search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் -  பள்ளி தலைமையாசிரியர்களுக்கு  அறிவுறுத்தல்
    X

    பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் - பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

    • எமிஸ் இணைய தளம் மூலம் பள்ளிக்கல்வி துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • விவரங்களில் ஒரு எழுத்துக்கூட பிழையின்றி சரியாக இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    நடப்பு கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி துவங்கி 20ந் தேதி வரை நடத்தப்படுகிறது. தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் சார்பில் எமிஸ் இணைய தளம் மூலம் பள்ளிக்கல்வி துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பொதுத்தேர்வுக்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறை மும்முரம் காட்டி வரும் நிலையில் 'எமிஸ்' இணையதளத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவ, மாணவிகளின் விவரங்களை ஏதேனும் திருத்தம் இருப்பின் அவற்றை சரி செய்து கொள்வதற்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு சான்றிதழ் தான் மாணவ, மாணவிகளின் உயர் கல்வி துவங்கி வேலை வாய்ப்பு வரையிலான அனைத்துக்கும் பிரதான ஆதாரமாக இருக்கும் என்பதால் அந்த சான்றிதழில் மாணவ, மாணவிகளின் பெயர், விவரங்களில் ஒரு எழுத்துக்கூட பிழையின்றி சரியாக இருக்க வேண்டும்.

    அந்த வகையில் ஏற்கனவே பள்ளி நிர்வாகங்கள் சார்பில் மாணவ, மாணவிகளின் பெயர் விவரங்கள், பெற்றோரின் ஒப்புதலுடன் சரிபார்க்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிக்கல்வித்துறை சார்பில் விவரங்களை சரி பார்க்கவும், பிழையிருந்தால் திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதன்படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும், மாணவ, மாணவிகளின் விவரங்களை வருகிற 25ந் தேதிக்குள் எமிஸ் தளம் வழியாக பட்டியலில் திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலம் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×