என் மலர்

  இந்தியா

  இன்று ஜனாதிபதி தேர்தல் - தயார் நிலையில் தேர்தல் ஆணையம்
  X

  திரவுபதி முர்மு

  இன்று ஜனாதிபதி தேர்தல் - தயார் நிலையில் தேர்தல் ஆணையம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
  • இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன.

  புதுடெல்லி:

  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதி முடிகிறது. இதையொட்டி இந்தப் பதவிக்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.

  ஜனாதிபதி பதவிக்கு ஆளும் கட்சியான பா.ஜ.க. கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

  இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. பாராளுமன்ற வளாகத்திலும், அனைத்து மாநில சட்டசபை செயலக வளாகத்திலும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. அனைத்து எம்.பி.க்களும் (மக்களவை, மேல்சபை), எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க உள்ளனர்.

  இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கு ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. எம்.பி.க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.க்களுக்கு இளம் சிவப்பு நிறத்திலும் வாக்கு சீட்டு வழங்கப்படும். தேர்தல் அதிகாரி பிரிப்பதற்கு வசதியாக இரு நிறத்தில் வாக்கு சீட்டு அளிக்கப்படுகிறது.

  ஜனாதிபதி தேர்தல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பாராளுமன்றத்தில் வரும் 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

  அ.தி.மு.க., தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட மாநில கட்சிகள் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு அளித்துள்ளதால் 61 சதவீத வாக்குகளை பெறுவது உறுதியாகி விட்டது. இதன்மூலம் திரவுபதி முர்மு வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Next Story
  ×