என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருமங்களப்பட்டினத்தில் சாலை வசதி கேட்டு மறியல் போராட்டம்
அறந்தாங்கி:
மணமேல்குடி தாலுகா கிருஷ்ணாஜி பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட திருமங்களப்பட்டினத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில்இங்கு முறையான தார்ச்சாலை, குடிநீர் வசதி, பேருந்து நிறுத்தம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லையென கூறப்படு கிறது. இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச்சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையை கடந்து செல்லும் வாகன ஓட்டிகளும், அப்பகுதி பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து, எஸ்டிபிஐ கட்சியுடன் இணைந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணாஜி பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றதை தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்து அங்கு வந்த மணமேல்குடி போலீ சார் மறியலில் ஈடுட்ட பொது மக்களுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட னர். இந்த சமாதான பேச்சு வார்த்தையில் உட ன்பாடு எட்டவில்லை. இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.






