search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric Light"

    • பாம்பன் பாலத்தில் பழுதான மின்விளக்குகளை மாற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • இதனால் பாம்பன் பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

    ராமேசுவரம்

    பாம்பன் கடலில் 100 அடி உயரத்தில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த பாலம் வழியாக அரசு வாகனங்கள், லாரிகள், சுற்றுலா பஸ், கார், வேன், உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் என நாள் தோறும் ஆயிரக் கணக்கான வாகனங்கள் ராமேசுவரத்திற்கு சென்று வருகின்றன.

    ராமேசுவரம் புன்னிய தலமாக உள்ளதால் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இதனால் இரவு நேரங்களிலும் பாம்பன் பாலத்திலும் போக்குவரத்து அதிகமாக உள்ளது. பலரும் பாலத்தில் இறங்கி நின்று கடலை ரசிக்கின்றனர். மேலும் புகைப்படம் எடுத்து கொள்கின்றனர்.

    இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பாலத்தில் ரூ. பல கோடி மதிப்பிட்டில் புனர மைப்பு பணிகள் நடை பெற்று வருகிறது. நீண்ட தொலைவில் வரும் போதே பாலத்தில் அழகை சிறப்பாக காணும் வகையில் 350-க்கும் மேற்பட்ட எல்.இ.டி மின் விளக்குகள் பொருத்தப் பட்டுள்ளது.இதற்கு பல லட்சம் செலவிடப்பட்டுள் ளது.

    ஆனால் பல விளக்கு கள் சரிவர எரியாமல் உள்ளது. குறிப்பாக பாலம் ஏறும் மற்றும் இறங்கும் இடங்களில் உள்ள 100 க்கும் மேற்பட்ட விளக்குகள் முழுமையாக சரியாக எரியாமல் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதனால் பாம்பன் பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

    இந்த நிலையில் பக்தர்கள், பயணிகள், வாகன ஓட்டிகளின் நலனை கருதி பாம்பன் பாலத்தில் இரவு நேரங்களில் அனைத்து விளக்குகளும் எரியும் வகையில், பழுதடைந்த மற்றும் சரிவர எரியாத விளக்குகளை சீரமைத்து மாற்றியும் தர வேண்டும் என்றும், இரவு நேரத்தில் பாலத்தின் அனைத்து பகுதிகளிலும் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அழகிகுளம், சாமந்தான் குளம் உள்பட பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளது.
    • குளத்தின் இருபுறமும் நடைபாதை அமைத்து மின் விளக்கு, நாற்காலிகள் போடப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி வார்டு 10-ல் வடவாற்ற ங்கரை பகுதியில் சூரியக் குளம் உள்ளது.

    மாநகரில் முக்கியமான குளமாக விளங்கி வந்தது. ஆனால் கடந்த 35 ஆண்டுகளாக இந்த குளத்தில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

    இந்த நிலையில் மாநகராட்சியில் ஏற்கனவே அழகி குளம் உள்பட பல்வேறு குளங்கள் தண்ணீர் நிரப்பப்பட்டு நடைபா தைகள் அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு வசதிகளுடன் புதுப்பொலிவுடன் காட்சியளித்து வருகின்றன.

    அந்த வகையில் சூரிய குளத்தையும் மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மேயர் சண்.ராமநாதன் அந்த குளத்தை ஆய்வு செய்து வடவாறில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்தார். மேலும் அவர் குளத்தில் தண்ணீர் நிரப்பி அந்த பணியை தொடங்கி வைத்தார்.

    இது குறித்து அவர் கூறும் போது:-

    தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. அழகிகுளம், சாமந்தான் குளம் உள்பட பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டு நவீன முறையில் புதுப்பொலிவுடன் மாற்றப்பட்டுள்ளது. இதே போல் இன்னும் பல்வேறு குளங்கள் சீரமைக்கப்பட உள்ளன.

    அந்த வகையில் வடவாற்றங்கறை சூரிய குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

    அடுத்த கட்டமாக குளத்தின் இருபுறமும் நடைபாதை அமைத்து மின் விளக்கு, நாற்காலிகள் போடப்படும். இன்னும் பல்வேறு வசதிகள் இந்த சூரிய குளத்தில் அமைக்கப்படும்.

    இதற்காக ரூ.80 லட்சத்திற்கு திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளன. நிதி வந்தவுடன் பணிகள் தொடங்கி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொ றியாளர் ( பொறுப்பு ) ராஜசேகரன், உதவி பொறியாளர்கள் கார்த்திக், ஆனந்தி, மண்டல குழு தலைவர்கள் மேத்தா, புண்ணியமூர்த்தி, ரம்யா சரவணன், கவுன்சிலர் செந்தமிழ் செல்வன், தி.மு.க.பகுதி செயலாளர் கார்த்திகேயன், மாநகரப் பிரதிநிதி பத்மநாதன், அறிவு, கண்ணன், மூவேந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உறவினர் வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்தது.
    • எதிர்பாராத விதமாக சதீஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.

    மயிலாடுதுறை:

    கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் சதீஷ் (வயது 28).

    எலக்ட்ரீசியன். இந்த நிலையில் சம்பவத்தன்று சதீஷ் தனது பெரியப்பா நாராயணன் என்பவரது வீட்டில் மின்விளக்கு எரியாமல் இருந்ததால், அவரது வீட்டிற்கு சென்று மின் வயரை சரி செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சதீஷ் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில் அவர் வீட்டிற்குள்லேயே சுருண்டு விழுந்து இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சதீஷ் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சதீசுக்கு மனுஷா (23) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இப்பகுதி 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருந்து வருகின்றது.
    • மாலை 6 மணிக்கு மேல் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் பகுதியில் வேணுகோபாலபுரம் வடக்கு, தெற்கு, சுதர்சனம் தெரு, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள், பள்ளிக்கூடங்கள் இருந்து வருவதால் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ள நிலையில் தெரு மின்விளக்குகள் எரியவில்லை. இதன் காரணமாக மாலை 6 மணிக்கு மேல் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் அடையாளம் தெரியாத புதுப்புது நபர்கள் மின்விளக்கு எரியாமல் இருளில் உள்ளதால் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள், கடைகள் போன்றவற்றை அடைத்து விட்டு வெளியில் வருவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர்.

    மேலும் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடைகள் மற்றும் வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் அடிப்படை தேவையான தெரு மின்விளக்குகள் இல்லாத நிலையில், இந்த பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்று விடுவோமா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இரவு நேரங்களில் வெளியில் வர முடியாத சூழ்நிலை காரணமாக யாருக்கேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலும், அசம்பாவிதம் நடைபெற்றாலும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக கடலூர் மாநகராட்சி அதிகாரிகளும் பலமுறை புகார் அளித்தும் அடிப்படை தேவையான தெரு மின்விளக்குகள் சரியான முறையில் பொருத்தப்ப டாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்து வருகின்றன என பொதுமக்கள் குமறி வருகின்றனர்.

    ஆனால் மாநகராட்சி ஊழியர்களோ எதை பற்றியும் அச்சப்படாமல் பொதுமக்கள் புகார் அளித்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்ற அலட்சியமான பதில்களை எப்போதும் தெரிவித்து வருவதால் இது சம்பந்தமாக யார் நடவடிக்கை எடுப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு மின்விளக்குகள் உடனடியாக பொருத்தி குற்ற சம்பவங்கள் நடைபெ றாமலும், விபத்துக்கள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவங்களால் அந்த பகுதி

    • சாலை பணி தொடங்கபட்டபோது அங்கே இருந்த உயர் கோபுர மின் விளக்கு அகற்றப்பட்டது.
    • மின் விளக்குகள் இல்லாததால் அந்தப் பகுதி இருள் சூழ்ந்து குற்றவாளிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் துறைமுகம்-மதுரை பைபாஸ் -உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த சாலை பணி தொடங்கபட்டபோது அங்கே இருந்த உயர் கோபுர மின் விளக்கு அகற்றப்பட்டது. போக்குவரத்து வழி காட்டிகளும் கூகுள் செயலிலில் மாற்றப்பட்டது. இந்த வழியாக தினசரி ஆயிரக்கணக்கான லாரிகள், பஸ்கள், இருசக்கர வாகனங்களும் பயணம் செய்து வருகின்றன. மின் விளக்குகள் இல்லாததால் அந்தப் பகுதி இருள் சூழ்ந்து குற்றவாளிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

    இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்து வழிப்பறிகளும் நடைபெற்று வருகிறது.வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனர். இது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி மற்றும் வாகன ஓட்டிகள் அரசியல் கட்சிகள் தரப்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும், நெடுஞ்சாலை துறைக்கும் பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் அதே நிலை தொடர்வதாக புகார் கூறி உள்ளனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கும்,இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கும் பக்தர்கள் பாதயாத்திரை சென்று வருகின்றனர்.

    இந்த பக்தர்களின் பாதுகாப்பு கருதி துறைமுகச் சாலை பகுதியில் உடனடியாக தற்காலிக மின் விளக்குகள் அமைத்து பக்தர்களின் உடமைகளையும், பொதுமக்கள் வாகன ஓட்டிக ளின் உயிரையும் பாதுகாத்திட நெடுஞ்சாலைத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • மீனவர்களின் வசதிக்காக கடற்கரை ஓரம் கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்பு பல இலட்ச ரூபாய் செலவில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கபட்டது.
    • எந்த கோரிக்கையும் ஏற்கப்படாமல் விழுந்த மின்கம்பம் நான்கு ஆண்டுகளாக கடற்கரையில் அப்படியேவிழுந்த படிகிடக்கிறது.

    வேதாரண்யம் அக்12-

    வேதாரண்யம் தாலுகா விழுந்தமாவடி மீனவர் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசிக்கின்றனர்

    நாள்தோறும் பைபர் படகில் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்மீனவர்களின் வசதிக்காக கடற்கரை ஓரம் கடந்த ஜந்து ஆண்டுகளுக்கு முன்பு பல இலட்ச ரூபாய் செலவில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கபட்டது.

    இந்த உயர்கோபுர மின்விளக்கால் கடற்கரை முழுவதும் இருள் இல்லமால் மீனவர்களுமிகுந்த பயனுள்ளதாக இருந்தது மேலும் இந்த மின்கோபுர விளக்கின் வெளிச்சத்தை அடையாளம் வைத்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் கரை திரும்பினர் இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வீசிய கஜா புயலில்இந்த மின் கோபுர விளக்கு முறிந்து விழுந்தது

    கடந்த நான்கு ஆண்டுகளாக விழுந்த மின்கம்பத்தை சீர் செய்து புதிதாக மின்கம்பம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் பல்வேறு முறை கோரிக்கை வைத்தனர்.

    ஆனால் எந்த கோரிக்கையும் ஏற்கப்படாமல் விழுந்த மின்கம்பம் நான்கு ஆண்டுகளாக கடற்கரையில் அப்படியேவிழுந்த படிகிடக்கிறதுஉடனடியாக இந்த மின் கம்பத்தை சீர் செய்ய வேண்டும் என கிராம பஞ்சாயத்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குப்பொய்கைநல்லூரில் அமைந்துள்ள வேளாங்கண்ணி பேராலயத்தின் உப கோவில்களில் புனித அந்தோனியார் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது. முன்னதாக வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கொடி மற்றும் அந்தோணியார் சொரூபம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்துவரப்பட்டு ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் பேராலய அதிபரால் கொடி புனிதம் செய்யப்பட்டு கொடியேற்றபட்டது. இதனை தொடர்ந்து வண்ண மிகு வாணவேடிக்கைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வரும் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது.

    ×