என் மலர்

  புதுச்சேரி

  ஜனாதிபதி தேர்தல்- புதுவை வாக்குப்பெட்டி பாராளுமன்றத்தில் ஒப்படைப்பு
  X

  வாக்குப் பெட்டி மற்றும் உபகரணங்களை பாராளுமன்ற ராஜ்யசபா செயலாளரிடம் ஒப்படைத்த காட்சி.


  ஜனாதிபதி தேர்தல்- புதுவை வாக்குப்பெட்டி பாராளுமன்றத்தில் ஒப்படைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வாக்குப்பெட்டி உரிய பாதுகாப்புடன் இன்று அதிகாலை சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
  • அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றது.

  புதுச்சேரி:

  ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதி நேற்று நடந்தது.

  புதுவை சட்டசபை கமிட்டி அறையில் நடந்த வாக்குப்பதிவில் 30 எம்.எல்.ஏ.க்கள், காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கமும் வாக்குகளை பதிவு செய்தனர். புதுவை ராஜ்யசபா எம்.பி. செல்வகணபதி பாராளுமன்றத்தில் வாக்குப்பதிவு செய்தார்.

  வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதையடுத்து வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

  இன்று அதிகாலை வாக்குப்பெட்டி உரிய பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றது.

  டெல்லியில் பாராளுமன்ற ராஜ்யசபா செயலாளரிடம் புதுவை சட்டசபை செயலர் முனுசாமி, தேர்தல் அதிகாரி தில்லைவேல் ஆகியோர் வாக்கு பெட்டி மற்றும் உபகரணங்களை ஒப்படைத்தனர். நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

  Next Story
  ×