search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் சத்திரம் அருகே வீடு கட்டி தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
    X

    சேலம் அரிசிபாளையம் பாவேந்தர் தெரு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லீ பஜார் சாலையில்அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேலம் சத்திரம் அருகே வீடு கட்டி தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

    • சேலம் லீ பஜார் அருகே உள்ள 1 3/4 ஏக்கர் நிலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது.
    • அந்த இடத்தில் வீடு கட்டி கொடுக்க முடியாது என்பதற்கான கடிதத்தை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பித்த தாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் லீ பஜார் அருகே உள்ள 1 3/4 ஏக்கர் நிலம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது. இதனை எதிர்த்து லீ பஜார் தரப்பில் கோர்ட்டில் வழக்கு

    தொடரப்பட்டது. தற்போது வரை வழக்கு நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை.

    இது தொடர்பாக பலமுறை

    அந்த பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.

    ஆனாலும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் வருவாய் துறை சார்பில், அந்த இடத்தில் வீடு கட்டி கொடுக்க முடியாது என்பதற்கான கடிதத்தை மாவட்ட கலெக்டரிடம் சமர்ப்பித்த தாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர், தெப்பக்குளம் அருகே 3 ரோடு செல்லும் சாலையில் திரண்டனர். பின்னர் அங்கு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மறியல் போராட்டம் நடந்தது. இதற்கிடையே அங்கு வந்த செவ்வாய்பேட்டை போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனாலும் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை. வருவாய்த்துறையினர் வந்து வீடு கட்டி தருவதாக உறுதி அளித்தால் தான் அங்கிருந்து கலைந்து செல்வோம் என்றும் கூறினார். இதனால் மறியல் போராட்டம் நீடித்து வருகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் பரபரப்பு நிலவுவதால், அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபடி உள்ளனர்.

    Next Story
    ×