search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையம் பகுதியில் மழை நீர் தேங்கிய பகுதியில் மேயர் ஆய்வு
    X

    மழை நீர் தேங்கிய பகுதியில் மேயர் சரவணன் ஆய்வு மேற்கொண்டபோது எடுத்த படம்.

    மேலப்பாளையம் பகுதியில் மழை நீர் தேங்கிய பகுதியில் மேயர் ஆய்வு

    • ஜே.சி.பி. எந்திரம் மூலம் வடிகால் அமைத்து மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளை மேயர் பார்வையிட்டார்.
    • சேதமான சாலைகளை செப்பனிடவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மேயர் அறிவுறுத்தினார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேலப்பாளையம் 31-வது வார்டு மேல குலவணிகர்புரம், குறிச்சி பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் மழைநீர் தேங்கிய இடங்களை மேயர் சரவணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்பகுதியில் போர்க்கால அடிப்படையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தற்காலிகமாக சிறு மழைநீர் வடிகால் அமைத்து மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளை பார்வையிட்டு மீண்டும் மழைநீர் தேங்காத வண்ணம் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    அதைதொடர்ந்து 48-வதுவார்டு கருங்குளம் ராஜாஜி தெரு, மற்றும் ஜான்ஸ் ஹெலன் சிட்டி பிரதான சாலையில் தேங்கிய மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்திடவும், சேதமான சாலைகளை உடனடியாக செப்பனி டவும் சம்பந்தப் பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, துணை கமிஷனர் தாணுமூர்த்தி, கவுன்சிலர் ஆமினாசாதிக், உதவி செயற்பொறியாளர் சேகர், உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் முருகன், சுகாதார அலு வலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் உடன் இருந்தனர்

    Next Story
    ×