் அய்யாசாமி, பட்டியல் அணி மாநில பொதுச்செயலாளர் விநாயகமூர்த்தி, தெற்கு மாவட்ட தலைவர் சக்திவேல், வடக்கு மாவட்ட தலைவர் நடராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், சின்னத்துரை, மகளிர் அணி மாவட்ட தலைவர் புனிதம், அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தலைவர் ஏ.ஜே.சரவணன்,மாவட்ட பொதுச்செயலாளர்கள் எஸ்.எம்.செந்தில், வேதா னந்தம் , சிவகாமி, ஈஸ்வர மூர்த்தி.

    ஊடக பிரிவு தலைவர் அண்ணாதுரை, விவசாய அணி தங்கராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, ரகுபதி, சிபி சக்கரவர்த்தி, தேசிய செய்தி தொடர்பாளர் சரவணன் ‌, பொருளாளர் சுதர்சனம், தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக் செயலாளர் பாலமுரளி உள்பட பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.  

    வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் மோடி போட்டியிடப் போவதாக வெளியான தகவலுக்கு எடியூரப்பா இன்று விளக்கம் அளித்துள்ளார். #PMModi #Yeddyurappa
    பெங்களூரு:

    தென்மாநிலங்களில் பா.ஜ.க. வலுவிழந்து காணப்படும் நிலையை மாற்றி, வலிமை சேர்க்கும் வகையில் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு முக்கிய தொகுதியில் போட்டியிடப் போவதாக சமீபத்தில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.


    இந்நிலையில், இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான எடியூரப்பா, இதுபோல் வரும் செய்திகள் யாவும் உண்மைக்கு புறம்பானவை. தேவையில்லாமல் பரப்பப்படும் ஆதாரமற்ற தகவல்கள் என்று தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலத்தில் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் மூன்று தொகுதி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வரும் பத்தாம் தேதி கூடும் கட்சி மேலிடக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். #Yeddyurapparubbishes #Modicontesting #LSpolls #ModicontestingfromKarnataka
    ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாஜக பிரமுகர் ஒருவரை பயங்கரவதிகள் சிலர் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்துள்ளனர். #JammuKashmir
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் ரக் இ லிட்டர் பகுதியில் வசித்து வந்தவர் ஷபிர் அகமது பட். பாஜக பிரமுகரான இவர் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் இவரது வீட்டுக்குள் சில பயங்கரவாதிகள் நுழைந்தனர். அவர்கள் ஷபிர் அகமதை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் அகமது பட் பரிதாபமாக உயிரிழந்தார்.



    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஷபிர் அகமதுவின் உடலை மீட்டு இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வரளுகின்றனர். #JammuKashmir

    2019 பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ் அமைத்துள்ள மெகா கூட்டணியில் ஜார்க்கண்ட் மாநில கட்சிகளும் இணைகிறது.
    புதுடெல்லி:

    2019 பாராளுமன்ற தேர்தலை சந்திக்க ஆளும் பா.ஜனதாவும், எதிர்க்கட்சியான காங்கிரசும் தயாராகி வருகின்றன.

    பா.ஜனதா தலைவர் அமித்ஷா தனது பழைய கூட்டணி கட்சிகளான சிவசேனா, அகாலிதளம், ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சி தலைவர்களை சந்தித்து பேசி கூட்டணியை புதுப்பித்து வருகிறார். இது தவிர புதிதாக வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சிறிய கட்சிகளையும் சேர்க்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    இதேபோல் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரசும் மெகா கூட்டணி அமைத்து வருகிறது. இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர்கள் பேச்சு நடத்தி வருகிறார்கள். சமீபத்தில் நடந்த கர்நாடக மந்திரிசபை பதவி ஏற்பு விழாவில் சோனியா, ராகுல் மற்றும் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று திரண்டனர்.

    தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் சார்பில் இப்தார் விருந்து அளித்து எதிர்க்கட்சி தலைவர்களை பா.ஜனதாவுக்கு எதிராக திரட்டியது. அடுத்து இந்த கட்சிகளை இணைத்து மெகா கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    லாலு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியும் காங்கிரஸ் கூட்டணியில் இணைகிறது. இதுதவிர ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் அம்மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு மாநில கட்சியான ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகளை மெகா கூட்டணிக்கு இழுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

    இது தொடர்பாக அந்த கட்சி தலைவர்களுடன் பேச்சு நடத்த காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் ஒப்புதல் அளித்துவிட்டார்.

    மேலும் பாராளுமன்ற தேர்தலுடன் ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கிறது. இதிலும் கூட்டணி அமைப்பது தொடர்பாக மாநில கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சு நடத்த முடிவு செய்துள்ளது.

    இங்கு சமீபத்தில் நடந்த டெல்லி மேல்-சபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா, ராஷ்டீரிய ஜனதா தளம், கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலத்துக்கான அகில இந்திய பொறுப்பாளர் ஆர்.பி.என். சிங் கூறும்போது 2019 பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடன் இணைந்து போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக மாநில கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது என்றார்.
    ×