search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "picket"

    • சீத்தாராம் பாளையத்தில் இருந்து சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு ரூபாய் ஒருகோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்க திட்டவரைவு தயாரிக்கப்பட்டு சூரியம்பாளையம் பகுதி வழியாக அதனை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்து நமக்குநாமே திட்டத்தில்ரூ.33 லட்சம் பொதுமக்கள் பங்களிப்பாக நகராட்சியில் செலுத்தப்பட்டது.
    • சூரியம் பாளையம்பகுதி பொதுமக்கள் இந்த கால்வாய் அமைவதனால் 4 வார்டுகளில் இருந்த மழைநீர் மற்றும் கழிவு நீர் தங்களது பகுதி வழியாக செல்லும் எனவும் அவ்வாறு செல்வதால் தங்களது குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் எனவும் தங்களது பகுதியாக வழியாக கொண்டு செல்லக் கூடாது என நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி இன்று திடீர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நகராட்சி தொண்டிக்கரடு முனியப்பன் கோவில் குப்பண்ணன் காடு பகுதியில் இருந்து கடந்த 50 வருடங்களாக தீர்க்கப்படாமல் இருந்த மழைநீர் ரோட்டில் தேங்கும் பிரச்சினைக்குதீர்வு காண சீத்தாராம் பாளையத்தில் இருந்து சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு ரூபாய் ஒருகோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்க திட்டவரைவு தயாரிக்கப்பட்டு சூரியம்பாளையம் பகுதி வழியாக அதனை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்து நமக்குநாமே திட்டத்தில்ரூ.33 லட்சம் பொதுமக்கள் பங்களிப்பாக நகராட்சியில் செலுத்தப்பட்டது.

    இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் இதனை அறிந்த சூரியம் பாளையம்பகுதி பொதுமக்கள் இந்த கால்வாய் அமைவதனால் 4 வார்டுகளில் இருந்த மழைநீர் மற்றும் கழிவு நீர் தங்களது பகுதி வழியாக செல்லும் எனவும் அவ்வாறு செல்வதால் தங்களது குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் எனவும் தங்களது பகுதியாக வழியாக கொண்டு செல்லக் கூடாது என நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி இன்று திடீர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

    திருச்செங்கோடு தேவானங்குறிச்சி சாலையில் நடந்த இந்த மறியலில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் டிஎஸ்பி பொறுப்பு பழனிசாமி, நகர காவல் ஆய்வாளர் செந்தில் குமார், நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சண்முகம், மேலாளர் குமரேசன் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் . உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சுமார் ஒருமணி நேரம் நடந்த சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் சூரியம் பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • புயல் எச்சரிக்கையால் அரசு ஊழியர்களின் மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
    • இதனால் மிக அதி கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் சார்பில், பழைய ஒய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டுமென்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ந் தேதியன்று, சென்னை, திருச்சி, சேலம், கடலூர், மதுரை ஆகிய இடங்களில் மறியல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    தற்போது தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மிக அதி கனமழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆகவே, நாளை நடக்க இருந்த மறியல் போராட்டம் தள்ளி வைக்கப்படுகிறது. அதன்படி வரும் 14-ந் தேதி சென்னை, திருச்சி, சேலம், கடலூர் மதுரை ஆகிய இடங்களில்மறியல் போராட்டம் நடக்கும். இவ்வாறு அறிக்கையில் உள்ளது.

    • புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு அதற்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
    • தனி நபர் ஒருவர் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, மதுக்கூர் அருகே உள்ள சிராங்குடி கிராமத்தில் உள்ள பழைய பயணிகள் நிழற்குடை ஒன்று சேதமானதை அடுத்து அதே இடத்தில் புதிதாக பயணியர் நிழற்குடை அமைப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டு அதற்காக ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தனி நபர் ஒருவர் அந்த இடத்தில் நிழற்குடை அமைக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து நிதியை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சிரங்குடி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் சிராங்குடி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரதீப் ராஜ் சவுக்கான், அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை.செந்தில், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் பட்டுக்கோட்டை- மன்னார்குடி போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    • சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மறியலில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை விபத்துகளை ஏற்படுத்தும் குலமங்கலம் மெயின் ரோட்டை சீரமைக்க கோரி இன்று மறியல் போராட்டம் நடந்தது.

    பல ஆண்டுகளாக சாலைகள் போடப்படாமல் இருக்கும் வ.உ.சி 1 , 2, அண்ணா தெரு , பாரதிதாசன் தெரு, சத்யா நகர், ஆபீசர் டவுன் ஆகிய தெருவில் சாலைகளை உடனடியாக அமைக்க வேண்டும். சத்தியமூர்த்தி மெயின்ரோடு , பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய வேண்டும்.குடிநீரில் சாக்கடை கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

    22, 23, 24 ஆகிய வார்டுகளில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி பகுதிக்குழு செயலாளர் பாலு தலைமையில் இந்த மறியல் போராட்டம் மீனாம்பாள்புரம்-குலமங்கலம் மெயின் ரோடு சக்கரை செட்டியார் படிப்பகம் அருகில் நடந்தது.

    இதில் 23-வது வார்டு கவுன்சிலர் குமரவேல், மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன் ஆகியோர் பேசினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்தனர்.

    • ராசிபுரம் டவுன் ஆத்தூர் ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ராசிபுரம்:

    ராசிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சந்திரசேகரபுரம், தெற்குப்பட்டி, அக்ரஹாரம், முருங்கப்பட்டி, களரம்பட்டி, அணைப்பாளையம் தேவேந்திர் தெரு போன்ற பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் அணைப்பாளையம் ஏரி தண்ணீர் குடியிருப்பு பகுதிகளிலும், வயல்களிலும் புகுந்தது.

    இதனால் விளை நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. சந்திரசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 3 ஆழ்துளை கிணறுகள் ஏரி தண்ணீரால் மூழ்கியது.

    இதன் காரணமாக தெற்குப்பட்டி, சந்திரசேக ரபுரம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளில் வசிக்கும் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் வசதி கிடைக்க வில்லை என்றும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மின்மோட்டார்களை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறினர். மேலும் தெற்குப்பட்டியில் உள்ள ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு குடிநீர் குழாய் பதிக்க வேண்டும், அணைப்பாளையம் ஏரி தண்ணீரை திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் கோரிக்கை களை நிறைவேற்றித் தரக் கோரி சந்திரசேகரபுரம், அக்ரகாரம், தெற்குபட்டி, முருங்கப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலி குடங்களுடன் ராசிபுரம் டவுன் ஆத்தூர் ரோட்டில் உள்ள காஞ்சி சூப்பர் மார்க்கெட் அருகில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மூதாட்டி ஒருவர் தரையில் படுத்து போராட்டம் நடத்தினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சி) வனிதா தெற்குப்பட்டியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிக்கு புதிய பைப் லைன் உடனடியாக போட்டு தரப்படும் என்று கூறினார். அதன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். கசாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
    • சாலை மறியலில் ஈடுபட்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குண்டுகட்டாக தூக்கி சென்று 9 பேரை கைது செய்தனர்.

    சேலம்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் பைரோஸ்கான் தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர் . ஆனால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குண்டுகட்டாக தூக்கி சென்று 9 பேரை கைது செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • ஏற்காடு மலைகிராமங்களுக்கு செல்லும் சாலை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் கடந்த 3 ஆண்டுகளாக பழுதடைந்து வாகனம் செல்ல முடியாத அளவுக்கு இருந்தது.
    • 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று காலை தங்கள் குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஏற்காடு:

    ஏற்காட்டில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது தலைச்சோலை கிராமம். இந்த கிராமம் உள்ளிட்ட மலைகிராமங்களுக்கு செல்லும் சாலை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் கடந்த 3 ஆண்டுகளாக பழுதடைந்து வாகனம் செல்ல முடியாத அளவுக்கு இருந்தது.

    இந்நிலையில் கடந்த மாதம் கோடை விழாவிற்காக சாலை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது சாலை முழுவதுமாக போடப்படாமல் ஒரு சில இடங்களில் மட்டும் ஜல்லி கொட்டப்பட்டு அப்படியே விடப்பட்டது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்தது.

    இதையடுத்து கடந்த மாதம் கிராம மக்கள் பள்ளி குழந்தைகளுடன் கொட்டசேடு வழியாக குப்பனூர் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணிநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஏற்காடு போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஒரு வாரத்தில் இந்த சாலை புதுப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஆனால் சொன்னபடி சாலை சரிசெய்யப்படவில்லை. இதையடுத்து ஏற்காடு குப்பனூர் செல்லும் வழியாக சேலம் செல்லும் சாலையில் தலைசோலை ,செங்காடு,பாசிபள்ளம், கெடக்காடு,உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று காலை தங்கள் குழந்தைகளுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    300-க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடியதால் பரபரப்பு உண்டானது. அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

    • பூசாரி தோட்டத்தில் சுரங்கபாலம் அமைப்பதற்காக இடத்தில் பணி நடைபெறாமல் இருந்தது.
    • சுரங்கபாதை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மண் நிரப்பும் பணி நடைபெற்றதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டி வரை அகல ரெயில் பாதை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முன்னதாக பூசாரி தோட்டத்தில் சுரங்கபாலம் அமைப்பதற்காக அந்த இடத்தில் பணி நடைபெறாமல் இருந்தது. தற்போது இங்கு சுரங்கபாதை அமைக்க முடியாது என ரெயில்வே நிர்வாகம் மறுத்த விட்டது. இந்நிலையில் இப்பகுதி மக்கள் முன்பு இருந்த ரெயில்வே கேட் வழியை பயன்படுத்தி பள்ளிக்கு செல்லுதல், பிணம் கொண்டு செல்லுதல் மற்றும் அன்றாட பணிகளுக்கு பயன்படுத்தினர். தற்போது சுரங்கபாதை அமைக்காமல் ெரயில்வே பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுரங்கபாதை அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் மண் நிரப்பும் பணி நடைபெற்றது. இதனை அப்போது பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.

    இது தொடர்பாக வேதா ரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ பெளலின், துணை போலீஸ் சூப்பி ரண்டு முருகவேல் ஆகியோர் அப்பகுதி மக்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு மாவட்ட கலெக்டரின் பரிந்துரைக்கு அனுப்பி மாநில நிதியில் இருந்து சுரங்கபாதை கட்ட முயற்சி எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு உறுதி அளித்ததால் மறியல் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த பொம்மியம்பட்டி ஊராட்சி கோம்பையில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
    • இதுவரையிலும் பள்ளி கட்டட இல்லாமல் பள்ளிக் குழந்தைகள் தனியார் இடத்தில் வாடகை எடுத்து ஆசிரியர்கள் பெற்று வந்தனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை அடுத்த பொம்மியம்பட்டி ஊராட்சி கோம்பையில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி கட்டிடம் பழுதான நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு பிடித்து புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் இதுவரையிலும் பள்ளி கட்டட இல்லாமல் பள்ளிக் குழந்தைகள் தனியார் இடத்தில் வாடகை எடுத்து ஆசிரியர்கள் பெற்று வந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பள்ளி குழந்தைகளுடன் பெற்றோர் சாலை மறியல் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மறியல் காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதித்தது.

    அரக்கோணத்தில் நேற்று இரவு மின்சார ரெயில் தாமதத்தால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயில் என்ஜின் முன்பாக நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அரக்கோணம்:

    சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் மின்சார ரெயில் தினமும் இரவு 7.35 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து 7.40 மணிக்கு திருத்தணிக்கு புறப்பட்டு செல்லும்.

    நேற்று 7.35 மணிக்கு வந்த மின்சார ரெயில் அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட பாயிண்ட் கோளாறு காரணமாக 8.50 மணி வரை அரக்கோணம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் 100-க்கும் மேற்பட்டோர் ரெயில் என்ஜின் முன்பாக நின்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்பாபு, வெங்கடேசன், ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ரெயில் மறியல் செய்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பயணிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    தண்டவாளத்தில் பாயிண்ட் கோளாறு சரிசெய்யப்பட்ட பின்னர் அரக்கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மின்சார ரெயில் 9.10 மணிக்கு திருத்தணி நோக்கி புறப்பட்டு சென்றது. ரெயில் மறியல் காரணமாக சென்னையில் இருந்து அரக்கோணம் வரும் 2 மின்சார ரெயில்கள் திருவலங்காடு ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு காலதாமதமாக அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.

    இந்த சம்பவத்தால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    நத்தம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    செந்துறை:

    திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தீராத பிரச்சினையாக உள்ளது. நத்தம் அருகே சிறுகுடி ஊராட்சிக்குட்பட்ட பூசாரிபட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு ஆழ்குழாய் கிணறு அமைத்து அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோட்டார் பழுதானது. இதனால் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. மோட்டாரை சீரமைக்க வேண்டும் என பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் சிறுகுடி- நத்தம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் மற்றும் நத்தம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் பொது மக்களிடம் சமரசம் பேசினர். மோட்டாரை சீரமைக்க உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.
    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்டத்தில் 12 இடங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
    நாகர்கோவில்:

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்டத்தில் 12 இடங்களில் இன்று மறியல் போராட்டம் நடந்தது. காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் முன்பு நடந்த மறியலுக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் போராட்டத்திற்கு தலைமை தாங்கினார். நகர தலைவர் அலெக்ஸ், மாவட்ட துணைத்தலைவர் மகேஷ்லாசர், நிர்வாகிகள் கே.டி.உதயம், தங்கம் நடேசன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, செயற்குழு உறுப்பினர் உசேன், மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணி, மரிய ஸ்டீபன், அஜிஸ்,

    ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெற்றிவேல், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, சி.பி.எம்.எல். மாவட்ட செயலாளர் அந்தோணி முத்து, திராவிடர் கழக மண்டல செயலாளர் வெற்றிவேந்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷமிட்டவாறு அண்ணா பஸ் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை பாதுகாப்புக்கு நின்ற நாகர்கோவில் டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    125-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    கருங்கலில் நடந்த மறியல் போராட்டத்தில் கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாரும், திங்கள்நகரில் நடந்த மறியல் போராட்டத்தில் பிரின்ஸ் எம்.எல்.ஏ.வும் கலந்து கொண்டனர். அவர்களையும் மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் கொட்டாரம், திருவட்டார், குலசேகரம், மார்த்தாண்டம், மேல்புறம் உள்ளிட்ட இடங்களிலும் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை போலீசார் கைது செய்தனர்.
    ×