தச்சநல்லூரில் நாளை மறுநாள் மின்தடை

தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அன்று மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தச்சநல்லூரில் நாளை மறுநாள் மின்தடை
Published on

நெல்லை:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் நெல்லை நகர்ப்புற வினியோக செயற்பொறியாளர் காளிதாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

நெல்லையை அடுத்த தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கி ழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. அதன்படி தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வவிக்னேஷ் நகர், பாலாஜி அவன்யூ, வடக்கு பாலபாக்யா நகர், தெற்கு பாலபாக்யா நகர், மதுரை ரோடு, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்து பூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதயநகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேலும் மின்னோ ட்டத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் போன்றவற்றை அகற்றி மின்பாதையை பராமரிக்க ஒத்துழைப்பு நல்கும்படி பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொ ள்ளப்படு கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com