search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayawati"

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்ய உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மிரட்டல் விடுத்துள்ளார். #LokSabhaElections2019 #Mayawati
    லக்னோ:

    மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணா பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தற்போதைய எம்பியான ஜோதிராதித்ய சிந்தியா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் லோகேந்திர சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவர் திடீரென தேர்தலில் இருந்து விலகியதுடன், காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டார்.

    இதனால் காங்கிரஸ் கட்சி மீது மாயாவதி கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்துவதில் பாஜகவுக்கு காங்கிரஸ் எந்த விதத்திலும் சளைத்தது அல்ல. குணா மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரை காங்கிரஸ் அரசு கட்டாயப்படுத்தி, வாபஸ் பெற வைத்துள்ளது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி தனது சொந்த சின்னத்தில் தேர்தலை சந்தித்து காங்கிரசுக்கு பதிலடி கொடுக்கும். அத்துடன், மாநிலத்தில் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை மறுபரிசீலனை செய்வோம்.

    உத்தர பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்றாலும், பகுஜன் சமாஜ் கட்சி- சமாஜ்வாடி கூட்டணி வெற்றி பெறக்கூடாது என காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். இது அவர்களின் சாதி மனப்பான்மை, குறுகிய மனப்பான்மை மற்றும் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது. எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

    குணா தொகுதியில் மே 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #LokSabhaElections2019 #Mayawati
    உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் சேர்ந்து உருவாக்கியிருக்கும் மகா கூட்டணி தேசத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை என்று பிரதமர் மோடி கடுமையாக தாக்கினார். #LokSabhaElections2019 #Modi #ModiCampaign
    கன்னாஜ்:

    உத்தர பிரதேச மாநிலம் கன்னாஜ் பகுதியில் நடந்த இறுதிக்கட்ட பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்துகொண்டு, கன்னாஜ், எட்டாவா, பரூக்காபாத் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய லோக் தளம் ஆகியவை சேர்ந்து அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த சந்தர்ப்பவாதிகள் அனைவரும் சேர்ந்து எதற்கும் உதவாத அரசைத்தான் அமைக்க  விரும்புகிறார்கள். இவர்களின் மந்திரம் முழுவதுமே சாதியைப் பற்றிப்பேசி, சாமானிய மக்களிடம் கொள்ளையடிப்பதுதான்.

    உண்மையில் சந்தர்ப்பவாதிகள் சேர்ந்து அமைத்துள்ள கூட்டணி மிகப்பெரிய ஊழல் கூட்டணி. இவர்களின் நோக்கமே மக்களுக்கு பயன்தராத அரசை உருவாக்குவதுதான். எவ்வளவுதான் எதிர்க்கட்சிகள் முயற்சி எடுத்தாலும் அவர்களால் மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது. எதிர்க்கட்சிகள் சேர்ந்து அமைத்துள்ள ஊழல் கூட்டணி தலைவர்கள் தங்களின் வாரிசுகளின் நலன்கள் குறித்துதான் நினைக்கிறார்களே தவிர, தேசத்தின் நலன் குறித்து கவலைப்படவில்லை. பாலகோட் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கும் இவர்கள், பயங்கரவாதிகளுக்காக கண்ணீர் வடிக்கிறார்கள்.

    கன்னாஜ் தொகுதியில் அம்பேத்கரை அவமதித்த சமாஜ்வாடி கட்சிக்காக பகுஜன் சமாஜ் கட்சி ஓட்டு கேட்கிறது. ஆட்சிக்கு வருவதற்காகவும் மோடியை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும் பெகன்ஜி (மாயாவதி) மகிழ்ச்சியுடன் வாக்கு கேட்கிறார். 


    இவ்வாறு அவர் பேசினார்.

    4ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள இந்த தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. வரும் 29-ம் தேதி வாக்குப்பதிவு நடைபற உள்ளது. கன்னாஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் போட்டியிடுகிறார். #LokSabhaElections2019 #Modi #ModiCampaign
    பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறலை தேர்தல் கமிஷன் கண்டுகொள்வதில்லை என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். #PMModi #ElectionCommission #Mayawati
    லக்னோ:

    பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தொடர்ந்து பலமுறை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார் கூறப்பட்டாலும், அவர் சுதந்திரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்திய தேர்தல் கமிஷனுக்கு நன்றி. அதனாலேயே அவர் பெண்களுக்கு மரியாதை கொடுக்க தவறுவது முதல் பல்வேறு எல்லைகளையும் கடந்துவருகிறார். பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாட்டின் மீது ஒரு ஒப்பற்ற தலைவரை திணித்துள்ளது அல்லவா?



    பா.ஜனதா கட்சியும் அதன் கம்பெனியும் எதிர்க்கட்சியில் பிரதமர் பதவிக்கு யார்? என்று கேட்டு மக்களை தொடர்ந்து அவமதித்து வருகிறது. முன்புகூட நேருவுக்கு பின்னர் யார் என்ற திமிரான கேள்வி எழுந்தது. ஆனால் மக்கள் இதுபோன்ற அர்த்தமற்ற கேள்விக்கு சரியான பதிலடியை திருப்பி கொடுப்பார்கள். வெகு விரைவில் வேறு ஒருவரை அவர்கள் நிச்சயமாக கொடுப்பார்கள்.

    இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.  #PMModi #ElectionCommission #Mayawati
    உ.பி. மாநிலத்தின் கன்னோஜ் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, நமோ நமோ கோஷத்துக்கு விடை கொடுக்கும் தேர்தல் இது என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav
    லக்னோ:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், உ.பி.யின் கன்னோஜ் பகுதியில் போட்டியிடும் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவுக்கு ஆதரவு திரட்ட பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கூட்டணி சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி தலைவர் அஜித் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



    அப்போது மாயாவதி பேசுகையில், இந்த பாராளுமன்ற தேர்தலுடன் நமோ நமோ கோஷம் விடைபெற்று விடும். மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் அமல்படுத்தவில்லை என ஆவேசமாக குறிப்பிட்டார்.

    இதேபோல், சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி நாட்டுக்கு புதிய பிரதமரை தரும் என தெரிவித்தார். #LokSabhaElections2019 #Mayawati #Namonamo #AkileshYadav
    சி.பி.ஐ.யை வைத்து மோடி மிரட்டுவதால் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் பயப்படுகிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #rahulgandhi #mayawati #akhilesh

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி - சமாஜ்வாடி கட்சி ஆகியவை தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த கட்சிகள் காங்கிரசை தங்கள் கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்டன. இதனால் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் தேர்தலுக்கு பின்னர் இழுபறி நிலை ஏற்பட்டால் இந்த கட்சிகள் காங்கிரசுக்கு ஆதரவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    இதனால் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த கட்சிகளை விமர்சனம் செய்வதை தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் முதன் முதலாக அவர் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சிகளை அவர் கடுமையாக தாக்கி உள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் படாம் என்ற இடத்தில் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார். இது சமாஜ்வாடி கட்சி வலுவாக உள்ள இடம் ஆகும். அங்கு பேசிய அவர் இரு கட்சிகளையும் விமர்சித்தார்.

    உத்தரபிரதேச மாநிலத்தை பாரதீய ஜனதாவோடு சேர்ந்து சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சிகளும் நாசமாக்கிவிட்டன. இங்கு மறுபடியும் காங்கிரசை வலுவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பிரியங்காவையும், ஜோதிர் ஆதித்யா சிந்தியாவையும் பொறுப்பாளர்களாக காங்கிரஸ் நியமித்து உள்ளது.

    2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறோம். அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் இங்கு ஆட்சி அமைக்கும்.

    அகிலேஷ் யாதவும், மாயாவதியும் மோடியை பார்த்து பயப்படுகிறார்கள். கடந்த கால வரலாறுகளை புரட்டி பார்த்தால் இது நன்றாக தெரியும். சி.பி.ஐ.யை வைத்து மோடி மிரட்டுவதால் அவர்கள் அச்சப்படுகிறார்கள்.


    ஆனால் நாங்கள் மோடிக்கு பயப்படுபவர்கள் அல்ல. எங்களையும் சி.பி.ஐ.யை காட்டி மிரட்டுகிறார்கள். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மோடி தன்னை காவலாளி என்று அழைத்துக் கொள்கிறார். ஆனால் அவர் திருடர் என்று நான் சொல்கிறேன்.

    இதே வார்த்தையை சொல்லும் தைரியம் அகிலேஷ் யாதவுக்கோ, மாயாவதிக்கோ இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ராகுல்காந்தி இவ்வாறு விமர்சித்து இருப்பது பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. #rahulgandhi #mayawati #akhilesh

    உத்தர பிரதேசத்தில் எதிரும் புதிருமான தலைவர்கள் முலாயம் சிங் யாதவ், மாயாவதி இருவரும் பல ஆண்டுகளுக்கு பின் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தது தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது. #MulayamMayawati #LokSabhaElections2019
    மெயின்புரி:

    உத்தர பிரதேசத்தில் எதிரும் புதிருமாக இருந்த பகுஜன் சமாஜ்- சமாஜ்வாடி கட்சிகள், இந்த பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் எனும் நோக்கத்துடன் கூட்டணி அமைத்து களமிறங்கியுள்ளன. இதற்காக இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், மெயின்புரியில் இன்று நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில், சமாஜ்வாடி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் ஒரே மேடையில் அமர்ந்து பிரசாரம் செய்தனர். அரசியலில் எதிரும் புதிருமான இரு தலைவர்களும், பல ஆண்டுகளுக்குப் பிறகு கருத்து வேறுபாடுகளை மறந்து  ஒரே மேடையில் பிரசாரம் செய்தது கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேடையில், முதலில் பேசிய சமாஜ்வாடி எம்எல்ஏ, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் காலைத் தொட்டு வணங்கி அவரை வரவேற்று பேசினார். அப்போது, தனது ஆதரவாளர்கள் அனைவரும் மாயாவதிக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



    பின்னர் உரையாற்றிய முலாயம் சிங், “நீண்ட காலத்திற்குப் பிறகு தானும் மாயாவதியும் ஒரே மேடையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் அவரை வரவேற்பதுடன், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும் அவரை வரவேற்று, நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

    மாயாவதி பேசும்போது, “தலைவர் முலாயம் சிங் யாதவ், சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் தன்னுடன் இணைத்துள்ளார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் உண்மையான  தலைவர். குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான தலைவர். மோடி போன்று போலியான தலைவர் அல்ல” என பாராட்டினார். #MulayamMayawati #LokSabhaElections2019
    உத்தரபிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தல் விதிகளை மீறியதால், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. #ECNotice #ModelCodeofConduct
    புது டெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள தொகுதிகளுக்கு 6 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

    அந்த வகையில் கடந்த ஏப்ரல் 7 மற்றும் ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் சகரன்பூர் பகுதியில் உள்ள டியோபாண்ட் என்ற இடத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஏப்ரல் 7ம் தேதி  மாயாவதி பேசுகையில் , 'முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாக்குகளை உறவினர்கள் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காதீர்கள். அதற்கு பதிலாக மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள்.  இதனை முஸ்லிம் மக்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்' என பேசினார்.

    மாயாவதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி மீருட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 'ஒரு நாளுக்கு முன்னர் மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்குபலி மீது நம்பிக்கை உள்ளது' என பேசினார்.



    இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி பேசியது தொடர்பாக   யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு அம்மாநில தேர்தல் ஆணையம், நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர்கள் இருவரும்  24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் தரப்பில் எந்த பதிலும் அனுப்பப்படாததால், தேர்தல் ஆணையம் இன்று சாட்டையை சுழற்றியது.

    16ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் அடுத்த 72 மணி நேரத்திற்கு யோகி ஆத்தியநாத் பிரசாரம் செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதேப்போல் முன்னாள் முதல்வர் மாயாவதியும் 16ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், பொதுக்கூட்டங்களில் பேசுவது மட்டுமின்றி தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்தல், பத்திரிக்கை செய்தியாளர்களை சந்தித்தல் ஆகியவற்றிற்கும்  இந்த தடை பொருந்தும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  #ECNotice  #ModelCodeofConduct




    பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளில் வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியாகும். #Loksabhaelections2019 #ElectionCommission
    புதுடெல்லி:

    பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் கடந்த நிதியாண்டில் எவ்வளவு செலவு செய்தன? வங்கியில் எவ்வளவு கையிருப்பு வைத்துள்ளன என்ற தகவலை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளன.

    வரவு-செலவு கணக்கு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

    அதன்படி வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்து இருப்பது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியாகும். கடந்த ஆண்டு இந்த கட்சி 665 கோடி ரூபாயை கையிருப்பு வைத்து இருந்தது. இந்த ஆண்டு அந்த தொகை ரூ.670 கோடியாக உயர்ந்துள்ளது.

    அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி 2-வது இடத்தில் உள்ளது. அந்த கட்சிக்கு வங்கிகளில் ரூ.471 கோடி கையிருப்பு உள்ளது. வங்கியில் அதிக பணத்தை கையிருப்பு வைத்திருக்கும் கட்சிகளில் முதல் 2 கட்சிகளும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


    காங்கிரஸ் கட்சி ரூ.196 கோடி கையிருப்புடன் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சி ரூ.136 கோடியே வைத்திருந்தது. ஒரே ஆண்டில் 60 கோடி ரூபாயை வங்கியில் காங்கிரஸ் கட்சி சேர்த்துள்ளது.

    சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ரூ.107 கோடியுடன் 4-வது இடத்தில் இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ரூ.82 கோடி கையிருப்புடன் 5-வது இடத்தில் உள்ளது.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, ஆம்ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் தலா ரூ.3 கோடியை வங்கிகளில் கையிருப்பு வைத்துள்ளன. #Loksabhaelections2019 #ElectionCommission
    உத்தரபிரதேசம் மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தல் விதிகளை மீறியதால், 24 மணிநேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. #ECNotice #ModelCodeofConduct
    புது டெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலத்தில் 7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  நேற்று முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் கடந்த ஏப்ரல் 7 மற்றும் ஏப்ரல் 9 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவி மாயாவதி ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த ஏப்ரல் 7ம் தேதி சகரன்பூரில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் மாயாவதி பேசுகையில் , 'முஸ்லிம் வாக்காளர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் வாக்குகளை உறவினர்கள் என்பதாலோ, நண்பர்கள் என்பதாலோ பதிவிடக்கூடாது. உத்தரபிரதேசத்தில் பாஜகவை வீழ்த்த எண்ணினால், உங்கள் வாக்குகளை பிரிக்காதீர்கள். அதற்கு பதிலாக மாபெரும் கூட்டணிக்கு பதிவிடுங்கள்.  இதனை முஸ்லிம் மக்களுக்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன்' என பேசினார்.

    மாயாவதிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 9ம் தேதி மீரட்டில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் பேசுகையில், 'ஒரு நாளுக்கு முன்னர் மாயாவதி என்ன பேசினார் என்பதை கேட்டிருப்பீர்கள். அவருக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளே தேவை. மாபெரும் கூட்டணி மற்ற மக்களின் வாக்குகளை விரும்பவில்லை. உங்களுக்கு ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு அலி மீது நம்பிக்கை உள்ளது என்றால், எங்களுக்கு பஜ்ரங்பலி மீது நம்பிக்கை உள்ளது' என பேசினார்.



    இந்நிலையில் 2017ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு, சாதி மற்றும் மதத்தினை தேர்தல் பிரசாரங்களில் உபயோகிக்க தடை விதித்துள்ளது.

    இதையடுத்து தேர்தல் விதிகளை மீறி பிரசாரத்தில் பேசியதாக  நேற்று தேர்தல் ஆணையம் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோருக்கு, 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  #ECNotice #ModelCodeofConduct




    தேர்தலுக்கு பிறகு மாயாவதியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #LokSabhaelections2019 #Congress #PChidambaram
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரியும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மோடி ஆட்சியில் நமது நாடு பாதுகாப்பாக இருந்தது போலவும், 2004-ல் இருந்து 2014வரை மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது நாடு பாதுகாப்பு இல்லாமல் இருந்தது போலவும் கட்டு கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.

    மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எந்த போரும் நடக்கவில்லை. போர் பதட்ட சூழ்நிலையும் ஏற்படவில்லை. எல்லை பாதுகாப்பான நிலையில் இருந்தது.

    பயங்கரவாதிகள் ஊடுருவல் குறைந்து இருந்தது. பாதுகாப்பு படை வீரர்கள், பொது மக்கள் உயிரிழப்பு குறைந்து இருந்தது.

    ஆனால் மோடி ஆட்சியில் ஊடுருவல் அதிகரித்து உள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் பொது மக்கள் உயிரிழப்பு அதிகரித்து உள்ளது. எப்போதும் போர் பதட்ட சூழ்நிலை நிலவுகிறது. எல்லையில் வசிக்கும் 30 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.

    நிலைமை இப்படி இருக்க நாடு இப்போது பாதுகாப்பாக இருக்கிறது என்று எப்படி சொல்ல முடியும்? அவர்கள் நெஞ்சை நிமிர்த்தி எதையாவது சொல்லலாம். ஆனால் நாடு மிகுந்த பாதுகாப்பாக இருப்பதாக நான் கருத வில்லை.

    வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பாரதீய ஜனதாவுக்கு செல்வாக்கு இருப்பதாக கருத்து கணிப்புகள் கூறுவதை நான் ஏற்கவில்லை. பொதுவாக கருத்து கணிப்புகளை நான் நம்புவதில்லை. கடந்த காலங்களில் கருத்து கணிப்புகள் பொய்யாகி உள்ளன. எதிர்காலத்திலும் இது தவறாகத்தான் போகும்.

    இந்த பாராளுமன்ற தேர்தல் என்பது 30 மாநிலங்களில் வெவ்வேறு அரசியல் சூழ்நிலையில் நடக்கிறது.

    இந்த 30 மாநிலங்களில் 10 மாநிலத்தில் காங்கிரசை பாரதிய ஜனதா நேரடியாக எதிர்க்கிறது. 10 மாநிலங்களில் மாநில கட்சிகள் எதிர்க்கின்றன. மற்ற 10 மாநிலங்கள் சிறியவை. இவற்றை ஒட்டு மொத்தமாக கருத்து கணிப்பு மூலம் சொல்லிவிட முடியாது.

    கருத்து கணிப்புகள் சரியாக இருக்கும் என்று கருதினால் ஏன் தேர்தல் நடத்த வேண்டும். கருத்து கணிப்பு நடத்தி அதன் அடிப்படையில் பாராளுமன்ற தொகுதிகளை ஒதுக்கி கொடுத்து விடலாமே?

    உத்தரபிரதேசத்தை பொறுத்தவரை பகுஜன் சமாஜ்-சமாஜ்வாடி கூட்டணி வலுவாக உள்ளது. காங்கிரஸ் அங்கு வலுவான நிலையில் போட்டியிடுகிறது. அங்கு பாரதிய ஜனதாவை முந்தி எதிர்பாராத வெற்றிகளை நாங்கள் பெறுவோம்.


    உத்தரபிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பே நாங்கள் கூட்டணி வைக்க முயற்சித்தோம். ஆனால் மாயாவதி அதை விரும்பவில்லை. தேர்தல் முடிந்ததும் எங்கள் அணிக்கு மாயாவதி வருவார் என்று ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறி இருக்கிறார். தேர்தல் முடிவுகள் வந்ததும் மாயாவதி இறங்கி வருவார். எங்களுடன் கூட்டணி அமைப்பார்.

    தொகுதி பங்கீட்டில் பாரதிய ஜனதா விட்டுக் கொடுத்து சென்றதாகவும் காங்கிரஸ் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றும் கூறுவது தவறு.

    தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாவுக்கு 5 இடங்கள் வழங்கப்பட்டு உள்ளது. அதே எண்ணிக்கையில்தான் கடந்த காலத்திலும் போட்டியிட்டது.

    தமிழ்நாட்டில் நாங்கள் அதிகபட்சமாக வளைந்து கொடுத்தோம். 9 இடங்களில் மட்டும் போட்டியிடுகிறோம். தி.மு.க. குறைந்தபட்சம் 20 இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறோம். இதற்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர்கள் போட்டியிட்டு இருக்கிறார்கள்.

    மராட்டியத்தில் தேசியவாத காங்கிரசுடன் 48 இடங்களை சமமாக பகிர்ந்து கொண்டுள்ளோம். கர்நாடகாவிலும், காஷ்மீரிலும் வளைந்து கொடுத்து கூட்டணி ஏற்படுத்தி உள்ளோம். பீகார், ஜார்கண்டிலும் திருப்தியான கூட்டணியை ஏற்படுத்தி இருக்கிறோம்.

    கேரளாவில் கம்யூனிஸ்டை எதிர்த்து ராகுல் போட்டியிடுவதை தவறானதாக கருத முடியாது. ராகுல் போட்டியிடவில்லை என்றால் வேறு ஒரு காங்கிரஸ்காரர் போட்டியிட போகிறார்.

    பாரதிய ஜனதா மட்டும் தான் இந்துக்களுக்கான கட்சி என்பது போன்ற கருத்தை திணிக்க பார்க்கிறார்கள். நாங்கள் இந்துக்கள் மட்டும் அல்லாமல் அனைத்து மதத்தினருக்கும் குரல் கொடுக்கும் கட்சியாக இருக்கிறோம். மோடியும், அமித்ஷாவும் கோவிலுக்கு சென்றால் யாரும் அதை பற்றி பேசுவது இல்லை. ராகுலும், பிரியங்காவும் கோவிலுக்கு சென்றால் அதை அரசியலாக்க பார்க்கின்றனர். பிரசாரம் செய்யும் இடங்களில் அந்தபகுதி மக்கள் அழைப்பதால் வழிபாட்டு தலங்களுக்கு செல்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தெளிவாக உள்ளது. ஏழைகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியம் இருக்கிறது. ஆனால் பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கையில் உள்ள திட்டங்கள் குழப்பமான நிலையில் இருக்கிறது.

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.  #LokSabhaelections2019 #Congress #PChidambaram
    தேர்தல் நடத்தை விதிகளை மீறி மத ரீதியாக பிரசாரம் செய்த மாயாவதி மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார் அளித்து உள்ளது. #BJP #Mayawati #ElectionCommission
    லக்னோ:

    பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உத்தரபிரதேசத்தின் தியோபந்தில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, ‘காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் யாரும் வாக்களிக்கக்கூடாது. ஏனெனில் மாநிலத்தில் பா.ஜனதாவை எதிர்க்கும் ஒரே கூட்டணி எங்கள் கூட்டணிதான்’ என பேசியதாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறிய மாயாவதி மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார் அளித்து உள்ளது. மாயாவதியின் பேச்சால் வகுப்புவாத மோதல்கள் ஏற்படக்கூடும் என்றும் அது சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு தடையை ஏற்படுத்தி விடக்கூடும் எனவும் பா.ஜனதாவினர் தங்கள் மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.

    இது தொடர்பாக பா.ஜனதா நிர்வாகி ஜே.பி.எஸ்.ரத்தோர், தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவுக்கு கடிதம் எழுதியுள்ளார். #BJP #Mayawati #ElectionCommission 
    வெறுப்பு அரசியலால் பா.ஜனதா அரசு தோல்வி அடையும் என மாயாவதி கூறினார். #Mayawati #BJP
    தியோபந்த்:

    உத்தரபிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, அஜித் சிங்கின் ராஷ்டிரீய லோக் தளம் ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியின் முதல் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் தியோபந்த் என்ற இடத்தில் நேற்று நடந்தது.

    கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பேசியதாவது:-

    ‘காவலாளி’ கோஷத்தை பா.ஜனதா கையில் எடுத்து உள்ளது. இது வெற்று கோஷம். இதனால் எந்த பயனும் ஏற்படாது. வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது. கடந்த தேர்தலில் கூறிய வாக்குறுதிகளை அக்கட்சி நிறைவேற்றவில்லை.

    தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நேரத்தில் பா.ஜனதா அவசர, அவசரமாக பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளது. ஏழைகள் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு உண்மையாக அக்கறை இருந்தால் முன்பே நலத்திட்டங்களை அறிவித்து தொடங்கி இருக்க வேண்டும். தற்போது பா.ஜனதாவுக்கு பயம் ஏற்பட்டு உள்ளது. அக்கட்சி ஆட்சியை விட்டு வெளியேறும் நேரம் வந்து விட்டது.

    காங்கிரஸ் கட்சி ஆளும் தகுதியை இழந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. அக்கட்சி பல மாநிலங்களில் ஆட்சியை விட்டு அகற்றப்பட்டு விட்டது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் தருவதாக கூறும் திட்டத்தால் நாட்டில் வறுமை ஒழிந்து விடாது.

    நாட்டில் தற்போது ஊழல் பெருகி விட்டது. காங்கிரஸ் கட்சி மீது போபர்ஸ் ஊழல், பா.ஜனதா மீது ரபேல் ஊழல் என குற்றச்சாட்டு கறைபடிந்து உள்ளது. இரு கட்சிகளுக்கும் ஏற்கனவே பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டு விட்டது. எனவே மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி விடாதீர்கள்.

    சில கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு என்ற பெயரில் மக்கள் மீது கருத்து திணிப்பை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அதை நம்ப வேண்டாம்.

    நாங்கள் ஏழை மக்களுக்கு குறைந்தபட்ச உதவித்தொகை வழங்குவதற்கு பதிலாக வேலைவாய்ப்பை வழங்குவோம். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வறுமையை ஒழிக்க 20 அம்ச திட்டத்தை கொண்டு வந்தார். அது நிறைவேற்றப்பட்டதா?

    நாங்கள் மற்ற கட்சிகளை போல ஆரவாரம் செய்யாமல் அமைதியாக வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பா.ஜனதாவின் பிரிவினை சிந்தனையால் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இட ஒதுக்கீடு பயன் அவர்களை முழுமையாக சென்றடையவில்லை.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை கடனில் தத்தளிக்க விட மாட்டோம். அவர்களின் கடனை அடைப்போம். கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தொகையை அளிப்போம்.

    வெறுப்பு அரசியலால் பா.ஜனதா அரசு தோல்வி அடையும். அந்த இடத்தை எங்கள் கூட்டணி பிடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    ×