search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசுத் தலைவர் தேர்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரௌபதி முர்மு மீது மரியாதை இருந்தாலும் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க முடிவு
    • ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர்.

    அவர்கள் மாநிலம் தோறும் சென்று தங்களுக்கு ஆதரவு திரட்டுகின்றனர். இந்நிலையில் வருகின்ற 18-ந்தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் அரசியல் விவகார குழுவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில், ஜனாதிபதி தேர்தலில் தங்களின் ஆதரவு யாருக்கு என்பதை ஆம் ஆத்மி கட்சி அறிவிப்பதாக கூறியது.

    அதன்படி, குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

    திரௌபதி முர்மு மீது மரியாதை இருந்தாலும் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

    ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • வாக்குப் பெட்டிகள் மாநில தலைநகரை அடைந்த பிறகு கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறையில் வைக்கப்படும்.
    • தேர்தல் நிறைவு பெறும் வரை, நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்.

    குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான பொருட்களை பாதுகாப்பாக குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைப்பதற்கான பயிற்சி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் 2 நாட்கள் நடந்தது. இதில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    உதவி தேர்தல் அதிகாரிகளிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் முழுமையாக நிறைவு பெறும் வரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்றார். வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் ஆகியவற்றை கொண்டு வருதல், பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென தெரிவித்தார்.

    இதையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள், சிறப்பு பேனா மற்றும் சீலிடப்பட்ட தேர்தல் பொருட்கள் டெல்லி, புதுச்சேரி உள்பட அனைத்து மாநில சட்டசபை செயலகங்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. வாக்குப் பெட்டிக்கு விமானத்தில் தனி டிக்கெட் மூலம் ஒரு சீட் ஒதுக்கப்பட்டது.

    வாக்குப் பெட்டிகள் அனைத்து மாநில தலைநகரை அடைந்த பிறகு கிருமி நீக்கம் செய்யப்பட்ட அறையில் வைக்கப்பட்டு அறை பூட்டி சீலிடப்பட்டு வீடியோ கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


    இந்நிலையில் டெல்லியில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் சென்னை வந்தன. தமிழகத்திற்கு உரிய வாக்குப் பெட்டியை சென்னை விமான நிலையத்தில் உதவி தேர்தல் அலுவலர்கள் சீனிவாசன் மற்றும் சாந்தி ஆகியோரிடம், மாநில துணை தலைமை தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் சட்டமன்ற பேரவை துணை செயலாளர் ரமேஷ் ஆகியோர் ஒப்படைத்தனர். 

    • திரவுபதி முர்மு வேட்பு மனு தாக்கலின்போது ஓ.பி.எஸ், தம்பிதுரை பங்கேற்றனர்
    • எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

    குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலாளரிடம் திரவுபதி முர்மு நேற்று தமது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த வேட்புமனுதாக்கலின்போது அதிமுக சார்பில் ஓ.பி.எஸ், தம்பிதுரை உள்ளிட்டோரும் பாஜக ஆளும் பிற மாநில முதல்வர்களும் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் திரவுபதி முர்மு சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் சால்வை அணித்து ஆதரவு தெரிவித்தார். இதேபோல் மத்திய இணை மந்திரி எல் முருகனும் திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

    அப்போது, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி., ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ பி.எச்.மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • டெல்லியில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது.
    • பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வு செய்வது தொடர்பாக டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவகத்தில் அக்கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

    பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்காரி  உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்முவின் பெயர் தேர்வு செய்யப்பட்டதாக ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

    முதன்முறையாக பழங்குடியின பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். திரௌபதி முர்மு ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×