search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் மறியல் போராட்டம்
    X

    தஞ்சையில் போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சையில் மறியல் போராட்டம்

    • இதற்கு மாநில செயலாளர் ராஜாராமன் தலைமை தாங்கினார்.
    • மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சாவூா்:

    தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி 10 ஆண்டுகள் பணி செய்த ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் .

    24-2-2018 முத்தரப்பு ஒப்பந்தப்படி ஒப்பந்த ஊழியர்கள் அடையாளம் கண்டு தினக்கூலி ரூ.380 வழங்கிட வேண்டும்,அனைவருக்கும் கருணை தொகை வழங்க வேண்டும்.

    கே2 அக்ரீமெண்ட் படி அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூா் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இன்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாநில செயலாளர் ராஜாராமன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட துணை தலைவர் கோவிந்தராஜு, வட்ட தலைவர் அதிதூதன மைக்கேல் ராஜ், சி.ஐ.டி.யூ மாவட்டத் துணைத் தலைவர் அன்பு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு அலுவலகம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×