search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President Rahul Gandhi"

    அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். #Congress #RahulGandhi #ApsaraReddy
    புதுடெல்லி:

    சமூக செயற்பாட்டாளராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருபவர் திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    இந்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, அப்சரா ரெட்டி இன்று டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். #Congress #RahulGandhi #ApsaraReddy
    ராஜஸ்தானில் இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவரது கட்சி தலைவர்களின் பெயரே தெரிவதில்லை என குற்றம் சாட்டினார். #RajasthanAssemblyElections #BJP #PMModi #Congress #RahulGandhi
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை மறுதினம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் இந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதையடுத்து, அங்கு அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

    இந்நிலையில், பாஜக சார்பில் ராஜஸ்தான் மாநிலம் சுமர்பூர் மற்றும் பாலி ஆகிய பகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றார். சுமர்பூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:

    சோனியா மற்றும் ராகுல் காந்தியின் வருமான வரி கணக்கு விபரங்களை மறு ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது மத்திய அரசுக்கு கிடைத்த வெற்றி.

    அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளை விசாரிக்க தொடங்கி உள்ளதால் ஜாமீனில் இருக்கும் சோனியாவும், ராகுலும் கோபத்தில் உள்ளனர்



    ராஜஸ்தானின் ஜாட் சமூகத்தை சேர்ந்த விவசாயி கும்பாராம்ஜி சமீபத்தில் மறைந்தார். காங்கிரஸ்காரரான இவர் அப்பகுதியில் புகழ்வாய்ந்தவராக திகழ்ந்தார்.

    ஆனால், காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி இவரது பெயரை கும்பாராம்ஜி என்பதற்கு பதிலாக கும்பகர்ணன்ஜி  என அழைக்கிறார்.

    தனது கட்சியின் முக்கிய பிரமுகரின் பெயரைக்கூட காங்கிரஸ் தலைவருக்கு சரியாக உச்சரிக்க முடியவில்லை. இதுபோன்றவர்கள்  ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை மக்கள் அறிவார்கள்.

    ராஜஸ்தான் மாநில மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். ராஜஸ்தானின் ஒவ்வொரு பூத்திலும் வெற்றி பெற வேண்டியது மட்டுமே எங்கள் வேலை என தெரிவித்துள்ளார். #RajasthanAssemblyElections #BJP #PMModi #Congress #RahulGandhi
    தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சோனியா காந்தி, முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் மீது கடுமையாக குற்றம் சாட்டினார். #TelanganaAssemblyElections #Congress #SoniaGandhi #RahulGandhi
    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தற்போது அங்கு 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
     
    ஆளும் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, மீண்டும் ஆட்சியை தக்கவைக்க தீவிரமாக உள்ளது. காங்கிரஸ் கூட்டணி (தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கானா ஜன சமிதி), பாஜக, அகில இந்திய மஜ்லிஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகியவை களத்தில் உள்ளது. இதனால் தெலுங்கானா தேர்தலில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மேட்கல் தொகுதியில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது சோனியா காந்தி பேசியதாவது:

    தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியது காங்கிரஸ்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக ஆட்சி செய்து வருகிறார்.



    ஆனால், முதல் மந்திரி சந்திரசேகர ராவ், அவருக்காகவும், அவரது நெருங்கிய உறவினர்களுக்காகவும் மட்டுமே பாடுபட்டு வருகிறார். சந்திரசேகர ராவ் ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை 

    தெலுங்கானா மாநில அரசு தலித்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் மாணவர்கள் மீது உரிய கவனம் செலுத்தவில்லை என கடுமையாக குற்றம் சாட்டினார்.

    அவரை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானா மாநிலத்தில் டி.ஆர்.எஸ். கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரவுள்ளது என்றார்.

    தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு சோனியாகாந்தி முதல் முறையாக அங்கு சென்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #TelanganaAssemblyElections #Congress #SoniaGandhi #RahulGandhi
    சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். #ChhattigarhAssemblyElections #Congress #RahulGandhi
    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக, நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியில் உள்ள பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் கான்கெர் பகுதியில் பகன்ஜோர் நகரில் உள்ள பண்டிட் சியாம பிரசாத் முகர்ஜி மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:



    மோடி அரசு பணக்காரர்களுக்காக மட்டுமே வேலை செய்கிறது. தொழிலதிபர்களின் சம்மதம் பெறாமல் மோடி எதையும் செய்வதில்லை.

    பண மதிப்பிழப்பின் போது நீங்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்தீர்கள். ஆனால் கருப்பு பணம் வைத்துள்ள யாரும் வரிசையில் நிற்கவில்லை. அதே சமயம் நீரவ்மோடி , விஜய் மல்லையா, லலித் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் உங்கள் பணத்தை எடுத்துக் கொண்டு நாட்டை விட்டு ஓடி விட்டனர்.

    சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #ChhattigarhAssemblyElections #Congress #RahulGandhi
    கர்நாடகம் மாநில தலைநகரான பெங்களூருவுக்கு சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில முதல் மந்திரி குமாரசாமியை இன்று திடீரென சந்தித்துப் பேசினார். #RahulGandhi #Kumaraswamy
    பெங்களுரு:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகம் மாநிலத்துக்கு ஒருநாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு பெங்களூருவில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோநாடிக்கல் நிறுவன ஊழியர்களை சந்திக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், கர்நாடகம் மாநில தலைநகர் பெங்களூருவில் தங்கிய ராகுல் காந்தி, திடீரென அம்மாநில முதல் மந்திரி குமாரசாமியை சந்தித்து பேசினார்.

    இருவரும் கர்நாடகம் மாநில அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #RahulGandhi #Kumaraswamy
    உத்தரப்பிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளனர். #UPTrainDerailed #TrainAccident #SoniaGandhi #RahulGandhi
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலம் மால்டா நகரில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் வழியாக டெல்லிக்கு ‘நியூ பராக்கா எக்ஸ்பிரஸ்’ ரெயில் நேற்று இரவு புறப்பட்டது. இன்று காலை உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் ஹர்சந்த்பூர் ரெயில்நிலையம் அருகே வேகமாக சென்று கொண்டிருந்த போது திடீரென ரெயில் தடம் புரண்டது.

    என்ஜின் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த 9 பெட்டிகளும் ஒன்றுடன் ஒன்று மோதி தடம் புரண்டு கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த 7 பயணிகள் பலத்த அடிபட்டு இறந்தனர். மேலும் 30 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    ரெயில் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.



    இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

    உ.பி.யில் நடைபெற்ற ரெயில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில், உ.பி. ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகளில் மாநில அரசு விரைந்து ஈடுபட்டிருக்கும் என நம்புகிறேன். காயமடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். #UPTrainDerailed #TrainAccident #SoniaGandhi #RahulGandhi
    குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் வெளியேறும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஒன்றும் கூறாமல் மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #Gujaratviolence #RahulGandhi #Modi
    ஜெய்ப்பூர்:

    குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்கந்தா மாவட்டத்தில் கடந்த 28-9-2018 அன்று 14 மாத பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான ரசிந்திர சாஹு என்பவனை போலீசார் கைது செய்தனர்.
     
    இதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் தங்கி வேலை பார்த்து வரும் இந்தி மொழி பேசுபவர்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருவதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 



    இதற்கிடையே, குஜராத் மாநிலத்தில் இந்தி மொழி பேசுபவர்கள் தாக்கப்பட்டு வருவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இந்நிலையில், குஜராத்தில் இருந்து வெளிமாநிலத்தவர்கள் வெளியேறும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஒன்றும் கூறாமல் மவுனம் காப்பது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    குஜராத்தில் வசித்து வரும் வெளிமாநில இளைஞர்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் என இந்தி மொழி பேசுபவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.

    ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஒன்றும் சொல்லாமல் மவுனம் காப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். #Gujaratviolence #RahulGandhi #Modi
    ×