search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுஇடங்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்-மாநகராட்சி அதிகாரி எச்சரிக்கை
    X

    மேலப்பாளையம் பகுதியில் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி தெளித்த காட்சி.

    பொதுஇடங்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்-மாநகராட்சி அதிகாரி எச்சரிக்கை

    • குப்பைகளை தனித்தனியாக பிரித்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
    • வீட்டின் பின் புறத்திலும், இடை முடுக்குகளிலும், கழிவு நீர் ஓடைகளிலும், பொது இடங்களிலும் குப்பைகளை கொட்டக்கூடாது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் உத்தரவின்படி மேலப்பா ளையம் மண்டலத்தில் தூய்மை பணி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    விழிப்புணர்வு

    மாநகராட்சி துணை கமிஷனர் தாணு மூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின் பேரில் மண்டல உதவி கமிஷனர் காளிமுத்து மற்றும் சுகாதார அலுவலர் அரசகுமார் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் நடராஜன் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து தங்கள் வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மேலப்பாளையம் பகுதிகளில் குப்பைகளை வீட்டின் பின் புறத்திலும், இடை முடுக்குகளிலும், கழிவு நீர் ஓடைகளிலும், பொது இடங்களிலும் கொட்டக்கூடாது எனவும் மீறினால் மாநகராட்சி சார்பாக அபராதம் விதிக்கப்படும் என்றும் ஒலிபெருக்கி மூலம் வீதி வீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் அப்துல் வஹாப், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மணிகண்ட பூபதி, சொக்கலிங்கம் உட்பட வார்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×