ராதாபுரத்தில் சாலையில் கிடந்த பணத்தை போலீசில் ஒப்படைத்த மெக்கானிக்

ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் கணேசன்.இவர் ராதாபுரத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார்
மெக்கானிக்கின் நேர்மையை பாராட்டி சப்-இன்ஸ்பெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்த காட்சி.
மெக்கானிக்கின் நேர்மையை பாராட்டி சப்-இன்ஸ்பெக்டர் பொன்னாடை அணிவித்து கவுரவித்த காட்சி.
Published on

பணகுடி:

ராதாபுரம் அருகே உள்ள பரமேஸ்வரபுரத்தை சேர்ந்தவர் கணேசன். இவர் ராதாபுரத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.நேற்று இரவு இவரது கடையின் அருகே உள்ள சாலையில் ஒரு பணப்பை கிடந்தது.

அதை பார்த்த கணேசன் பணத்தை எடுத்து கொண்டு ராதாபுரம் போலீஸ் நிலையம் சென்றார். அங்கிருந்த சப்-இன்ஸ்பெக்டர் வள்ளிநாயகத்திடம் அந்த பையை வழங்கினார். அதை பெற்று கொண்ட சப்-இன்ஸ்பெக்டர், மெக்கானிக்கின் நேர்மையை பாராட்டி பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com