அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது.
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம்.
மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோனியார் ஆலயம்.
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குப்பொய்கைநல்லூரில் அமைந்துள்ள வேளாங்கண்ணி பேராலயத்தின் உப கோவில்களில் புனித அந்தோனியார் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது. முன்னதாக வேளாங்கண்ணி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் ஜெபமாலை மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கொடி மற்றும் அந்தோணியார் சொரூபம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக எடுத்துவரப்பட்டு ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் பேராலய அதிபரால் கொடி புனிதம் செய்யப்பட்டு கொடியேற்றபட்டது. இதனை தொடர்ந்து வண்ண மிகு வாணவேடிக்கைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வரும் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com