என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
நெல்லை மாநகராட்சி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரம்
By
மாலை மலர்26 Nov 2023 2:36 PM IST

- மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- பாளை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் சுற்றித்திரிந்த 15 மாடுகள் பிடிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின் படி மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
துணை கமிஷனர் தாணு மூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் படி மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையாளர் காளிமுத்து மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில், பாளை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சுற்றித்திரிந்த 15 மாடுகள் மற்றும் 5 கன்றுக்குட்டிகள் பிடிக்கப்பட்டு அங்குள்ள மாநகராட்சி அலுவலக பூங்காவில் அடைக்கபட்டது.
Next Story
×
X