search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public Examination"

    • ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினார்கள்.
    • பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



    ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குவதற்கு முன்பு வளாகத்தில் மாணவிகள் படிப்பதை படத்தில் காணலாம்.

     விருதுநகர்

    தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கி யது. இந்த தேர்வை சுமார் 9 லட்சத்து 76 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்வு இன்று (6-ந் தேதி) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது. முதல் தேர்வாக இன்று தமிழ் மொழி பாட தேர்வு நடந்தது.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 12,755 மாணவர்களும், 12,791 மாணவிகளும் மற்றும் தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 25 ஆயிரத்து 776 பேர் 10-ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இதற்காக மாவட்டத்தில் 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன.

    இன்று காலை சரியாக 10 மணிக்கு தேர்வு தொடங்கி யது. ஆனால் மாணவ- மாணவிகள் 20 நிமிடம் முன்பே தேர்வு அறைக்குள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். முதன்மை கண்காணிப்பா ளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பா ளர்கள் என 1200-க்கும் மேற்பட்டோர் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் 8,890 மாணவர்களும், 9,123 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 13 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதற்காக அமைக்கப்பட்டி ருந்த 101 தேர்வு மையங்களில் இன்று காலை தேர்வு தொடங்கியது. தேர்வு பணியில் 1,500க்கும் மேற்பட்டோர் ஈடு படுத்தப்பட்டிருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 84 தேர்வு மையங்களில் 8,359 மாணவர்களும், 8,480 மாணவிகளும், 497 தனி தேர்வர்கள் என மொத்தம் 17 ஆயிரத்து 501 பேர் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். 1264 கண்கா ணிப்பாளர்கள், 84 முதன்மை கண்காணிப்பா ளர்கள், 84 துறை அலு வலர்கள், மற்றும் 148 பணியாளர்கள் தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டி ருந்தனர்.உற்சாகம்

    முதல்முறையாக இன்று அரசு பொதுத்தேர்வை எதிர்கொண்ட பத்தாம் வகுப்பு மாணவ-மாணவி கள் தமிழ் மொழிப்பாட தேர்வை உற்சாகமாக எழுதினர். தேர்வு மையங்க ளுக்கு முன்கூட்டியே வந்தி ருந்த அவர்கள் கடைசி நேர தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர் ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுதுவது குறித்து விளக்கியதை நேரில் காண முடிந்தது.

    தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் மாணவ மாணவிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். துண்டு தாள் வைத்துக்கொள்வது, பிறரை பார்த்து எழுதுவது, ஆள் மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 3 ஆண்டுகள் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை எச்ச ரித்திருந்தது.

    எனவே 3 மாவட்டங்க ளிலும் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.


    • தமிழ்நாடு அரசு தேர்வு துறையால் நடத்தப்படும் பிளஸ்-2 தேர்வு முடிவடைந்துள்ளது.
    • தேர்வினை 106 மையங்களில் எழுத இருக்கிறார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதனை 32 ஆயிரத்து 171 பேர் எழுதுகிறார்கள்.தமிழ்நாடு அரசு தேர்வு துறையால் நடத்தப்படும் பிளஸ்-2 தேர்வு முடிவடைந்துள்ளது. இதுபோல் பிளஸ்-1 தேர்வு இன்று (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அதிகா ரிகள் செய்துள்ளனர்.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நாளை தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 20-ந் தேதி வரை நடைபெ றுகிறது. இந்த தேர்வினை 106 மையங்களில், 354 பள்ளிகளை சேர்ந்த 30 ஆயிரத்து 687 மாணவ-மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் 1484 பேர் என மொத்தம் 32 ஆயிரத்து 171 பேர் எழுத இருக்கிறா ர்கள்.தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 106 தலைமை ஆசிரிய ர்களும், 106 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளராக பணியாற்ற 1780 ஆசிரி யர்களும் நியமிக்கப்ப ட்டுள்ளனர். மேலும், காப்பி அடித்தல் போன்றவற்றை தவிர்க்கும் வகையில் 178 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் தேர்வு மையத்தில் புகார் பெட்டி மற்றும் ஆலோசனை பெட்டி போன்றவைகளும் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஏற்பாடுகளும் மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ளன. மேலும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையத்திற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன.

    • துணை தேர்வு எழுத வைக்க 24-ந் தேதி சிறப்பு கூட்டம்
    • துணைத்தேர்வு குறித்த ஆலோசனை வழங்கி தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    கோவை,

    தமிழகத்தில் பிளஸ் -1, பிளஸ்- 2 மாணவர்களுக்கான பொ துத்தேர்வு நடந்து வருகிறது. இந்த பொதுத்தேர்வில் ஏராள மான மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, அரசு சார்பில் பொதுத்தேர்வு எழுதாமல் உள்ள மாணவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப் பட்டு வருகிறது.

    இந்நிலையில், நடப்பா ண்டில் 10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களில் தேர்வுக்கு வராதவர்கள் யார்? என கண்டறியவும், தேர்வு தொடர்பான முக்கியத்துவம் மற்றும் மாண வர்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனைகள் வழங்கவும் அனைத்து தேர்வர்களும் தேர்வை எழுத வைக்கவும், துணைத்தேர்வு சிறப்பு பயிற்சி மையம் ஏற்பாடு செய்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த பணிக்காக அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நி லைப்பள்ளி களில் வருகிற 24-ந் தேதியும், ஏப்ரல் 10-ந் தேதியும் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை சிறப்பு பள்ளி மேலாண்மை கூட்டம் நடத்த அறிவு றுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மாவட் டத்தில் நடந்த பிளஸ் 2 மொழிப்பாடத் தேர்வினை 1,628 பேர் எழுதவில்லை. இதேபோல், பிளஸ் 1 தேர்வினை 430 பேர் எழுதவில்லை. ஆங்கில தேர்வினை 952 பேர் தேர்வு எழுதவில்லை. மற்ற மாவட்டங்களை விட கோவை மாவட்டத்தில் விடுப்பட்ட தேர்வர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

    இந்நிலை யில், தேர்வு எழுதாமல் உள்ள மாணவர்களை கண்டறிய சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் அனைத்து பள்ளிகளிலும் வருகிற 24-ந் தேதி நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறியும் வகையில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 24-ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தின் மூலமாக அடுத்து வரும் பத்தாம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் அனை வரையும் தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

    பொதுத்தேர்வுக்கு பதிவு செய்த மாணவர்களின் விவரங்களை மேலாண்மை குழு உறுப்பினர்களிடம் பகிர்ந்து அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதுவதை உறுதி செய்யப்படவுள்ளது. மேலும், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்கள் பட்டியல் தயார் செய்து அவர்களை துணைத்தேர்வு எழுத வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தவிர, தற்போது நடந்து வரும் பிளஸ்- 2, பிளஸ் -1 பொதுத்தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களின் விவரங்கள் சேகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணைத்தேர்வு குறித்த ஆலோசனை வழங்கி தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பொதுத்தேர்வு குறித்த விழிப்புணர்வு மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மொத்தம் 112 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
    • தேர்வு தொடங்கிய முதல் 15 நிமிடம் வினாத்தாளை வாசித்து பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டிற்கான பிளஸ் -2 பொதுத்தோ்வு இன்று தொடங்கியது.

    அடுத்த மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

    தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழாண்டு 225 அரசு, அரசு உதவி பெறும், தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 29 ஆயிரத்து 888 மாணவ- மாணவிகளுக்கு பிளஸ் -2 பொதுத்தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தனர்.

    இவா்களில் 14 ஆயிரத்து 641 மாணவா்களும், 15 ஆயிரத்து 247 மாணவிகளும் அடங்கும்.

    281 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுத வசதியாக அவர்களுக்கு தரை தளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொத்தம் 112 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

    இன்று காலை மாணவ- மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு வந்தனர்.

    முன்னதாக மாணவ- மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை செய்தனர்.காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது.

    மாணவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    செல்போன், கால்கு லேட்டர் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. தேர்வு தொடங்கிய முதல் 15 நிமிடம் வினாத்தாளை வாசித்து பார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது.

    அதன் பின்னர் மாணவர்கள் தேர்வு எழுதத் தொடங்கினர். மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.

    இது தவிர உடல் ஊனமுற்றோர், கண் பார்வை யற்றோர், காது கேளாத வாய் பேச இயலாதோர், டிஸ்லெக்சியா மற்றும் மனவர்த்திக்கொன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டது.

    இத்தோ்வில் முறைகே டுகள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்ப ட்டுள்ளன.

    இப்பணிகளில் பறக்கும் படையினா், கண்காணிப்பாளா்கள், அறை கண்காணிப்பாளா்கள் என சுமார் 2 ஆயிரம் ஆசிரியா்களும், ஆசிரியா் அல்லாத கல்வித் துறைப் பணியாளா்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

    அவர்கள் தேர்வு மையங்களில் சென்று ஆய்வு செய்தனர்.

    தேர்வை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து மையங்களில் குடிநீா் வசதி, தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    • ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விடப்பட்டுள்ளது.
    • கல்வித்துறை சார்பில் மின்வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் பள்ளிகளில் பொதுத்தேர்வு நடப்பதால் மார்ச் - ஏப்ரல் மாதங்களில் முழுநேர மின்தடை இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

    தற்போது பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான செய்முறை தேர்வு துவங்கியுள்ளது. வருகிற 13-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வும், பிப்ரவரி 6-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை 10ம் வகுப்பு பொது தேர்வும் நடத்தப்பட உள்ளது. மாணவர்கள், தேர்வுக்கு நன்கு தயார்படுத்தி கொள்ளும் வகையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடைவெளி விடப்பட்டுள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலனை முன்னிட்டு தேர்வு காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என கல்வித்துறை சார்பில் மின்வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

    மார்ச் - ஏப்ரல் மாதம் முழுநேர மின்தடை இருக்காது.மிக அவசர பழுது காரணமாக மின்தடை செய்ய வேண்டியிருந்தால் குறிப்பிட்ட இடம் சார்ந்த பகுதியில் மட்டும் தற்காலிகமாக மின்தடை செய்யப்பட்டு விரைவில் பழுதுநீக்கி மின்சாரம் வினியோகிக்கப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • கல்லிடைக்குறிச்சி திலகர் மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
    • சிறப்பு விருந்தினர்களாக ஆண்டனி பாபு, ஜோசபின் விமலா, ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    கல்லிடைக்குறிச்சி :

    கல்லிடைக்குறிச்சி திலகர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நெல்லை ரோட்டரி சங்கமும், கல்லிடைக்குறிச்சி வித்யா சங்கமும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பண்டாரசிவன் வரவேற்று பேசினார்.

    பள்ளிச்செயலர் சங்கர், ரோட்டரி சங்க தலைவர் ஆவுடையப்ப குருக்கள் ஆகியோர் தலைமை தாங்கி வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினர்களாக ஆண்டனி பாபு, ஜோசபின் விமலா, ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சியை தமிழாசிரியர் சந்தோஷ் தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சுபா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • விருப்பம் உள்ள சிறைக்கைதிகள் பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.
    • குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு அறைக்கு வந்த 24 கைதிகள் ஆர்வத்துடன் பொதுத்தேர்வு எழுதினர்.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 24 சிறைக்கைதிகள் எழுதினர். மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், விருப்பம் உள்ள சிறைக்கைதிகள் பொதுத்தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.

    லக்னோவில் உள்ள மாடல் சிறையில் கைதிகள் தேர்வு எழுதுவதற்காக ஏற்பாடும் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்தில் தேர்வு அறைக்கு வந்த 24 கைதிகள், ஆர்வத்துடன் பொதுத்தேர்வு எழுதினர்.

    • எமிஸ் இணைய தளம் மூலம் பள்ளிக்கல்வி துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • விவரங்களில் ஒரு எழுத்துக்கூட பிழையின்றி சரியாக இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    நடப்பு கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி துவங்கி 20ந் தேதி வரை நடத்தப்படுகிறது. தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் சார்பில் எமிஸ் இணைய தளம் மூலம் பள்ளிக்கல்வி துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பொதுத்தேர்வுக்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறை மும்முரம் காட்டி வரும் நிலையில் 'எமிஸ்' இணையதளத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவ, மாணவிகளின் விவரங்களை ஏதேனும் திருத்தம் இருப்பின் அவற்றை சரி செய்து கொள்வதற்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ் தான் மாணவ, மாணவிகளின் உயர் கல்வி துவங்கி வேலை வாய்ப்பு வரையிலான அனைத்துக்கும் பிரதான ஆதாரமாக இருக்கும் என்பதால் அந்த சான்றிதழில் மாணவ, மாணவிகளின் பெயர், விவரங்களில் ஒரு எழுத்துக்கூட பிழையின்றி சரியாக இருக்க வேண்டும்.

    அந்த வகையில் ஏற்கனவே பள்ளி நிர்வாகங்கள் சார்பில் மாணவ, மாணவிகளின் பெயர் விவரங்கள், பெற்றோரின் ஒப்புதலுடன் சரிபார்க்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் விவரங்களை சரி பார்க்கவும், பிழையிருந்தால் திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும், மாணவ, மாணவிகளின் விவரங்களை வருகிற 25ந் தேதிக்குள் எமிஸ் தளம் வழியாக பட்டியலில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    • மார்ச் 19 மற்றும் 26-ந் தேதிகளில் சிறப்பு யாகபூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

    திருப்பூர் :

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மிகுந்த நினைவாற்றல் பெற்று தன்னம்பிக்கையுடன் தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் வழங்க வேண்டி திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில் திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் சிறப்பு யாக பூஜையுடன், மாணவர்கள் பெயரில் சிறப்பு வழிபாடு நடத்தி அருளாசி வழங்கப்படும்.

    அவ்வகையில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வருகிற 26-ந் தேதி மற்றும் மார்ச் 5-ந் தேதி, பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 12-ந் தேதி,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 19 மற்றும் 26-ந் தேதிகளில் சிறப்பு யாகபூஜைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வாரமும் காலை9 மணிக்கு சிறப்பு வேள்வி, 10:30 மணிக்கு மூலவர் திருமஞ்சனம், 11 மணிக்கு நாம சங்கீர்த்தனம், 11:30 மணிக்கு சாத்துமறை மற்றும் மகாதீபாராதனை, 12 மணிக்கு மாணவ, மாணவிகளுக்கு பிரசாத வினியோகம் நடைபெறும்.

    மாணவ, மாணவிகள் நலனுக்காக முற்றிலும் இலவசமாக நடக்கும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று, மாணவர்களும் குடும்பத்தினரும் பயன்பெறலாம் என திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். 

    • பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான செய்முறை தேர்வும் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
    • மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

    பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புக்கான செய்முறை தேர்வும் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

    இதற்கான தேர்வு மையங்களை கண்டறிதல் பெயர்ப் பட்டியல், ஹால் டிக்கெட் தயாரிப்பு உள்ளிட்ட முன்னேற்பாடுகளை தேர்வுத் துறை மேற்கொண்டு வருகிறது.

    இந்நிலையில் பொதுத் தேர்வுக்கான ஆயத்தப் பணிகளின் நிலை தொடர்பாக தேர்வுத்துறை சார்பில் இன்று சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூலக வளாகத்தில் வழிகாட்டுதல் கூட்டம் நடைபெற்றது.

    பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துறை சார்ந்த இயக்குனர்கள் அனைத்து முதன்மை, மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் மார்ச் 6 முதல் 10-ந்தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் முன் கூட்டியே நடத்தும் வகையில் தற்போது இதை மார்ச் 1-ந்தேதியில் இருந்து 9-ந்தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்று மாற்றி அமைத்துள்ளோம்.

    ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செய்முறை தேர்வுகளுக்கான அவகாசம் போதுமானதாக இல்லை என்றும் கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டதால் புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    இதே போல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17-ந்தேதி வெளியாகும். பிளஸ்-1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 19-ந்தேதியும், பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே 5-ந்தேதியும் வெளியாகும்.

    பொதுத் தேர்வை தனி தேர்வாக எழுத விரும்பும் மாணவர்கள் இன்றும், நாளையும் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    பள்ளி கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோரை வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டமும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆசிரியர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மாணவரின் பெற்றோர் கேட்க மறுத்தனர்.
    • உங்களின் வறுமை நிரந்தரமாக நீங்கவே, நான் உங்களை வற்புறுத்துகிறேன் என்று கல்வியின் முக்கியத்துவத்தை புரிய வைத்தார்.

    ஐதராபாத்:

    தெலங்கானா மாநிலம், சித்திபேட்டை மாவட்டம், பெஜ்ஜிங்கி உயர்நிலைப்பள்ளியில் மொத்தம் 64 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

    இதில், வரும் மார்ச் மாதத்தில் 6 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் நவீன் என்ற மாணவன் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. தலைமையாசிரியர் உத்தரவின் பேரில், ஆங்கில ஆசிரியர் பிரவீன் குமார், நவீன் வீட்டிற்கு சென்று விசாரித்தார்.

    குடும்ப வறுமை காரணமாக நவீனை பள்ளிக்கு அனுப்ப அவனது பெற்றோர் மறுத்துவிட்டனர்.

    ஆசிரியர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மாணவரின் பெற்றோர் கேட்க மறுத்தனர். இதனால், மாணவரின் வீட்டுமுன் தரையில் அமர்ந்து ஆசிரியர் பிரவீன் குமார் தர்ணாவில் ஈடுபட்டார்.

    உங்களின் வறுமை நிரந்தரமாக நீங்கவே, நான் உங்களை வற்புறுத்துகிறேன் என கூறி கல்வியின் முக்கியத்துவத்தை புரிய வைத்தார்.

    அதன் பிறகு நவீனை பள்ளிக்கு அனுப்ப அவனது பெற்றோர் ஒப்புக் கொண்டனர். நவீனை பள்ளிக்கு அழைத்து வந்த பிரவீன் குமாரை, தலைமை ஆசிரியர் உட்பட பலரும் பாராட்டினர். 

    • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்றார்.
    • மருத்துவ கல்லூரியில் படிக்க உறுதுணையாக இருந்து ஊக்கம் தந்த ஆசிரியர்கள்.

    பேராவூரணி:

    பேராவூரணி அருகே மரக்காவலசை கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல், ஜீவா லட்சுமி இவர்களது மகள் பிரதீபா (வயது 18). இவர் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மரக்காவலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் அதனை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்று வந்தார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்றார்.

    அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு மையத்தில் சேர்ந்து படித்து வெற்றி பெற்றார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

    இதனை அறிந்த பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா. கோவிந்தராஜன் மரக்காவலசையில் உள்ள மாணவி பிரதீபா வீட்டிற்கு நேரடியாக சென்று வாழ்த்துக்கள் தெரிவித்து படிப்பதற்கு நிதி உதவி வழங்கினார்.

    கிராமப்புற மாணவர்கள் மருத்துவராக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி க்கு நன்றி தெரிவித்தார்.

    சேதுபாவாசத்திரம் தெற்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கே.எஸ்.அருணாச்சலம், பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ, பேராவூரணி நகர செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா அப்துல் ஜபார் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் மாணவி பிரதீபாகூ றியதாவது, மருத்துவ கல்லூரியில் படிக்க உறுதுணையாக இருந்து ஊக்கம் தந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் உதவி செய்தவர்களுக்கு நன்றி. நான் மருத்துவராகி ஏழை, எளிய மக்களுக்கு பணியாற்றுவேன் என கூறினார்.

    ×