search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடும்ப வறுமையால் சிறுவனை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு: மாணவன் வீட்டின் முன் ஆசிரியர் தர்ணா
    X

    மாணவன் வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட ஆசிரியர்.

    குடும்ப வறுமையால் சிறுவனை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு: மாணவன் வீட்டின் முன் ஆசிரியர் தர்ணா

    • ஆசிரியர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மாணவரின் பெற்றோர் கேட்க மறுத்தனர்.
    • உங்களின் வறுமை நிரந்தரமாக நீங்கவே, நான் உங்களை வற்புறுத்துகிறேன் என்று கல்வியின் முக்கியத்துவத்தை புரிய வைத்தார்.

    ஐதராபாத்:

    தெலங்கானா மாநிலம், சித்திபேட்டை மாவட்டம், பெஜ்ஜிங்கி உயர்நிலைப்பள்ளியில் மொத்தம் 64 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

    இதில், வரும் மார்ச் மாதத்தில் 6 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் நவீன் என்ற மாணவன் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. தலைமையாசிரியர் உத்தரவின் பேரில், ஆங்கில ஆசிரியர் பிரவீன் குமார், நவீன் வீட்டிற்கு சென்று விசாரித்தார்.

    குடும்ப வறுமை காரணமாக நவீனை பள்ளிக்கு அனுப்ப அவனது பெற்றோர் மறுத்துவிட்டனர்.

    ஆசிரியர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் மாணவரின் பெற்றோர் கேட்க மறுத்தனர். இதனால், மாணவரின் வீட்டுமுன் தரையில் அமர்ந்து ஆசிரியர் பிரவீன் குமார் தர்ணாவில் ஈடுபட்டார்.

    உங்களின் வறுமை நிரந்தரமாக நீங்கவே, நான் உங்களை வற்புறுத்துகிறேன் என கூறி கல்வியின் முக்கியத்துவத்தை புரிய வைத்தார்.

    அதன் பிறகு நவீனை பள்ளிக்கு அனுப்ப அவனது பெற்றோர் ஒப்புக் கொண்டனர். நவீனை பள்ளிக்கு அழைத்து வந்த பிரவீன் குமாரை, தலைமை ஆசிரியர் உட்பட பலரும் பாராட்டினர்.

    Next Story
    ×