search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mahila congress"

    • தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் உடன்குடி கீழ பஜார் சந்திப்பில் கையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவி சிந்தியா தலைமை தாங்கினார்.

    உடன்குடி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி., பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் உடன்குடி கீழ பஜார் சந்திப்பில் கையில் தீப்பந்தம் ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவி சிந்தியா தலைமை தாங்கினார்.

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி தனலட்சுமி, மாநில மகிளா செயலாளர் பியூலா, மாநில இணைச்செயலாளரும், உடன்குடி டவுன் கவுன்சிலருமான அன்புராணி, மாவட்ட மகிளா செயலாளர் சுசிலா, திருச்செந்தூர் நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி, ஸ்ரீவைகுண்டம் நகர தலைவி மங்களச் செல்வி, மாவட்ட துணைத்தலைவி புனிதவதி, திருச்செந்தூர் பட்டுக்கனி, நாசரேத் பொன்ராணி ரீட்டா, ஆறுமுகநேரி சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு காங்கிரஸ்பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்டதலைவருமான சிவசுப்பிரமணியன், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாவட்ட பொருளாளர் நடராஜன், விடுதைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட மகளிர்அணி தலைவி நிர்மலா, உடன்குடி நகர தலைவர் முத்து, மூத்த தலைவர் வெற்றிவேல் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட நிர்வாகி செண்பகராமன், தேவராஜ், கோபால், செந்தில், லிங்கம் ஆதித்தன், ஜெபராஜ், பிரான்ஸிஸ், முதலூர் சாமுவேல், மகளிர் அணி நிர்வாகிகள் பிரீத்தி, சாந்தி, ரோஸ்லின், ஆழ்வார்தோப்பு சந்திரபுஷ்பம், புதுக்குடி ஞானப்பிரகாசி, மாரி உட்பட ஏராளமான மகளிர் அணியினர் கலந்து கொண்டு கையில் தீப்பந்தம் ஏந்திமத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.

    அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளராக திருநங்கை அப்ஸரா ரெட்டியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். #Congress #RahulGandhi #ApsaraReddy
    புதுடெல்லி:

    சமூக செயற்பாட்டாளராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றி வருபவர் திருநங்கை அப்சரா ரெட்டி. இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    இந்நிலையில், அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளராக திருநங்கை அப்சரா ரெட்டியை நியமனம் செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, அப்சரா ரெட்டி இன்று டெல்லிக்கு சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். #Congress #RahulGandhi #ApsaraReddy
    ×