search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் இதுவரை 20 சதவீதம் கூடுதல் மழை- கலெக்டர்  தகவல்
    X

    கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றதையும், அதில் பங்கேற்ற அதிகாரிகள், விவசாயிகளையும் படத்தில் காணலாம்.

    நெல்லை மாவட்டத்தில் நவம்பர் மாதத்தில் இதுவரை 20 சதவீதம் கூடுதல் மழை- கலெக்டர் தகவல்

    • கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
    • நெல்லை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 96.35 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது கலெக்டர் கார்த்திகேயன் பேசியதாவது:-

    கூடுதலாக

    20 சதவீத மழை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 96.35 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த ஆண்டில் கடந்த அக்டோபர் மாதம் வரை மாவட்டம் முழுவதும் 367.33 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. தற்போது நவம்பர் மாதத்தில் 21-ந்தேதி வரை 249 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழை அளவை விட 19.59 சதவீதம் கூடுதலாகும்.

    தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழையினால் அம்பை, சேரன்மகாதேவி மற்றும் பாப்பாக்குடி வட்டாரங்களில் கார் பருவ நெல் சாகுபடி செய்யப்பட்ட சுமார் 53.92 ஹெக்டேர் நிலங்கள் வருவாய் துறை மற்றும் வேளாண் துறை அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகி றது. அவர்களுக்கு நிவாரணம் தொடர்பான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

    நெல்லை மாவட்டத்தில் நடப்பு மாதம் வரை முன் கார் பருவத்தில் நெல் 870 ஹெக்டர் பரப்பிலும், கார் பருவத்தில் 3,131 ஹெக்டேர் பரப்பிலும், பிசான பருவத்தில் நெல் 37 ஹெக்டேர் பரப்பிலும், மக்காச்சோளம் 854, சோளம் மற்றும் கம்பு ஆகிய சிறுதானிய பயிர்களும் பயிறு வகைகள் 4275 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மாவட்டத்தில் இதுவரை 426 ஹெக்டர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    பயிர் காப்பீடு

    மாவட்டத்தில் இதுவரை 25 ஆயிரத்து 154 விவசாயிகள் உளுந்து மற்றும் பாசிப்பயிறு ஆகியவற்றுக்கு பயிர் காப்பீடு செய்துள்ளனர். மக்காச்சோள பயிருக்கு இதுவரை 346 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். மீதமுள்ள விவசாயிகள் அடுத்த மாதம் 30-ந் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து விடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இந்த நிதி ஆண்டில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிகளின் கீழ் தாமிரபரணி வடிநிலை உபகோட்டத்தின் கீழ் உள்ள வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான், கண்ணடியன், கோடகன், பாளையங்கால்வாய் ஆகிய கால்வாய்களில் 48 கிலோமீட்டர் அளவு தூர்வாரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நலத்திட்ட உதவிகள்

    முன்னதாக தோட்டக்க லை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 85 ஆயிரம் மானியத்தில் பவர் டில்லர்களை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினர்.

    கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, சேரன்மகாதேவி சப்- கலெக்டர் முகமது சபீர் ஆலம், வேளாண் இணை இயக்குனர் முருகானந்தம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணகுமார், தோட்டக்க லைத்துறை துணை இயக்குனர் இளங்கோ மற்றும் அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×