என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் நிலையம் கட்டக்கோரி மறியல்
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை
- உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டது
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த ரங்காபுரம் கூட்ரோட்டில், பயணிகள் நிழற்கூடம் அமைக்க நேற்று பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது பக்கத்தில் வசிக்கும் ஒருவர் தன்னுடைய பட்டா நிலத்தில் நிழற்கூடம் அமைக்க கூடாது என கூறியதாக கூறப்படுகிறது.
இதை அறிந்த பகுதி மக்கள் நிழற்கூட பணியை தொடங்க வேண்டும் என்று கூறி, சோளிங்கர்-காவேரிப்பாக்கம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பிடிஓ முகமது சைபுதீன், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், விஏஒ முரளி மனோகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் மேசிட், யோக பிரகாஷ், ஒன்றிய பொறியாளர் ஏகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் பேசி மறியலை கைவிட செய்தனர்.
மேலும், நிழற்கூடம் அமைய உள்ள இடத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நிலத்தை மீண்டும் அளவீடு செய்து பணிகளை தொடங்க செய்தனர். பின்னர் ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டது.






