search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nellai"

    • இன்று மாலை சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு சொக்கப்பனை தீபம் என்ற ழைக்கப்படும் ருத்ர தீபம் ஏற்றப்பட உள்ளது.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை யொட்டி இன்று மாலை சுவாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    சொக்கப்பனை தீபம்

    நேற்று மகா மண்டபத்தில் நந்தி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பரணி தீபத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நெல்லையப்பர் மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    இந்நிலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி இன்று காலையில் மூலவர் மற்றும் உற்சவர்கள், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இன்று மாலையில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி டவுன் ஆர்ச்சுக்கு அடுத்தப்படியாக பாரதியார் தெரு திரும்பும் சாலையில் உள்ள சொக்கப்பனை முக்கு பகுதியில் சொக்கப்பனை தீபம் ஏற்றும் வைபம் நடக்க உள்ளது.

    மாற்றுப்பாதை

    இதற்காக டவுன் சொக்கப்பனை முக்கு பகுதியில் பனை மரங்கள் மற்றும் பனை ஓலைகள் கொண்டு சொக்கப்பனை அமைக்கப்பட்டு வருகிறது. இன்று மாலையில் பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு சொக்கப்பனை தீபம் என்ற ழைக்கப்படும் ருத்ர தீபம் ஏற்றப்பட உள்ளது.

    இதற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வா கத்தினர் செய்து வருகின்ற னர். இதனை காண ஏரா ளமான பக்தர்கள் வருவார்கள். இதனையொட்டி அந்த வழியாக செல்லும் வாகனங்களை மாற்றுபாதையில் இயக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடு களை போக்குவரத்து போலீ சார் செய்து வருகின்றனர்.

    • சாமி காவல்துறையில் 99-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
    • ஜான்சி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரது மகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    பாளை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜக்கம்மாதாய் என்ற ஜான்சி (வயது 38). இவரது கணவர் சாமி காவல்துறையில் 99-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் ஜான்சி தனது 17 வயது மகனுடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகே மொபட்டில் ஜான்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் நகையைப் பறித்து சென்று விட்டதாக ஐகிரவுண்டு போலீசில் அவர் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜான்சி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரது மகனை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் தாய்-மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தகராறில் ஏற்பட்ட கைகலப்பில் ஜான்சியின் கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் மகனை சிக்க வைக்க போலீசில் பொய் புகார் அளித்ததாகவும் ஜான்சி போலீசில் தெரிவித்தார்.இதையடுத்து அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு போலீ சார் 2 பேரையும் எச்சரித்து அனுப்பினர்.

    • மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • பாளை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் சுற்றித்திரிந்த 15 மாடுகள் பிடிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் படி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    துணை கமிஷனர் தாணு மூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் படி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில், பாளை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகள் மற்றும் 5 கன்றுக்குட்டிகள் பிடிக்கப்பட்டு அங்குள்ள மாநகராட்சி அலுவலக பூங்காவில் அடைக்கபட்டது.

    • பல்வேறு அளவுகளில் அவல், பொரிகளை பாக்கெட்டுகளில் அடைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.
    • அளவை பொறுத்து பனை ஓலைகள் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

    நெல்லை:

    திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை வீடுகளில் பொதுமக்கள் பூஜை செய்து வழிபடுவார்கள்.

    களை கட்டிய பஜார்கள்

    இதையொட்டி பொருட்கள் வாங்குவதற்காக பொது மக்கள் கடைகளுக்கு செல்வ தால் நெல்லையில் மார்கெட்டுகள் மற்றும் முக்கிய பஜார்களில் பொருட்கள் விற்பனைகளை கட்டி உள்ளது.

    கார்த்திகை தீப வழிபாட்டுக்குரிய அவல், பொரி கடலை, இலை, பூ, பழம், அகல் விளக்குகள், கொழுக்கட்டை தயாரிக்க பயன்படுத்தும் பனை ஓலை, சிறுவர்கள் கொளுத்தி மகிழும் சூந்து குச்சி போன்றவைகளை வாங்குவதற்காக இன்று டவுன் ரதவீதிகள், பாளை மார்க்கெட் பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியதை காண முடிந்தது.

    அவல், பொரி- பனை ஓலை

    பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டத்தில் காத்து நிற்பதை தடுக்கும் விதமாக அவல், பொரி உள்ளிட்டவைகளை பல்வேறு அளவுகளில் பாக்கெட்டுகளில் அடைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர்.

    பாளை தெற்கு பஜார், மகாராஜா நகர், மேலப் பாளையம் உழவர் சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாட தேவையான பூஜை பொருட்கள் உள ளிட்டவை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    பாளை மார்க்கெட், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளிலும் பனை ஓலை விற்பனை மும்முரமாக நடைபெற்றது. அவை பெரியது, சிறியது என அளவை பொறுத்து ரூ.100 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.

    அகல் விளக்குகள்

    இதேபோல் முக்கிய இடம் பிடிக்கும் அகல் விளக்குகளின் விற்பனையும் சூடு பிடித்தது. டவுன் ரதவீதிகளில் உள்ள தற்காலிக தள்ளுவண்டி கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிவன் விளக்கு, அகல் விளக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது.

    மேலும் புதுவரவான மயில் விளக்கு, யானை விளக்கு, லட்சுமி விளக்கு ஆகியவை ரூ.250-க்கும், தாமரை பூ விளக்கு ரூ.100-க்கும், பாவை விளக்கு ரூ.80-க்கும், அணையா விளக்கு ரூ.70-க்கும், துளசி மாடம் ரூ. 30-க்கும் விற்பனையானது. சுமார் 250 வகையான விளக்குகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    மண் விளக்குகளில் வாடிக்கையாளர்கள் விரும்பும் நிறங்களில் அவர்கள் விரும்பும் டிசைன்களை உடனுக்குடன் தயார் செய்தும் சில கடைகளில் வழங்கினர். அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    • வெற்றிவேலிடம் சதீஷ் பீடி கேட்டதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • மறைத்து வைத்திருந்த கத்தியால் வெற்றிவேல் கழுத்தில் குத்திவிட்டு சதீஷ் தப்பி ஓடிவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை டவுனை அடுத்த பழைய பேட்டை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் வெற்றிவேல் (வயது 19), கரகாட்ட கலைஞர். அதே பகுதி நாராயணசாமி கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் சதீஷ் (20).

    சம்பவத்தன்று வெற்றி வேலிடம் சதீஷ் குடிக்க பீடி கேட்டதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள பெட்டிக் கடையில் வெற்றி வேல் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெற்றிவேல் கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காய மடைந்த வெற்றிவேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். இது குறித்து பேட்டை போலீ சார் வழக்குப் பதிவு செய்து சதீஷை தேடி வருகின்றனர்.

    • தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அன்று மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்ப்புற வினியோக செயற்பொறியாளர் காளிதாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    நெல்லையை அடுத்த தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கி ழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. அதன்படி தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வவிக்னேஷ் நகர், பாலாஜி அவன்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்து பூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதயநகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேலும் மின்னோ ட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையை பராமரிக்க ஒத்துழைப்பு நல்கும்படி பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொ ள்ளப்படு கிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • 23-வது வார்டு பகுதியில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணிகள் நடைபெற்றது
    • பஸ் நிறுத்தம் பகுதியில் ஒட்டப்பட்ட விளம்பர போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தை செயல்படுத்தும் விதமாக கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் பேரில் பல்வேறு தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின்படியும் உதவி கமிஷனர் வாசுதேவன் ஆலோசனையின் பேரிலும் நெல்லை மண்டலம் அலகு எண் 3-க்கு உட்பட்ட 23-வது வார்டு பகுதியில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணிகள் நடைபெற்றது. அதன்படி டவுன் காட்சி மண்டபம் பஸ் நிறுத்தம் பகுதியில் அனுமதியின்றி ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது பஸ் நிறுத்தம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.

    • நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது.
    • மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    நெல்லை:

    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதில், கார்த்திகை தீபத்திருவிழாவும் ஒன்றாகும். கார்த்திகை தீப திருவிழா 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாள் பரணி தீபம் ஏற்றப்படும். அதன்படி இன்று மாலை நெல்லை யப்பர் கோவிலில் சாயரட்சை பூஜைகள் முடி வடைந்ததும் சுவாமி நெல்லையப்பர் சன்னதி மகா மண்டபத்தில் ஹோமங்கள் நடைபெறு கிறது.

    தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பரணி தீபத்திற்கு பூஜைகள் செய்து சுவாமி மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி மகா தீபம் ஏற்றப்படுகிறது.

    அதனைத்தொடர்ந்து தீபத்திற்கு சிறப்பு தீபாரா தனைகள் நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். நாளை இந்த பரணி தீபம் ஊர்வலமாக எடுத்து வரப் பட்டு சுவாமி சன்னதி முன்பு வைக்கப்படும். தொடர்ந்து மகா ருத்ர தீபம் எனப்படும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.

    • உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஒரு மாதத்திற்கு கொண்டாடப்படுகிறது.
    • மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஏற்பாட்டில் 5, 930 பேருக்கு கேக் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா ஏழை-எளியோர், முதியோர், ஆதரவற்றோர், மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் ஒரு மாதத்திற்கு நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் கொண்டா டப்படுகிறது.

    அதன்படி அவரது பிறந்தநாளான நாளை மறுநாள்(திங்கட்கிழமை) முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தின் கீழ் சாப்பிடும் நெல்லை மத்திய மாவட்டத்திற்குட்பட்ட நெல்லை, பாளை சட்டமன்ற தொகுதிகளில் மாநகராட்சியில் உள்ள 40 பள்ளிகளில் பயிலும் 2,825 மாணவர்க ளுக்கும், மானூர் ஒன்றிய பகுதியில் 59 பள்ளிகளில் 2,621 மாணவர்களுக்கும், பாளை ஒன்றியத்தில் 9 பள்ளிகளில் பயிலும் 484 மாணவர்களுக்கும் என மொத்தம் 5, 930 பேருக்கு மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் ஏற்பாட்டில் கேக் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இதனையொட்டி மாண வர்களுக்கு காலை உணவுடன் கேக் வழங்கு வதற்கான பெட்டிகளை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான் அனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகி சுப.சீதாராமன், மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் மாலைராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான்மைதீன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டை யப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
    • ஜே.சி.பி. மற்றும் டேங்கர் லாரி உதவியுடன் மழை நீரை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை பஞ்சாயத்து தலைவர் அனுராதா செய்தார்.

    நெல்லை:

    பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பிருந்தாவன் நகர், ஆசிரியர் டி காலனி, மீனாட்சிசுந்தரம் நகர், அருணாசலபுரம் 6-வது தெரு குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக மழைநீர் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் வீடுகளில் இருந்த வெளியேற முடியாமலும், அவர்களது அன்றாட பணிகள் முடங்கி கிடப்பதாகவும் பஞ்சாயத்து தலைவி அனுராதா ரவிமுருகனிடம் புகார் கூறினர்.

    இதையடுத்து உடனடியாக அங்கு சென்று மழைநீர் தேங்கி கிடக்கும் பகுதிகளை பஞ்சாயத்து தலைவர் அனுராதா ரவிமுருகன் பார்வையிட்டார். பின்னர் உடனடியாக ஜே.சி.பி. மற்றும் டேங்கர் லாரி உதவியுடன் மழை நீரை அகற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, ஒன்றிய மேற்பார்வையாளர் முருகன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர் தண்டபாணி குமரன், வார்டு உறுப்பினர்கள் சுரேஷ், பூர்ணிமா மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • டேக்வாண்டோ போட்டியில் 14 வயது பிரிவில் ஹர்ஷன் தங்கப்பதக்கம் வென்றார்.
    • 19 வயது பிரிவில் விஷ்வா, முகேஷ். கரண் ஆகியோர் தங்க பதக்கம் வென்றுள்ளனர்.

    சிங்கை:

    நெல்லை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சார்பில் டேக்வாண்டோ போட்டி பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இதில் அகஸ்தியர்பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 7 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கல பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    டேக்வாண்டோ போட்டியில் 14 வயது பிரிவில் மாணவன் ஹர்ஷன் தங்கப்பதக்கமும், மாணவன் அடைக்கலம் வெள்ளி பதக்கமும் மற்றும் நிஷாந்த் ராபின் வெண்கல பதக்கமும், மாணவி பிரபா வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்.

    17 வயது பிரிவில் மாணவர்கள் சிவகுமார், முத்துகுமார், கலையரசன் ஆகியோர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.19 வயது பிரிவில் மாணவர்கள் விஷ்வா, முகேஷ். கரண் ஆகியோர் தங்க பதக்கம் வென்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

    டேக்வாண்டோவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகள் பயிற்சி அளித்த ஆசிரியர் ஆகியோரை பள்ளி தாளாளர் ராபர்ட், முதன்மை முதல்வர் ஆனிமெட்டில்டா மற்றும் பள்ளி இயக்குனர் ஜோசப் லியாண்டர், முதல்வர் பொன்மதி, துணைமுதல்வர்கள் லெட்சுமி மற்றும் ஜாக்குலின் ஷீலா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட பலர் பாராட்டினர்.

    • கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
    • நெல்லை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 96.35 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    கூடுதலாக

    20 சதவீத மழை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 96.35 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை மாவட்டம் முழுவதும் 367.33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தற்போது நவம்பர் மாதத்தில் 21-ந்தேதி வரை 249 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவை விட 19.59 சதவீதம் கூடுதலாகும்.

    தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் அம்பை, சேரன்மகாதேவி மற்றும் பாப்பாக்குடி வட்டாரங்களில் கார் பருவ நெல் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 53.92 ஹெக்டேர் நிலங்கள் வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகி றது. அவர்களுக்கு நிவாரணம் தொடர்பான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

    நெல்லை மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை முன் கார் பருவத்தில் நெல் 870 ஹெக்டர் பரப்பிலும், கார் பருவத்தில் 3,131 ஹெக்டேர் பரப்பிலும், பிசான பருவத்தில் நெல் 37 ஹெக்டேர் பரப்பிலும், மக்காச்சோளம் 854, சோளம் மற்றும் கம்பு ஆகிய சிறுதானிய பயிர்களும் பயிறு வகைகள் 4275 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மாவட்டத்தில் இதுவரை 426 ஹெக்டர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    பயிர் காப்பீடு

    மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்து 154 விவசாயிகள் உளுந்து மற்றும் பாசிப்பயிறு ஆகியவற்றுக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். மக்காச்சோள பயிருக்கு இதுவரை 346 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் அடுத்த மாதம் 30-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து விடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இந்த நிதி ஆண்டில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளின் கீழ் தாமிரபரணி வடிநிலை உபகோட்டத்தின் கீழ் உள்ள வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான், கண்ணடியன், கோடகன், பாளையங்கால்வாய் ஆகிய கால்வாய்களில் 48 கிலோமீட்டர் அளவு தூர்வாரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நலத்திட்ட உதவிகள்

    முன்னதாக தோட்டக்க லை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 85 ஆயிரம் மானியத்தில் பவர் டில்லர்களை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினர்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, சேரன்மகாதேவி சப்- கலெக்டர் முகமது சபீர் ஆலம், வேளாண் இணை இயக்குனர் முருகானந்தம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணகுமார், தோட்டக்க லைத்துறை துணை இயக்குனர் இளங்கோ மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×