search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவ படிப்புக்கு தேர்வான அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
    X

    மாணவி வீட்டிற்கு சென்று முன்னாள் எம்.எல்.ஏ.கோவிந்தராஜ் வாழ்த்து தெரிவித்தார்.

    மருத்துவ படிப்புக்கு தேர்வான அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு

    • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்றார்.
    • மருத்துவ கல்லூரியில் படிக்க உறுதுணையாக இருந்து ஊக்கம் தந்த ஆசிரியர்கள்.

    பேராவூரணி:

    பேராவூரணி அருகே மரக்காவலசை கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல், ஜீவா லட்சுமி இவர்களது மகள் பிரதீபா (வயது 18). இவர் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மரக்காவலசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும் அதனை தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலும் பயின்று வந்தார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்றார்.

    அதனைத் தொடர்ந்து நீட் தேர்வு மையத்தில் சேர்ந்து படித்து வெற்றி பெற்றார். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

    இதனை அறிந்த பேராவூரணி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா. கோவிந்தராஜன் மரக்காவலசையில் உள்ள மாணவி பிரதீபா வீட்டிற்கு நேரடியாக சென்று வாழ்த்துக்கள் தெரிவித்து படிப்பதற்கு நிதி உதவி வழங்கினார்.

    கிராமப்புற மாணவர்கள் மருத்துவராக அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்று தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி க்கு நன்றி தெரிவித்தார்.

    சேதுபாவாசத்திரம் தெற்கு அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் கே.எஸ்.அருணாச்சலம், பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ, பேராவூரணி நகர செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா அப்துல் ஜபார் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் மாணவி பிரதீபாகூ றியதாவது, மருத்துவ கல்லூரியில் படிக்க உறுதுணையாக இருந்து ஊக்கம் தந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் உதவி செய்தவர்களுக்கு நன்றி. நான் மருத்துவராகி ஏழை, எளிய மக்களுக்கு பணியாற்றுவேன் என கூறினார்.

    Next Story
    ×