search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்கல்"

    தெலுங்கானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய சோனியா காந்தி, முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் மீது கடுமையாக குற்றம் சாட்டினார். #TelanganaAssemblyElections #Congress #SoniaGandhi #RahulGandhi
    ஐதராபாத்:

    தெலுங்கானா சட்டசபைக்கு ஒரே கட்டமாக வருகிற டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தற்போது அங்கு 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
     
    ஆளும் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, மீண்டும் ஆட்சியை தக்கவைக்க தீவிரமாக உள்ளது. காங்கிரஸ் கூட்டணி (தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு, தெலுங்கானா ஜன சமிதி), பாஜக, அகில இந்திய மஜ்லிஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஆகியவை களத்தில் உள்ளது. இதனால் தெலுங்கானா தேர்தலில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

    காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மேட்கல் தொகுதியில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது சோனியா காந்தி பேசியதாவது:

    தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியது காங்கிரஸ்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் சந்திரசேகர ராவ் முதல் மந்திரியாக ஆட்சி செய்து வருகிறார்.



    ஆனால், முதல் மந்திரி சந்திரசேகர ராவ், அவருக்காகவும், அவரது நெருங்கிய உறவினர்களுக்காகவும் மட்டுமே பாடுபட்டு வருகிறார். சந்திரசேகர ராவ் ஆட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை 

    தெலுங்கானா மாநில அரசு தலித்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் மாணவர்கள் மீது உரிய கவனம் செலுத்தவில்லை என கடுமையாக குற்றம் சாட்டினார்.

    அவரை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானா மாநிலத்தில் டி.ஆர்.எஸ். கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரவுள்ளது என்றார்.

    தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு சோனியாகாந்தி முதல் முறையாக அங்கு சென்று பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #TelanganaAssemblyElections #Congress #SoniaGandhi #RahulGandhi
    ×