search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nellai"

    • நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது.
    • மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதில், கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும். கார்த்திகை தீப திருவிழா 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் பரணி தீபம் ஏற்றப்படும். அதன்படி இன்று மாலை நெல்லை யப்பர் கோவிலில் சாயரட்சை பூஜைகள் முடி வடைந்ததும் சுவாமி நெல்லையப்பர் சன்னதி மகா மண்டபத்தில் ஹோமங்கள் நடைபெறு கிறது.

    தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பரணி தீபத்திற்கு பூஜைகள் செய்து சுவாமி மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து தீபத்திற்கு சிறப்பு தீபாரா தனைகள் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். நாளை இந்த பரணி தீபம் ஊர்வலமாக எடுத்து வரப் பட்டு சுவாமி சன்னதி முன்பு வைக்கப்படும். தொடர்ந்து மகா ருத்ர தீபம் எனப்படும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஒரு மாதத்திற்கு கொண்டாடப்படுகிறது.
    • மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஏற்பாட்டில் 5, 930 பேருக்கு கேக் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஏழை-எளியோர், முதியோர், ஆதரவற்றோர், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஒரு மாதத்திற்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் கொண்டா டப்படுகிறது.

    அதன்படி அவரது பிறந்தநாளான நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தின் கீழ் சாப்பிடும் நெல்லை மத்திய மாவட்டத்திற்குட்பட்ட நெல்லை, பாளை சட்டமன்ற தொகுதிகளில் மாநகராட்சியில் உள்ள 40 பள்ளிகளில் பயிலும் 2,825 மாணவர்க ளுக்கும், மானூர் ஒன்றிய பகுதியில் 59 பள்ளிகளில் 2,621 மாணவர்களுக்கும், பாளை ஒன்றியத்தில் 9 பள்ளிகளில் பயிலும் 484 மாணவர்களுக்கும் என மொத்தம் 5, 930 பேருக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஏற்பாட்டில் கேக் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இதனையொட்டி மாண வர்களுக்கு காலை உணவுடன் கேக் வழங்கு வதற்கான பெட்டிகளை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகி சுப.சீதாராமன், மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் மாலைராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான்மைதீன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டை யப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
    • ஜே.சி.பி. மற்றும் டேங்கர் லாரி உதவியுடன் மழை நீரை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவர் அனுராதா செய்தார்.

    நெல்லை:

    பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பிருந்தாவன் நகர், ஆசிரியர் டி காலனி, மீனாட்சிசுந்தரம் நகர், அருணாசலபுரம் 6-வது தெரு குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மழைநீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் வீடுகளில் இருந்த வெளியேற முடியாமலும், அவர்களது அன்றாட பணிகள் முடங்கி கிடப்பதாகவும் பஞ்சாயத்து தலைவி அனுராதா ரவிமுருகனிடம் புகார் கூறினர்.

    இதையடுத்து உடனடியாக அங்கு சென்று மழைநீர் தேங்கி கிடக்கும் பகுதிகளை பஞ்சாயத்து தலைவர் அனுராதா ரவிமுருகன் பார்வையிட்டார். பின்னர் உடனடியாக ஜே.சி.பி. மற்றும் டேங்கர் லாரி உதவியுடன் மழை நீரை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, ஒன்றிய மேற்பார்வையாளர் முருகன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் தண்டபாணி குமரன், வார்டு உறுப்பினர்கள் சுரேஷ், பூர்ணிமா மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • டேக்வாண்டோ போட்டியில் 14 வயது பிரிவில் ஹர்ஷன் தங்கப்பதக்கம் வென்றார்.
    • 19 வயது பிரிவில் விஷ்வா, முகேஷ். கரண் ஆகியோர் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.

    சிங்கை:

    நெல்லை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் டேக்வாண்டோ போட்டி பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இதில் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 7 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    டேக்வாண்டோ போட்டியில் 14 வயது பிரிவில் மாணவன் ஹர்ஷன் தங்கப்பதக்கமும், மாணவன் அடைக்கலம் வெள்ளி பதக்கமும் மற்றும் நிஷாந்த் ராபின் வெண்கல பதக்கமும், மாணவி பிரபா வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்.

    17 வயது பிரிவில் மாணவர்கள் சிவகுமார், முத்துகுமார், கலையரசன் ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.19 வயது பிரிவில் மாணவர்கள் விஷ்வா, முகேஷ். கரண் ஆகியோர் தங்க பதக்கம் வென்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

    டேக்வாண்டோவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகள் பயிற்சி அளித்த ஆசிரியர் ஆகியோரை பள்ளி தாளாளர் ராபர்ட், முதன்மை முதல்வர் ஆனிமெட்டில்டா மற்றும் பள்ளி இயக்குனர் ஜோசப் லியாண்டர், முதல்வர் பொன்மதி, துணைமுதல்வர்கள் லெட்சுமி மற்றும் ஜாக்குலின் ஷீலா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் பாராட்டினர்.

    • கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
    • நெல்லை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 96.35 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    கூடுதலாக

    20 சதவீத மழை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 96.35 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை மாவட்டம் முழுவதும் 367.33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தற்போது நவம்பர் மாதத்தில் 21-ந்தேதி வரை 249 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவை விட 19.59 சதவீதம் கூடுதலாகும்.

    தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் அம்பை, சேரன்மகாதேவி மற்றும் பாப்பாக்குடி வட்டாரங்களில் கார் பருவ நெல் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 53.92 ஹெக்டேர் நிலங்கள் வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகி றது. அவர்களுக்கு நிவாரணம் தொடர்பான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

    நெல்லை மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை முன் கார் பருவத்தில் நெல் 870 ஹெக்டர் பரப்பிலும், கார் பருவத்தில் 3,131 ஹெக்டேர் பரப்பிலும், பிசான பருவத்தில் நெல் 37 ஹெக்டேர் பரப்பிலும், மக்காச்சோளம் 854, சோளம் மற்றும் கம்பு ஆகிய சிறுதானிய பயிர்களும் பயிறு வகைகள் 4275 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மாவட்டத்தில் இதுவரை 426 ஹெக்டர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    பயிர் காப்பீடு

    மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்து 154 விவசாயிகள் உளுந்து மற்றும் பாசிப்பயிறு ஆகியவற்றுக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். மக்காச்சோள பயிருக்கு இதுவரை 346 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் அடுத்த மாதம் 30-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து விடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இந்த நிதி ஆண்டில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளின் கீழ் தாமிரபரணி வடிநிலை உபகோட்டத்தின் கீழ் உள்ள வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான், கண்ணடியன், கோடகன், பாளையங்கால்வாய் ஆகிய கால்வாய்களில் 48 கிலோமீட்டர் அளவு தூர்வாரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நலத்திட்ட உதவிகள்

    முன்னதாக தோட்டக்க லை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 85 ஆயிரம் மானியத்தில் பவர் டில்லர்களை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினர்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, சேரன்மகாதேவி சப்- கலெக்டர் முகமது சபீர் ஆலம், வேளாண் இணை இயக்குனர் முருகானந்தம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணகுமார், தோட்டக்க லைத்துறை துணை இயக்குனர் இளங்கோ மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குப்பைகளை தனித்தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
    • வீட்டின் பின் புறத்திலும், இடை முடுக்குகளிலும், கழிவு நீர் ஓடைகளிலும், பொது இடங்களிலும் குப்பைகளை கொட்டக்கூடாது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின்படி மேலப்பா ளையம் மண்டலத்தில் தூய்மை பணி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    விழிப்புணர்வு

    மாநகராட்சி துணை கமிஷனர் தாணு மூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் பேரில் மண்டல உதவி கமிஷனர் காளிமுத்து மற்றும் சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து தங்கள் வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மேலப்பாளையம் பகுதிகளில் குப்பைகளை வீட்டின் பின் புறத்திலும், இடை முடுக்குகளிலும், கழிவு நீர் ஓடைகளிலும், பொது இடங்களிலும் கொட்டக்கூடாது எனவும் மீறினால் மாநகராட்சி சார்பாக அபராதம் விதிக்கப்படும் என்றும் ஒலிபெருக்கி மூலம் வீதி வீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் அப்துல் வஹாப், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மணிகண்ட பூபதி, சொக்கலிங்கம் உட்பட வார்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • கார்த்திகா பள்ளி குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார்.
    • முருகம்மாள் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

    நெல்லை:

    நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளம் நடுத்தெருவை சார்ந்தவர் உய்க்காட்டான். இவரது மனைவி முருகம்மாள். இவர்கள் மகன் வேல்முருகன், மகள் கார்த்திகா (25).

    ஊய்க்காட்டான் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் பணியின் போது இறந்ததால் அவரது மகன் வேல்முருகன் வாரிசு அடிப்படையில் வேலை பார்த்து வருகிறார்.

    கார்த்திகா பட்டப் படிப்பை முடித்துவிட்டு ஊரில் பள்ளி குழந்தை களுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்துள்ளார். அவருக்கு வேல்முருகன் திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் வேல்முருகன் வேலைக்கு சென்ற நிலையில், அவரது தாய் முருகம்மாளும் அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார். இதையடுத்து அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கார்த்திகா தீயில் கருகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகம்மாள் கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அவர்கள் உடனடியாக நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஆதம் அலி தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கார்த்திகா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஜே.சி.பி. எந்திரம் மூலம் வடிகால் அமைத்து மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளை மேயர் பார்வையிட்டார்.
    • சேதமான சாலைகளை செப்பனிடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மேயர் அறிவுறுத்தினார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேலப்பாளையம் 31-வது வார்டு மேல குலவணிகர்புரம், குறிச்சி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களை மேயர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தற்காலிகமாக சிறு மழைநீர் வடிகால் அமைத்து மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு மீண்டும் மழைநீர் தேங்காத வண்ணம் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    அதைதொடர்ந்து 48-வதுவார்டு கருங்குளம் ராஜாஜி தெரு, மற்றும் ஜான்ஸ் ஹெலன் சிட்டி பிரதான சாலையில் தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்திடவும், சேதமான சாலைகளை உடனடியாக செப்பனி டவும் சம்பந்தப் பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, துணை கமிஷனர் தாணுமூர்த்தி, கவுன்சிலர் ஆமினாசாதிக், உதவி செயற்பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் முருகன், சுகாதார அலு வலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் உடன் இருந்தனர்

    • அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல அலுவலகம் முன்பு இன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல அலுவலகம் முன்பு இன்று தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் ஜோதி தலைமை தாங்கினார். எச்.எம்.எஸ். மாநில துணைத்தலைவர் சுப்பிரமணியம், ஏ.ஐ.டி.யு.சி. நெல்லை பொதுச் செயலாளர் உலகநாதன், டி.டி.எஸ். மாநில துணைத்தலைவர் சந்தானம், ஐ.என்.டி.யு.சி. பொதுச் செயலாளர் மகாராஜன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பணி ஓய்வு பெறும்போது அனைத்து பண பலன்களையும் உடனடியாக வழங்கிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து ஊழியர்க ளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தி இறுதிப்படுத்த வேண்டும். சேவை துறையாக செயல்படும் போக்குவரத்து கழகங்களின், வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    • கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக வாறுகால் அமைக்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
    • புதிய பாதையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோட்டில் ஸ்ரீபுரம் சந்திப்பில் இருந்து ஊருடை யார்புரம் வழியாக தச்ச நல்லூர் செல்லும் சாலை யின் தொடக்கத்தில் ஸ்ரீபுரம் சந்திப்பு பகுதியில் அச்சாலையின் குறுக்காக கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக வாறுகால் அமைக்கும் பணி இன்று முதல் தொடங்கியது.

    தடுப்பு அமைப்பு

    இந்த பணியை ஒட்டி சாலையில் குறுக்காக பேரி கார்டுகள் வைத்து தடுப்பு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த சாலை வழியாக ஊருடையார்புரம் செல்வதற்கும் இருபுறமும் உள்ள வணிக நிறுவனங்க ளுக்கு செல்லவும், பெட்ரோல், டீசல் ஏற்றி செல்வதற்கும் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது. தற்போது வாறு கால் பணிகள் தொடங்கி உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்வ தற்கு நெல்லை மாநகர போலீசார் சார்பில் ஏற்பாடு கள் செய்யப்பட்டு இருந்தது. அந்த புதிய நடைமுறை யானது இன்று முதல் அமலுக்கு வந்தது.

    போக்குவரத்து மாற்றம்

    அதன்படி ஸ்ரீபுரம் சந்திப்பு முதல் தச்சநல்லூர் வரை செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் ஸ்ரீபுரம் சந்திப்பில் இருந்து ஈரடுக்கு மேம்பாலம், சந்திப்பு பஸ் நிலையம், மதுரை ரோடு, முத்துராம் தியேட்டர் சந்திப்பு வழியாக தச்ச நல்லூர் சென்றன.

    இரண்டாவதாக ஸ்ரீபுரம் சந்திப்பு முதல் ஊருடையான் குடியிருப்பு வரை சென்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாக னங்கள் ஈரடுக்கு மேம்பா லம், சந்திப்பு பஸ் நிலையம், மதுரை ரோடு, முத்துராம் தியேட்டர் சந்திப்பு, தச்சநல்லூர் சிவன் கோவில் தெரு வழியாக ஊருடையான் குடியிருப்புக்கு சென்றன.

    இதேபோல் ஸ்ரீபுரம் சந்திப்பு முதல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வரை செல்லும் கனரக வாகனங்கள் ஸ்ரீபுரம் சந்திப்பில் இருந்து ஈரடுக்கு மேம்பாலம், சந்திப்பு பஸ் நிலையம், மதுரை ரோடு, முத்துராம் தியேட்டர் சந்திப்பு, தச்சநல்லூர் சிவன் கோவில் தெரு வழியாக இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் நிறுவனத்திற்கு சென்றன.

    இதன் காரணமாக இந்த புதிய பாதையில் போக்கு வரத்து நெரிசல் காணப் பட்டது. அதனை ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் நின்று சரி செய்தனர்.

    • பருவமழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
    • மாநகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்களுக்கு சென்று கமிஷனர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக செய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இவற்றை வெளியேற்றி சுகாதார சீர்கேடு ஏற்படா மல் தடுக்கும் விதமாக மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மாநகர பகுதியில் உள்ள 4 மண்ட லங்களிலும் பெரும்பாலான தெருக்களில் சமீபத்தில் அமைக்கப்பட்ட புதிய தார்ச்சாலைகள் 2 நாட்கள் பெய்த கனமழைக்கு தாக்கு பிடிக்காமல் சேதமடைந்து விட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர். தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கப்பட்டதன் காரணமாகவே புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீர் தேங்கி கிடப்பதாக மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

    இதையடுத்து கமிஷனர் அவ்வப்போது மாநகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்க ளுக்கு சென்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    • 3 பேர் கும்பல் சக்தியின் 2 கைகளையும் சரமாரி வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.
    • இடப்பிரச்சினை முற்றியதில் மடத்தானின் மகன்கள் முருகனின் கையை வெட்டினர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் வயல் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சக்தி(வயது 32). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தனது 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    சரமாரி வெட்டு

    அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் சக்தியின் மொபட்டில் மோதவிட்டு அவரை கீழே தள்ளி அவரது 2 கைகளையும் சரமாரி வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் படுகாயம் அடைந்த சக்திக்கு சந்திப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அறிந்த டவுன் போலீசார் அங்கு விரைந்த சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் 3 பேர் இருந்ததும், மெயின் சாலையில் நின்று 2 பேர் நோட்டமிட்டதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த காமிராக்களில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    சக்தி கட்டியுள்ள வீட்டின் இடம் மீது அவரது தூரத்து உறவினரான மடத்தான் என்பவர் தனக்கும் உரிமை உள்ளதாக கூறி அடிக்கடி சக்தியின் தந்தை முருகனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு இடப்பிரச்சினை முற்றியதில் மடத்தானின் மகன்கள் சக்தியின் தந்தை முருகனின் கையை வெட்டினர்.

    இந்நிலையில் அந்த பிரச்சினை அவர்களுக்குள் தொடர்ந்து புகைந்து வரும் நிலையில் நேற்று மடத்தான் மற்றும் அவரது மனைவி பாப்பா ஆகியோரின் தூண்டுதலின்பேரில் அவரது மகன்கள் சிவா, முத்துப்பாண்டி மற்றும் 3 பேர் இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சிவா, முத்துப்பாண்டி ஆகியோரின் பெயர்கள் ரவுடிகள் பட்டியலில் இருப்பதாகவும், அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    ×