search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "presidential election"

    • இலங்கை அதிபர் தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கியது.
    • ரணில் விக்ரமசிங்கேவுக்கு, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா ஆதரவு.

    கொழும்பு:

    பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக அந்நாட்டைவிட்டுச் சென்ற கோத்தபய ராஜபக்சே முறைப்படி தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

    முன்னதாக இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை அவர் நியமித்தார். ரணில் இடைக்கால அதிபராக பொறுப்பேற்ற நிலையில், இலங்கையின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு பாராளுமன்றம் தொடங்கி உள்ளது. இதற்கான சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்த சிறப்பு அமர்வின் போது, அதிபர் தேர்தல் நடைமுறைகள் குறித்து பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க அறிவித்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனுக்களை வரும் 19 ஆம் தேதி தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை சமர்ப்பித்தால், அதிபர் தேர்லுக்கு வரும் 20 ஆம் தேதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்க பாராளுமன்றத்தில் ராஜபக்சேவின் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சிக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளனர்.

    அந்த கட்சி ரணிலுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைத் தவிர மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து பிரிந்த வேட்பாளர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

    இதனிடையே மாலத் தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றுள்ள கோத்தபய ராஜபக்சேவுக்க எந்த புகலிடமும் வழங்கவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தனிப்பட்ட பயணமாகவே அவர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரௌபதி முர்மு மீது மரியாதை இருந்தாலும் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க முடிவு
    • ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.

    அவர்கள் மாநிலம் தோறும் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர். இந்நிலையில் வருகின்ற 18-ந்தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் விவகார குழுவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், ஜனாதிபதி தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பதாக கூறியது.

    அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

    திரௌபதி முர்மு மீது மரியாதை இருந்தாலும் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

    ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம்தேதி நடைபெற உள்ளது.
    • ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவும், யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.

    புதுடெல்லி :

    ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். அவர்கள் மாநிலம் தோறும் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.

    இந்நிலையில் வருகின்ற 18-ந்தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் விவகார குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இன்று நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், ஜனாதிபதி தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை ஆம் ஆத்மி கட்சி அறிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம்தேதி நடைபெற உள்ளது.
    • பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.

    போபால் :

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள யஷ்வந்த் சின்கா நேற்று மத்திய பிரதேசம் சென்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டினார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பா.ஜனதா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அவர் கூறுகையில், 'ஜனாதிபதி தேர்தலில் கூட பா.ஜனதா கட்சி, 'ஆபரேஷன் கமலம்' திட்டத்தை அரங்கேற்றுகிறது.

    அதன்படி தங்கள் வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய பா.ஜனதா அல்லாத உறுப்பினர்களுக்கு மிகப்பெரிய அளவில் பணம் கொடுத்து வருகிறது. இது குறித்த நம்பத்தகுந்த தகவல்கள் எனக்கு கிடைத்துள்ளன. ஏனெனில் சுதந்திரமான, நேர்மையான தேர்தல் முடிவை கண்டு பா.ஜனதா அஞ்சுகிறது' என குற்றம் சாட்டினார்.

    ஆளும் பா.ஜனதாவின் இத்தகைய மோசடி குறித்து, ஜனாதிபதி தேர்தலை நடத்தும் மாநிலங்களவை செயலரும், தேர்தல் கமிஷனும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் யஷ்வந்த் சின்கா கேட்டுக்கொண்டார்.

    • ஜனாதிபதி தேர்தல் வரும் 18-ம்தேதி நடைபெற உள்ளது.
    • பா.ஜ.க. ஆதரவு ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.

    கவுகாத்தி :

    ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இதையடுத்து, நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசியல் கட்சி தலைவர்களிடம் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி பிரசாரம் செய்து வருகிறார். அந்த வகையில், அசாம் மாநிலத்திற்கு சென்று எதிர்கட்சிதலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார்.

    அப்போது அவர் பேசுகையில், நான் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன் என யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறுகையில், "அசாமின் முக்கிய பிரச்சனை குடியுரிமையாகும். இந்த சட்டத்தை நாடு முழுவதும் கொண்டு வர அரசு விரும்பியது. ஆனால் இன்னும் அதை கொண்டு வர முடியவில்லை. முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக இந்த சட்டத்தை அமல்படுத்தவில்லை என கூறினார்கள். ஆனால் இப்போது வரை இந்த சட்டத்ததை அமல்படுத்த முடியவில்லை.

    ஏனெனில், இது அவசரமாக கொண்டு வரப்பட்ட முட்டாள்தனமான வரைவு. அரசியலமைப்பிற்கு வெளியில் இருப்பவர்களால் ஆபத்து வரவில்லை. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களால் ஆபத்து உள்ளது. நாங்கள் அதனை பாதுகாக்க வேண்டும். நான் ராஷ்டிரபதி பவனில் இருந்தால் குடியுரிமை திருத்தச்சட்டத்தை அமல்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வேன்".

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார்.
    • இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியை உடைத்து அதிருப்தி குழுவுடன் இணைந்து பா.ஜனதா ஆட்சியை பிடித்து உள்ளது. இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    இதுதொடர்பாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் பாலா சாகேப் தோரட் கூறும்போது, "சிவசேனா நாங்கள் இருக்கும் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருக்கிறது. ஆனால் அவர்கள் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவரை சிவசேனா ஆதரிப்பது ஏன் என்று தெரியவில்லை" என்றார்.

    • வாக்குப் பெட்டிகள் மாநில தலைநகரை அடைந்த பிறகு கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறையில் வைக்கப்படும்.
    • தேர்தல் நிறைவு பெறும் வரை, நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்.

    குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பொருட்களை பாதுகாப்பாக குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைப்பதற்கான பயிற்சி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் 2 நாட்கள் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    உதவி தேர்தல் அதிகாரிகளிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் முழுமையாக நிறைவு பெறும் வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றார். வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் ஆகியவற்றை கொண்டு வருதல், பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென தெரிவித்தார்.

    இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள், சிறப்பு பேனா மற்றும் சீலிடப்பட்ட தேர்தல் பொருட்கள் டெல்லி, புதுச்சேரி உள்பட அனைத்து மாநில சட்டசபை செயலகங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப் பெட்டிக்கு விமானத்தில் தனி டிக்கெட் மூலம் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது.

    வாக்குப் பெட்டிகள் அனைத்து மாநில தலைநகரை அடைந்த பிறகு கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறையில் வைக்கப்பட்டு அறை பூட்டி சீலிடப்பட்டு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


    இந்நிலையில் டெல்லியில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சென்னை வந்தன. தமிழகத்திற்கு உரிய வாக்குப் பெட்டியை சென்னை விமான நிலையத்தில் உதவி தேர்தல் அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் சாந்தி ஆகியோரிடம், மாநில துணை தலைமை தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் சட்டமன்ற பேரவை துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் ஒப்படைத்தனர். 

    • ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது.
    • உத்தவ் தாக்கரே அணியில் தற்போது 15 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    மும்பை:

    சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து அதிருப்தி அணியினர் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர். அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல் மந்திரியாக பதவி ஏற்றார். அவருக்கு சிவசேனாவின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் 55 பேரில் 40 பேர் ஆதரவு உள்ளது.

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் தற்போது 15 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர். சிவசேனா எம்.பி.க்கள் 18 பேரில் பலர், சிவசேனாவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என உத்தவ் தாக்கரேயை வலியுறுத்தி வந்ததாக கூறப்பட்டது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் உத்தவ் தாக்கரேக்கு மும்பையைச் சேர்ந்த சிவசேனா எம்.பி. ராகுல் செவாலே கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

    இதற்கிடையே, சிவசேனா எம்.பி.க்கள் கூட்டத்தை உத்தவ் தாக்கரே நேற்று கூட்டினார். இதில் 13 எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த், கட்சி கொறடா பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாவனா காவ்லி உள்பட 5 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி.க்களில் பலர், ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என உத்தவ் தாக்கரேயை கேட்டுக்கொண்டதாக கட்சியின் மூத்த தலைவர் கஜானன் கிரிதிகர் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க உள்ளேன் என சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • உத்தவ் தாக்கரே அணியில் தற்போது வெறும் 15 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர்.
    • ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.

    மும்பை :

    சிவசேனா கட்சியில் பிளவு ஏற்பட்டதை தொடர்ந்து, அதிருப்தி அணியினர் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளனர். அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவருக்கு சிவசேனாவின் மொத்த எம்.எல்.ஏ.க்கள் 55 பேரில் 40 பேர் ஆதரவு உள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் தற்போது வெறும் 15 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் உள்ளனர்.

    இதேபோல சிவசேனா எம்.பி.க்கள் 18 பேரில் பலர், சிவசேனாவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயை வலியுறுத்தி வந்ததாக கூறப்பட்டது. மேலும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேக்கு மும்பையை சேர்ந்த சிவசேனா எம்.பி. ராகுல் செவாலே கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

    இந்தநிலையில் சிவசேனா எம்.பி.க்கள் கூட்டத்தை நேற்று உத்தவ் தாக்கரே கூட்டினார். இதில் 13 எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த், கட்சி கொறடா பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாவனா காவ்லி உள்பட 5 எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை.

    கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி.க்களில் பலர், ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேயை கேட்டுக்கொண்டதாக கட்சியின் மூத்த தலைவர் கஜானன் கிரிதிகர் நிருபர்களிடம் தெரிவித்தார். இதனால் ஜனாதிபதி தேர்தலில் உத்தவ் தாக்கரே என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பதும், 5 எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.
    • எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியில் உள்ளார்.

    அமராவதி :

    ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் வியூகம் வகுக்கும் குழு கூட்டத்தில் இதை அவர் அறிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    தெலுங்கு தேசம் எப்போதும் சமூக நீதிக்கு துணை நிற்கும். கடந்த காலத்தில், ஜனாதிபதி பதவிக்கு கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் ஆகியோரை ஆதரித்துள்ளோம். அதே உணர்வில், பழங்குடி இனத்தை சேர்ந்த திரவுபதி முர்முவை ஆதரிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆந்திராவில், ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • எம்.பி.க்களை பொறுத்தவரை டெல்லியில் வாக்களிக்கலாம் அல்லது வேறு மாநிலத்தில் உள்ள சட்டமன்ற வளாக வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம்.
    • எங்கு வாக்களிக்க உள்ளோம் என்பதை உரிய காரணத்துடன் கடிதம் மூலம் எம்.பி.க்கள் தெரிவிக்க வேண்டும். அந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்தது.

    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது.

    இதில் பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். காங்கிரஸ் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்கா நிறுத்தப்பட்டுள்ளார்.

    இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட உள்ளனர். இந்த தேர்தலில் மொத்தம் 4,809 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். இதில் 233 பேர் ராஜ்ய சபா உறுப்பினர்கள், 545 பேர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4,033 அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கும்.

    இதில் தமிழகத்தில் இருந்து 234 எம்.எல்.ஏ.க்கள், 39 பாராளுன்ற உறுப்பினர்கள், 18 ராஜ்ய சபா எம்.பி.க்கள் ஓட்டு போட உள்ளனர்.

    இதில் எம்.பி.க்களை பொறுத்தவரை டெல்லியில் வாக்களிக்கலாம் அல்லது வேறு மாநிலத்தில் உள்ள சட்டமன்ற வளாக வாக்குச்சாவடியில் வாக்களிக்கலாம். எங்கு வாக்களிக்க உள்ளோம் என்பதை உரிய காரணத்துடன் கடிதம் மூலம் எம்.பி.க்கள் தெரிவிக்க வேண்டும். அந்த காலக்கெடு நேற்றுடன் முடிந்தது.

    தற்போது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வாக்குச் சீட்டுகளை வாங்கி வருவதற்காக சட்டசபை செயலக அதிகாரி 11-ந்தேதி விமானத்தில் டெல்லி சென்று தேர்தல் கமிஷனில் ஓட்டு பெட்டி மற்றும் ஓட்டு சீட்டுகளை பெற்று 12-ந்தேதி போலீஸ் பாதுகாப்புடன் சென்னை திரும்புகிறார்.

    விமானத்தில் தனி இருக்கையில் ஓட்டு பெட்டி வைக்கப்பட்டு பாதுகாப்புடன் எடுத்து வரப்படும். சட்டசபை செயலக வளாகத்தில் தனி அறையில் ஓட்டுப்பெட்டி மற்றும் வாக்குச் சீட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு அந்த அறை சீல் வைக்கப்படும். ஓட்டுப் பதிவு அன்றுதான் பெட்டி வெளியில் எடுக்கப்படும்.

    ஓட்டுப்பதிவு முடிந்ததும் அன்று மாலையே உரிய பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு எடுத்துச் செல்லப்படும்.

    எம்.பி.க்கள் வாக்களிக்க பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு நிறத்திலும் ஓட்டுச் சீட்டு அச்சடிக்கப்பட்டு உள்ளது.

    • ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது.
    • எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியில் உள்ளார்.

    மும்பை :

    நாட்டின் ஜனாதிபதி தேர்தல் வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியில் உள்ளார். இந்தநிலையில் பா.ஜனதாவின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என சிவசேனா எம்.பி. ராகுல் செவாலே, கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதி உள்ளார். சிவசேனா மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாவிகாஸ் கூட்டணியில் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தநிலையில் ராகுல் செவாலே, உத்தவ் தாக்கரேவுக்கு எழுதிய கடிதம் குறித்து நேற்று தானேயில் சிவசேனா அதிருப்தி அணி தலைவரும், முதல்-மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டேவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:-

    திரவுபதி முர்மு நாட்டின் ஜனாதிபதியாக பிரதமர் மோடி வாய்ப்பு கொடுத்து உள்ளார். அவர் நாட்டின் ஜனாதிபதி ஆவது நாட்டிற்கு பெருமை மற்றும் கவுரவம் ஆகும். பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதால் நானும் பெருமை அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×