search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "picket"

    • இதற்கு மாநில செயலாளர் ராஜாராமன் தலைமை தாங்கினார்.
    • மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சாவூா்:

    தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி 10 ஆண்டுகள் பணி செய்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் .

    24-2-2018 முத்தரப்பு ஒப்பந்தப்படி ஒப்பந்த ஊழியர்கள் அடையாளம் கண்டு தினக்கூலி ரூ.380 வழங்கிட வேண்டும்,அனைவருக்கும் கருணை தொகை வழங்க வேண்டும்.

    கே2 அக்ரீமெண்ட் படி அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாநில செயலாளர் ராஜாராமன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜு, வட்ட தலைவர் அதிதூதன மைக்கேல் ராஜ், சி.ஐ.டி.யூ மாவட்டத் துணைத் தலைவர் அன்பு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அறந்தாங்கி:

    மணமேல்குடி தாலுகா கிருஷ்ணாஜி பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட திருமங்களப்பட்டினத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில்இங்கு முறையான தார்ச்சாலை, குடிநீர் வசதி, பேருந்து நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லையென கூறப்படு கிறது. இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச்சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து, எஸ்டிபிஐ கட்சியுடன் இணைந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணாஜி பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்து அங்கு வந்த மணமேல்குடி போலீ சார் மறியலில் ஈடுட்ட பொது மக்களுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட னர். இந்த சமாதான பேச்சு வார்த்தையில் உட ன்பாடு எட்டவில்லை. இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. 

    • அதிகாரிகள் பேச்சுவார்த்தை
    • உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டது

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த ரங்காபுரம் கூட்ரோட்டில், பயணிகள் நிழற்கூடம் அமைக்க நேற்று பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது பக்கத்தில் வசிக்கும் ஒருவர் தன்னுடைய பட்டா நிலத்தில் நிழற்கூடம் அமைக்க கூடாது என கூறியதாக கூறப்படுகிறது.

    இதை அறிந்த பகுதி மக்கள் நிழற்கூட பணியை தொடங்க வேண்டும் என்று கூறி, சோளிங்கர்-காவேரிப்பாக்கம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பிடிஓ முகமது சைபுதீன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், விஏஒ முரளி மனோகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மேசிட், யோக பிரகாஷ், ஒன்றிய பொறியாளர் ஏகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேசி மறியலை கைவிட செய்தனர்.

    மேலும், நிழற்கூடம் அமைய உள்ள இடத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்தை மீண்டும் அளவீடு செய்து பணிகளை தொடங்க செய்தனர். பின்னர் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டது.

    • மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட குள்ளவீரன்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.
    • அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், கொளத்தூர் நெடுஞ்சாலையில் திடீரென குடிநீர் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சிக்கு உட்பட்ட குள்ளவீரன்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிபட்டு வந்தனர்.

    இந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், கொளத்தூர் நெடுஞ்சாலையில் திடீரென குடிநீர் கேட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    மறியல் குறித்து தகவல் அறிந்த மேட்டூர் போலீசார் மற்றும் நகராட்சி பொறியாளர் மணிமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், அந்த வழியாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • இருக்கூர் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையம் போயன்தோட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா. இவரது மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த பசுங்கன்று குட்டியை, மர்ம விலங்கு கடித்து கொன்றது.
    • அப்போது உடனடியாக இப்பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தை புலி என கருதப்படும் மர்ம விலங்கை பிடித்து வனபகுதியில் விடுவித்து, மக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, இருக்கூர் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையம் போயன்தோட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்ராஜா. இவரது மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த பசுங்கன்று குட்டியை, மர்ம விலங்கு கடித்து கொன்றது.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த இருக்கூர் கிராம நிர்வாக அலுவலர் வேனுகோபால், நாமக்கல் வனவர்கள் சந்திரசேகர், பிரியங்கா ஆகியோர் மர்ம விலங்கின் கால் தடங்களை பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் கன்றுகுட்டியை சிறுத்தை புலி தாக்கி இருக்கலாம் என தெரிவித்தனர். இதனால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து அச்சத்தில் இருந்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில், செந்தில் ராஜாவின் தோட்டத்திற்கு அருகில் குடியிருக்கும் ராஜ்குமார் என்பவர் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்து வரும் நாயை, மர்ம விலங்கு கடித்து கொன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து, இருக்கூர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், இன்று காலை பரமத்தி-ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் உள்ள பிரிவு சாலையின் குறுக்கே அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது உடனடியாக இப்பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தை புலி என கருதப்படும் மர்ம விலங்கை பிடித்து வனபகுதியில் விடுவித்து, மக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    மறியல் குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரமத்தி வேலூர் சேகர் எம்.எல்.ஏ, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் வனத்துறை அதிகாரி சந்திரசேகர் தலைமையான குழுவினர் மற்றும் பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி கலையரசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மர்ம விலங்கை விரைவில் பிடித்து அச்சத்தை போக்குவதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இருபுறமும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு பேருந்துகள், லாரிகள், கார்கள் என ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • கொடியேந்தி ஊர்வலம் செல்ல தடை விதித்ததால் பரபரப்பு
    • போலீசாருடன் வாக்குவாதம்

    திருச்சி, 

    தைப்பூசத்தை முன்னிட்டு விசுவ இந்து பரிசத் அமைப் பினர் அகில இந்திய செயலாளர் சானுமலைஜி தலை–மையில் இன்று காவிரி படித்துறைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் பால் குடம், காவடி, வேல் மற்றும் அனுமன் கொடியுடன் பாத யாத்திரை–யாக வயலூர் முருகன் கோவிலுக்கு புறப் பட்டனர்.அப்போது அங்கு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் போலீசார் அவர்களிடம் கொடியேந்தி சொல்ல அனுமதிக்க இயலாது என கூறினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு மற் றும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் தொடர்ந்து அம்மா மண்டபம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் கொடிகள் இல்லாமல் பாதயாத்திரைக்கு செல்லவும், நடுவில் ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க வயலூர் வரை போலீசார் பாதுகாப்புக்கு வருவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து அனைவரும் பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

    • சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த 2011 - 2013 ஆண்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கிணறு வெட்டப்பட்டது.
    • அந்த மனுவில பொதுமக்கள் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து இன்று கொல்லிமலை அடிவாரப்பகுதியான காரவள்ளியில் பொதுமக்கள் கடைகளை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை அடிவாரம் காரவள்ளி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்த 2011 - 2013 ஆண்டில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக கிணறு வெட்டப்பட்டது. இந்த கிணற்றில் இருந்து அப்பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிநீரை பயன்படுத்தி வந்த னர். அதன்பின் அடுத்து சில ஆண்டுகளில் 7 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிணற்றை தூர்வாரியும் ஆழப்படுத்தி மின்மோட்டார் வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

    இந்த நிலையில், இந்த கிணற்றின் அருகா

    மையில் உள்ள நிலத்தின் உரிமையாளர் ஞானசே கரன் என்பவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கிணறு தன்னுடையது எனவும் கிணற்றில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியாது என மின்மோட்டார் மற்றும் மின்சார வயர்களை அப்புறப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடிநீர் இன்றி தவித்து வந்த அப்பகுதியினர் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டர் என பலரிடமும் மனு அளித்தனர்.

    ஆனால் அந்த மனு தொடர்பாக அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து இன்று கொல்லிமலை அடிவாரப்பகுதியான காரவள்ளியில் பொதுமக்கள் கடைகளை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேலும் 3 மணி நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டு வரும் மக்களிடம் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராத

    தால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் தொடர்ந்து

    சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இச்சம்பவம் சேந்தமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வாண்டான் கோட்டை பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை என குற்றச்சாட்டு
    • உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி

    ஆலங்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே திருவரங்குளம் வாண்டா கோட்டை கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவ்வழியாக செல்லும் அரசு பேருந்துங்கள் இங்குள்ள பஸ் நிறுத்த்தில் நீண்ட காலமாக நிறுத்துவதில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும்மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்து வந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் போக்குவரத்து கழகத்தில் பலமுறை மனு கொடுத்தும் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் சாலையில் நின்றதால் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இது குறித்து தகவல் அறிந்தசம்பவ இடத்திற்கு வந்த வல்லத்திரக்கோட்டை போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • குடிநீர் கேட்டு அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல்
    • போக்குவரத்து பாதிப்பு

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமத்தூர் குடிக்காடு காலனி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் இப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாதநிலை ஏற்பட்டது. மேலும் இப்பகுதி மக்கள் சமைப்பதற்கும், குடிநீருக்கும் மற்றும் தங்களின் அன்றாட தேவைகளுக்கும் போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் காலை திடீரென்று பெருமத்தூர் குடிக்காடு-வைத்தியநாதபுரம் சாலை வழியாக வந்த ஒரு அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது முறையாக குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சுப்பிரமணியபுரம் பகுதியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்
    • கடந்த 5 தினங்களாக குடிநீரின்றி அப்பகுதி மக்கள் தவித்து வந்தனர்

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி 47வது வார்டுக்கு உட்பட்ட சுப்ரமணியபுரம் பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியின் போது சுப்பிரமணியபுரம் பகுதிக்கு செல்லும் பிரதான குடிநீர் குழாயை நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் உடைத்துவிட்டனர். இதனால் கடந்த 5 தினங்களுக்கு மேலாக சுப்ரமணியபுரம் பகுதிக்கு மாநகராட்சி குடிநீர் வரவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பிலும், அ.ம.மு.க. கவுன்சிலர் செந்தில்நாதன் தரப்பிலும் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உடைக்கப்பட்ட குடிநீர் குழாயை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனால் கடந்த 5 தினங்களாக குடிநீரின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இதரப் பகுதிகளை நோக்கி குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அலையும் நிலை உள்ளது.இந்நிலையில் குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து இன்று கவுன்சிலர் செந்தில்நாதன் தலைமையில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கே.கே நகர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கவுன்சிலர் செந்தில்நாதன் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குடிநீர் குழாயை சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


    • மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட கன்னந்தேரியில் இன்று காலை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட னர்.
    • பொங்கல் பரிசு உடன் கரும்பை அரசு அறிவிக்க கோரி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட கன்னந்தேரியில் இன்று காலை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக கரும்பை அரசு அறிவிக்கும் என்ற நோக்கில் பெருமளவில் விவசாயிகள் கரும்பை பயிர் செய்தனர். ஆனால் இந்த ஆண்டு அரசு அறிவித்த பொங்கல் பரிசில் கரும்பு இடம்பெறாததால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

    பெருமளவில் முதலீடு செய்து ஓராண்டாக வளர்த்தும் உரிய விலை கிடைக்காது என்ற ஆதங்கத்தில் பொங்கல் பரிசு உடன் கரும்பை அரசு அறிவிக்க கோரி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து விவசாயிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

    • சேலம் லீ பஜார் அருகே உள்ள 1 3/4 ஏக்கர் நிலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது.
    • அந்த இடத்தில் வீடு கட்டி கொடுக்க முடியாது என்பதற்கான கடிதத்தை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பித்த தாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் லீ பஜார் அருகே உள்ள 1 3/4 ஏக்கர் நிலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்த்து லீ பஜார் தரப்பில் கோர்ட்டில் வழக்கு

    தொடரப்பட்டது. தற்போது வரை வழக்கு நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை.

    இது தொடர்பாக பலமுறை

    அந்த பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

    ஆனாலும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் வருவாய் துறை சார்பில், அந்த இடத்தில் வீடு கட்டி கொடுக்க முடியாது என்பதற்கான கடிதத்தை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பித்த தாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர், தெப்பக்குளம் அருகே 3 ரோடு செல்லும் சாலையில் திரண்டனர். பின்னர் அங்கு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டம் நடந்தது. இதற்கிடையே அங்கு வந்த செவ்வாய்பேட்டை போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனாலும் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை. வருவாய்த்துறையினர் வந்து வீடு கட்டி தருவதாக உறுதி அளித்தால் தான் அங்கிருந்து கலைந்து செல்வோம் என்றும் கூறினார். இதனால் மறியல் போராட்டம் நீடித்து வருகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவுவதால், அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபடி உள்ளனர். 

    ×