search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "presidential election"

    • 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்முவின் வெற்றி உறுதி ஆனது
    • திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று பின்தங்கினார்.

    அதன்பின்னர் எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. 20 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், மெஜாரிட்டிக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றார் முர்மு. 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்மு 50 சதவீத வாக்குகளை கடந்ததால் அவர் ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பது உறுதியானது.

    அதன்பின்னர் மீதமுள்ள மாநிலங்களின் ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி பி.சி.மோடி அறிவித்தார். திரவுபதி முர்மு 6,76,803 வாக்குகளும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3,80,177 வாக்குகளும் பெற்றுள்ளனர். திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு 36 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

    இதன்மூலம் நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்க உள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பிரதமர் மோடி நேரில் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    • எம்.பி.க்களின் மொத்த வாக்குகளில் 72.19 சதவீத வாக்குகளை திரவுபதி முர்மு பெற்றார்.
    • 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்முவன் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. பாராளுமன்ற கட்டிடத்தில் 63-ம் எண் அறையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்தார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்றுள்ளார்.

    திரௌபதி முர்மு 3,78,000 வாக்கு மதிப்பும், யஷ்வந்த் சின்ஹா 1,45,600 வாக்கு மதிப்பும் பெற்றிருந்தனர். எம்.பி.க்களின் மொத்த வாக்குகளில் 72.19 சதவீத வாக்குகளை திரவுபதி முர்மு பெற்றார். இதன்மூலம் திரவுபதி முர்மு 2,32,400 வாக்கு மதிப்பு முன்னிலை பெற்றார்.

    எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி நடைபெறுகிறது. இதில் 20 மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், மெஜாரிட்டிக்கு தேவையான வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்றார் முர்மு. 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திரவுபதி முர்மு 50 சதவீத வாக்குகளை கடந்ததால் அவர் ஜனாதிபதியாக தேர்வாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    திரவுபதி முர்மு ஏற்கனவே 5,77,777 வாக்குகளை (வாக்கு மதிப்பு) பெற்றுள்ளார். இது தேர்தலில் பதிவான மொத்த செல்லுபடியாகும் வாக்குகளில் 50 சதவீதத்தை விட அதிகம் ஆகும். தற்போது 10 மாநில ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

    அனைத்து வாக்குகளும் எண்ணி முடிக்கப்பட்டபின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் அதிகாரி பி.சி.மோடி வெளியிடுவார்.

    • ஜனாதிபதி தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
    • பாராளுமன்ற கட்டிடத்தில் 63-ம் எண் அறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிட்டனர்.

    பாராளுமன்றம் மற்றும் மாநிலத் தலைநகரங்களில் மொத்தம் 31 இடங்களில் ஓட்டுப்பதிவு நடந்தது. அரசு சார்பில் வழங்கப்பட்ட சிறப்பு பேனாவை பயன்படுத்தி எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். மொத்தம் உள்ள 771 எம்.பி.க்களில் 8 பேர் வாக்களிக்கவில்லை. 763 எம்.பி.க்கள் வாக்களித்தனர்.

    நாடு முழுவதும் உள்ள 4,025 எம்.எல்.ஏ.க்களில் 34 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போடவில்லை. 3,991 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து இருந்தனர். இதனால் ஜனாதிபதி தேர்தலில் 99 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

    ஒட்டுப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பிரத்யேக வாக்குப்பெட்டியை ஒவ்வொரு மாநிலத்துக்கும் அனுப்பி பயன்படுத்தி இருந்தது. கடந்த 18-ந் தேதி மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் ஓட்டுப்பெட்டிகள் அனைத்தும் தேர்தல் அதிகாரிகளின் கண்காணிப்பில் பலத்த பாதுகாப்புடன் விமானத்தில் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன.

    பாராளுமன்ற வளாகத்தில் தனி அறையில் அவை வைக்கப்பட்டன. கடந்த 2 தினங்களாக அந்த வாக்குப் பெட்டிகள் இருந்த அறைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்றன.

    ஓட்டு எண்ணிக்கைக்காக பாராளுமன்ற கட்டிடத்தில் 63-ம் எண் அறை தயார் செய்யப்பட்டு இருந்தது. காலை 11 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.

    பாராளுமன்ற மேல்சபை செயலாளரும், ஜனாதிபதி தேர்தல் அதிகாரியுமான பி.சி.மோடி தலைமையில் அதிகாரிகள் வாக்குகளை எண்ணும் பணியை தொடங்கினார்கள். முதலில் பாராளுமன்ற ஓட்டுப் பெட்டியில் இருந்த வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் 748 எம்.பி.க்களில் திரவுபதி முர்மு 540 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்றுள்ளார். யஷ்வந்த் சின்கா 208 எம்.பி.க்களின் வாக்குகள் பெற்றுள்ளார். 15 பேரின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

    திரௌபதி முர்மு 3,78,000 வாக்கு மதிப்பும், யஷ்வந்த் சின்ஹா 1,45,600 வாக்கு மதிப்பும் பெற்றுள்ளனர். எம்.பி.க்களின் மொத்த வாக்குகளில் 72.19 சதவீத வாக்குகளை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். இதன்மூலம் திரவுபதி முர்மு 2,32,400 வாக்கு மதிப்பு முன்னிலையில் இருக்கிறார்.

    எம்.பி.க்கள் பதிவு செய்த வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, எம்எல்ஏக்கள் பதிவு செய்த வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

    • ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி மாநிலங்களின் வாக்குப்பெட்டிகள் திறந்து எண்ணப்படும்.
    • முதல் 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்டதும், 2-வது முறையாக வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் வெளியிடப்படும்.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் வெளியிட்டது. இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஒடிசாவை சேர்ந்த பிரபல பழங்குடியின தலைவரும், ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான திரவுபதி முர்மு களமிறக்கப்பட்டார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்கா போட்டியிட்டார்.

    ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணியானது இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையை, தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநிலங்களவை செயலாளருமான பி.சி.மோடி மேற்பார்வையிடுகிறார்.

    முதலில் எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த சுற்று முடிவடைந்ததும் வேட்பாளர்களின் முன்னணி நிலவரத்தை பி.சி.மோடி வெளியிடுகிறார். பின்னர் ஆங்கில எழுத்து அகர வரிசைப்படி மாநிலங்களின் வாக்குப்பெட்டிகள் திறந்து எண்ணப்படும். இதில் முதல் 10 மாநிலங்களின் வாக்குகள் எண்ணப்பட்டதும், 2-வது முறையாக வேட்பாளர்களின் முன்னணி நிலவரத்தை அவர் அறிவிப்பார். தொடர்ந்து 20 மாநிலங்கள் முடித்த பின் ஒரு முறையும், பின்னர் மீதமுள்ள வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின் இறுதி நிலவரத்தையும், தேர்தல் நடத்தும் அதிகாரி பி.சி.மோடி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் நாட்டின் 15-வது ஜனாதிபதி யார்? என்ற விவரம் மாலைக்குள் வெளியாகும் என தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    • ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த 18-ந்தேதி நடைபெற்றது.
    • கர்நாடகாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    பெங்களூரு:

    தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.

    ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த 18-ந்தேதி நடைபெற்றது. கர்நாடகாவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் ஆகியோர் தேர்தல் கமிஷனில் புகார் அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி கட்சியின் வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு உள்ளது.

    மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகள் இதனை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் எம்.எல்.ஏ.க்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து சொகுசு ஓட்டலில் தங்க வைத்துள்ளனர்.

    அவர்களுக்கு ஆடம்பர அறைகள் ஒதுக்கப்பட்டு மதுபானங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அவர்கள் திரவுபதி முர்முக்கு வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது.

    இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட கர்நாடக மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • வாக்குப்பெட்டி உரிய பாதுகாப்புடன் இன்று அதிகாலை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
    • அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றது.

    புதுச்சேரி:

    ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதி நேற்று நடந்தது.

    புதுவை சட்டசபை கமிட்டி அறையில் நடந்த வாக்குப்பதிவில் 30 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கமும் வாக்குகளை பதிவு செய்தனர். புதுவை ராஜ்யசபா எம்.பி. செல்வகணபதி பாராளுமன்றத்தில் வாக்குப்பதிவு செய்தார்.

    வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

    இன்று அதிகாலை வாக்குப்பெட்டி உரிய பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றது.

    டெல்லியில் பாராளுமன்ற ராஜ்யசபா செயலாளரிடம் புதுவை சட்டசபை செயலர் முனுசாமி, தேர்தல் அதிகாரி தில்லைவேல் ஆகியோர் வாக்கு பெட்டி மற்றும் உபகரணங்களை ஒப்படைத்தனர். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

    • கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசர், ஓ.பி.எஸ், கவச உடையுடன் வந்து வாக்களிப்பு
    • திரவுபதி முர்முவும், யஷ்வந்த் சின்காவும் களத்தில் உள்ளனர்.

    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    நாடு முழுவதும் உள்ள எம்.பிக்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்குகளை பதிவு செய்தனர். டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்டோர்பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    தமிழகத்தை சேர்ந்த 39 மக்களவை எம்.பி.க்களும், 18 மாநிலங்களவை எம்.பி.க் களும் வாக்களித்தனர். நாகப்பட்டினம் செல்வராஜ், ஈரோடு கணேசமூர்த்தி, கார்த்தி சிதம்பரம் ஆகிய எம்.பி.க்கள் சென்னையில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து முன் அனுமதி பெற்றிருந்தனர்.

    தமிழக எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை 10 மணிக்கு முதல் நபராக வந்து தனது வாக்கு பதிவு செய்தார். தொடர்ந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.  


    இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்எல்ஏக்களும் வாக்குகளை பதிவு செய்தனர். 


    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க மாலை 4 முதல் 5 மணி வரை நேரம் அளிக்கப்பட்டது. அதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் நாசர் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் வாக்களித்தனர்

    மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 99.18% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல் அளித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை வருகிற 21-ந் தேதி (வியாழன்) காலை டெல்லியில் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் களத்தில் உள்ளனர். மொத்த வாக்கில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெறும் வேட்பாளர் நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். வருகிற 25-ந்தேதி அவர் பதவி ஏற்பார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தில் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டது.
    • எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலான வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது.

    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க இன்று தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக (பா.ஜனதா கூட்டணி) திரவுபதி முர்மு, எதிர்க்கட்சி சார்பில் (காங்கிரஸ் கூட்டணி) யஷ்வந்த் சின்கா வேட்பாளர்களாக போட்டியிடுகிறார்கள்.

    இந்தியா முழுவதும் உள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்பதால் டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதே போல் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் ஓட்டு போட வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டு இருந்தது.

    தமிழ்நாட்டில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக சென்னை தலைமைச் செயலத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    அங்கு ஓட்டு போட வரும் எம்.எல்.ஏ.க்களின் அடையாள அட்டையை ஒரு அதிகாரி பெயர் பட்டியலுடன் சரி பார்த்து வந்தார். இன்னொரு அதிகாரி வாக்குச் சீட்டை வழங்கினார்.

    எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தில் வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட்டது. எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலான வாக்குச்சீட்டுகள் வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த தேர்தலில் வாக்களிக்க முதலில் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கும், அதனை தொடர்ந்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கும் நேரம் ஒதுக்கி கொடுக்கப்பட்டிருந்தது.

    சட்டசபையில் தி.மு.க.வுக்கு 125 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ்-18, ம.தி.மு.க.-4, விடுதலை சிறுத்தைகள்-4, இந்திய கம்யூனிஸ்டு-2, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-2, மனிதநேய மக்கள் கட்சி-2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-1, தமிழக வாழ்வுரிமை கட்சி-1 எம்.எல்.ஏ.க்களும்

    அ.தி.மு.க.வில் உள்ள 65 எம்.எல்.ஏ.க்களில் எடப்பாடி பழனிசாமி அணியில் 62 எம்.எல்.ஏ.க்கள், ஓ.பன்னீர் செல்வம் அணியில் 3, பா.ம.க.-5, பா.ஜனதா-4, புரட்சி பாரதம்-1 ஆகியோர் உள்ளதால் இவர்கள் வாக்களிக்க ஏதுவாக அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

    இதில் ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் எந்த நேரத்தில் வந்து வாக்களிக்கலாம் என்பது பற்றி முன் கூட்டியே பேசி வைத்திருந்தனர்.

    அதன்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் காலை 9.30 மணிக்கே தலைமைச் செயலகம் வந்து விட்டனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றுக்கு காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணம் அடைந்து விட்டதால் இன்று காலை டிஸ்சார்ஜ் ஆனார். அவர் நேராக 10 மணியளவில் தலைமைச் செயலகம் வந்தார். அவரை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.

    பதிலுக்கு வணக்கம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் நேராக சட்டசபை குழு கூட்டத்துக்கு சென்று ஜனாதிபதி தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டனர்.

    அதன் பிறகு எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் வந்து வாக்களிக்கின்றனர். ஓ.பன்னீர் செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் தனியாக வந்து வாக்களிக்கின்றனர்.

    உடல்நலம் சரியில்லாத ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி., நாகை செல்வராஜ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் ஆகிய 3 எம்.பி.க்களும் சென்னையில் வாக்களிக்கின்றனர்.

    இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவுக்கு நேரம் இருப்பதால் சில எம்.எல்.ஏ.க்கள் மதியம் வந்து வாக்களிக்கின்றனர்.

    தமிழ்நாட்டில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களும் இன்று வாக்களிக்கின்றனர். ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 176 என மதிப்பிடப்பட்டு உள்ளது. ஒரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு 700 ஆகும்.

    சென்னையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவை உதவி தேர்தல் அதிகாரியான சட்டசபை செயலாளர் சீனிவாசன் முன்னின்று நடத்தினார். தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஓட்டுப் பெட்டியுடன் பாதுகாப்பாக இன்றிரவே டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி முர்முவும், யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்
    • தமிழகத்தில் முதல் நபராக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓட்டு போட்டார்

    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குகளை பதிவு செய்துவருகின்றனர். 

    நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களும், 233 மாநிலங்களவை எம்.பி.க்களும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 39 மக்களவை எம்.பி.க்களும், 18 மாநிலங்களவை எம்.பி.க் களும் அடங்குவார்கள். பிரதமர் மோடி, பாராளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    நாகப்பட்டினம் செல்வராஜ், ஈரோடு கணேசமூர்த்தி, கார்த்தி சிதம்பரம் ஆகிய எம்.பி.க்கள் சென்னையில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து முன் அனுமதி பெற்றுள்ளனர்.

    எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில், சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, எம்.எல்.ஏக்கள் ஓட்டு போடுகின்றனர். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முதல்வர் ஸ்டாலின், காலை 10 மணிக்கு முதல் நபராக வந்து தனது வாக்கை பதிவு செய்தார். அதன்பின்னர் மற்ற உறுப்பினர்கள் ஓட்டு போட்டனர்.

    இன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நிறைவடைகிறது. அதன்பின் ஓட்டுப்பெட்டிக்கு 'சீல்' வைக்கப்பட்டு, இன்று இரவு சென்னையில் இருந்து விமானத்தில் பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

    மொத்த வாக்கில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெறும் வேட்பாளர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். வாக்கு எண்ணிக்கை வருகிற 21-ந் தேதி (வியாழன்) காலை டெல்லியில் நடைபெறுகிறது. புதிய ஜனாதிபதி வருகிற 25-ந்தேதி பதவி ஏற்பார். தற்போதைய சூழ்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 60 சதவீதம் ஓட்டு பெற்று அவர் ஜனாதிபதி ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

    • தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார்.
    • எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியிடுகிறார்.

    சென்னை :

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. அதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி (பா.ஜ.க கூட்டணி) வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சி சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வாக்குசீட்டு முறையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக அந்தந்த மாநிலங்களில் உள்ள தலைமை செயலகத்தில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் தமிழகத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போடுவதற்காக, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள சட்டசபை குழு கூட்ட அரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து இன்று நடக்கும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

    எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உள்ள ஓட்டுப்பெட்டி கடந்த 12-ந்தேதி பாதுகாப்புடன் விமானம் மூலம் டெல்லியில் இருந்து சென்னை தலைமைச் செயலகத்துக்கு கொண்டு வரப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு நடைபெறும் சட்டசபை வளாகத்தில் உள்ள குழு கூட்ட அறையில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    ஓட்டு போடும் மேஜையை அடைவதற்கு முன்பு 3 அலுவலர்கள் உட்கார நாற்காலி மற்றும் மேஜைகள் சற்று தூரத்தில் போடப்பட்டுள்ளன. ஓட்டு போட வருவோரின் அடையாள அட்டையை ஒரு அலுவலர், பெயர் பட்டியலுடன் சரிபார்ப்பார். பின்னர் வாக்குச்சீட்டை மற்றொரு அலுவலர் வழங்குவார். இந்த தேர்தலை நடத்துவதற்காக உதவி தேர்தல் அதிகாரியாக சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் நியமிக்கப்பட்டு உள்ளார். 2 வேட்பாளர்களுக்கும் தலா 3 முகவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    வாக்குச்சீட்டில் 'வைலட்' நிற பேனா மூலம் வாக்களிக்க வேண்டும். அதற்கான பேனா வாக்குப்பதிவு அலுவலகத்தில் வழங்கப்படும். வாக்குச்சீட்டில் 2 வேட்பாளர்களின் பெயருக்கு அருகில் ஒரு கட்டம் இருக்கும். அதில், எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ?, அந்த கட்டத்தில் 'ஒன்று' என்று எழுத வேண்டும். 2-வது வேட்பாளர்களுக்கு, வாக்களிக்க விரும்பினால் 'இரண்டு' என்று எழுத வேண்டும்.

    2 வேட்பாளர்களும் சமமான வாக்குகள் வாங்கியிருந்தால், 2-வது வாக்கு எண்ணப்பட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் ஓட்டுப்பெட்டிக்கு 'சீல்' வைக்கப்பட்டு, இன்று இரவு சென்னையில் இருந்து பாதுகாப்புடன் விமானத்தில் தனி இருக்கையில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும்.

    தமிழகத்தில் மொத்தமுள்ள 234 எம்.எல்.ஏ.க்களும் இன்று வாக்களிக்க உள்ளனர். 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு 176 என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது மாநிலத்துக்கு மாநிலம் மாறும். அதேபோன்று, ஒரு எம்.பி.யின் வாக்கு 700 மதிப்பு என்பதாகும். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க 'இளஞ்சிவப்பு' (பிங்க்) நிறத்தில் வாக்குச்சீட்டு வழங்கப்படும். எம்.பி.க்கள் வாக்களிக்க 'பச்சை' நிறத்திலான வாக்குச்சீட்டு வழங்கப்படும். நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை எம்.பி.க்களும், 233 மாநிலங்களவை எம்.பி.க்களும் டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இதில் தமிழகத்தை சேர்ந்த 39 மக்களவை எம்.பி.க்களும், 18 மாநிலங்களவை எம்.பி.க் களும் அடங்குவார்கள். நாகப்பட்டினம் செல்வராஜ், ஈரோடு கணேசமூர்த்தி ஆகிய 2 எம்.பி.க்கள் சென்னையில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து முன் அனுமதி பெற்றுள்ளனர்.

    கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அதற்கான தேர்தல் விதிகளின்படி வந்து வாக்களிக்க வேண்டும். அவர்கள் பாதுகாப்பு உடையான 'பிபிஇ கிட்' உடை அணிந்திருக்க வேண்டும். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பால்வளத்துறை அமைச்சர் நாசர், எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்திசிதம்பரம் ஆகியோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். தொற்று ஏற்பட்டு உள்ளவர்களுக்கு வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும், தலைமைச் செயலகத்தில் வாக்களிக்க வரும் 2 எம்.பி.க்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துவிட்டு சென்ற பிறகு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, புவனேஸ்வரில் இருந்து வந்துள்ள தேர்தல் பார்வையாளர், புவனேஷ்வர் குமார், சட்டசபை செயலாளர் கி.சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து இன்று காலை 10 மணிக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல். ஏ.க்களும், அவர்களை தொடர்ந்து அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உள்ளனர்.

    நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்து 33 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க உள்ளனர். அதேபோல் நாடு முழுவதும் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் மொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 ஆகும். இதில் தமிழக எம்.பி.க்கள் (57 பேர்), எம்.எல்.ஏ.க்கள் (234 பேர்) வாக்குகள் 81 ஆயிரத்து 86 என கணக்கிடப்பட்டு உள்ளது. மொத்த வாக்கில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பெறும் வேட்பாளர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். வாக்கு எண்ணிக்கை வருகிற 21-ந் தேதி (வியாழன்) காலை டெல்லியில் நடைபெறுகிறது. அப்போது வெற்றி பெற்றவர் யார் என்று அறிவிக்கப்படுவார். அவரே நம் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.

    ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் வெற்றி பெறும் புதிய ஜனாதிபதி வருகிற 25-ந்தேதி பதவி ஏற்பார். தற்போதைய சூழ்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு 6 லட்சத்து 67 ஆயிரம் ஓட்டுகள் உறுதியாகி இருந்தது. தற்போது சிவசேனா உள்ளிட்ட சில மாநில கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருப்பதால் 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 ஓட்டுகள் கிடைக்கும் என்று தெரிகிறது. எனவே 60 சதவீதம் ஓட்டு பெற்று அவர் ஜனாதிபதியாகுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    • ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
    • இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதி முடிகிறது. இதையொட்டி இந்தப் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.

    ஜனாதிபதி பதவிக்கு ஆளும் கட்சியான பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. பாராளுமன்ற வளாகத்திலும், அனைத்து மாநில சட்டசபை செயலக வளாகத்திலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து எம்.பி.க்களும் (மக்களவை, மேல்சபை), எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க உள்ளனர்.

    இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்களுக்கு இளம் சிவப்பு நிறத்திலும் வாக்கு சீட்டு வழங்கப்படும். தேர்தல் அதிகாரி பிரிப்பதற்கு வசதியாக இரு நிறத்தில் வாக்கு சீட்டு அளிக்கப்படுகிறது.

    ஜனாதிபதி தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பாராளுமன்றத்தில் வரும் 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    அ.தி.மு.க., தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மாநில கட்சிகள் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளித்துள்ளதால் 61 சதவீத வாக்குகளை பெறுவது உறுதியாகி விட்டது. இதன்மூலம் திரவுபதி முர்மு வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • திரவுபதி முர்மு வேட்பு மனுதாக்கல் செய்தபோது 50 சதவீத வாக்குகள் பெறுவார் என்று கணக்கிடப்பட்டது.
    • ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வருகிற 24-ந் தேதி முடிகிறது. இதையொட்டி இந்தப்பதவிக்கான தேர்தல் நாளை (18-ந் தேதி) நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    ஜனாதிபதி பதவிக்கு ஆளும் கட்சியான பா.ஜனதா கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சியின் சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. பாராளுமன்ற வளாகத்திலும், அனைத்து மாநில சட்டமன்ற செயலக வளாகத்திலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து எம்.பி.க்களும் (மக்களவை, மேல்சபை), எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க உள்ளனர்.

    அதே நேரத்தில் நியமன எம்.எல்.ஏ.க்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள் ஓட்டு போட முடியாது.

    இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்களுக்கு இளம் சிவப்பு நிறத்திலும் வாக்கு சீட்டு வழங்கப்படும். தேர்தல் அதிகாரி பிரிப்பதற்கு வசதியாக இரு நிறத்தில் வாக்கு சீட்டு அளிக்கப்படுகிறது.

    வாக்கு மதிப்பு அடிப்படையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் மதிப்பிடப்படும். ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு இந்த முறை 700 ஆக உள்ளது. எம்.எல்.ஏ.க்களின் வாக்கு மதிப்பு மாநிலத்தின் மக்கள்தொகை அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

    உத்தரபிரதேசத்தில் ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 208 ஆக உள்ளது. அதை தொடர்ந்து தமிழ்நாடு, ஜார்க்கண்டில் எம்.எல்.ஏ.வின் வாக்கு மதிப்பு 176 ஆகவும், மகாராஷ்டிரத்தில் 175 ஆகவும் உள்ளன. சிக்கிமில் 7 ஆகவும், நாகலாந்தில் 9 ஆகவும் ஓட்டு மதிப்பு உள்ளது.

    ஜனாதிபதி தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பாராளுமன்றத்தில் வருகிற 21-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

    பா.ஜனதா கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு வெற்றி பெற அதிகமான வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க., தெலுங்கு தேசம், பகுஜன்சமாஜ் உள்ளிட்ட மாநில கட்சிகள் முர்முவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால் அவர் 61 சதவீத வாக்குகளை பெறுவது உறுதியாகி விட்டது.

    திரவுபதி முர்மு வேட்பு மனுதாக்கல் செய்தபோது 50 சதவீத வாக்குகள் பெறுவார் என்று கணக்கிடப்பட்டது. அதன் பிறகு பிஜூ ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பகுஜன் சமாஜ், அ.தி.மு.க., தெலுங்கு தேசம், மதசார்பற்ற ஜனதா தளம், சிரோமணி அகாலி தளம், சிவசேனா, ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா ஆகிய கட்சிகள் முர்முவுக்கு ஆதரவு அளித்துள்ளன. இதனால் அவர் 61 சதவீத வாக்குகளை பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ஜனாதிபதி தேர்தலில் மொத்த வாக்குகள் 10,86,431 ஆகும். பல்வேறு கட்சிகளின் ஆதரவுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி பெறும் வாக்குகளின் எண்ணிக்கை 6.67 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு மட்டுமே 3.08 லட்சம் வாக்குகள் உள்ளன.

    ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு 114 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மக்களவையில் 12 எம்.பி.க்களும், மேல் சபையில் 9 எம்.பி.க்களும் உள்ளனர். இதனால் அந்த கட்சிக்கு மொத்தம் 32,000 வாக்குகள் உள்ளன. இதே போல பா.ஜனதா வேட்பாளர்கள் ஆதரவு அளிக்கும் மற்ற கட்சிகளின் வாக்குகள் உள்ளன.

    எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்காவுக்கு எம்.பி.க்கள் மூலமாக 1.5 லட்சத்துக்கு அதிகமான வாக்குகளும், எம்.எல்.ஏ.க்கள் மூலமாக 1.5 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ×