search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marxist Communist Party"

    • ரஷ்யப்புரட்சி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலனை முன்மொழிந்தது.
    • இங்கிலாந்து புரட்சி, அமெரிக்க புரட்சி, பிரெஞ்சு புரட்சி என உலக வரலாற்றில் பல புரட்சிகள் நிகழ்ந்துள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 105- வது நவம்பர் புரட்சி தின செந்தொண்டர் பேரணி, பொதுக்கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இங்கிலாந்து புரட்சி, அமெரிக்க புரட்சி, பிரெஞ்சு புரட்சி என உலக வரலாற்றில் பல புரட்சிகள் நிகழ்ந்துள்ளன. அவை அந்தந்த நாடுகளின் நலன்களை மட்டும் சார்ந்தவை. அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமான சில உரிமைகளைப் பெற்றுத் தந்தவை. அந்த நாடுகளின் எல்லைகளுக்குள் மட்டும் அதிர்வை உண்டாக்கியவை. ஆனால் 1917 நவம்பர் 7-ந் தேதி ரஷ்யாவில், லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்யப்புரட்சி, இவை அனைத்திலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. அந்தப் புரட்சி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலனை முன்மொழிந்தது.அதனால் அந்த புரட்சியின் அதிர்வுகள் உலகம் முழுவதும் உணரப்பட்டது.

    உலகில் உரிமைகளுக்காகப் போராடும் சக்திகள் அனைத்துக்கும் பல படிப்பினைகளை கொடுத்தது.தொழிலாளர்கள் நலன், பெண் உரிமை, முற்போக்கு சிந்தனை, அறிவியல் வளர்ச்சி, திட்டமிடப்பட்ட பொருளாதாரம், உலக சமாதானம் என ரஷ்ய புரட்சி பல்வேறு தளங்களில் முன் மாதிரிகளை உருவாக்கி தந்தது. அந்தப்புரட்சியை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து இன்று 27ந்தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் செந்தொண்டர் பேரணி புஸ்பா தியேட்டர், குமரன் சாலை வழியாக நொய்யல் யுனிவர்சல் தியேட்டர் அருகே வந்து நிறைவு பெறுகிறது. பின்னர் அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டத்திற்கு செ. முத்துக்கண்ணன் தலைமையேற்கிறார். . தெற்கு நகர செயலாளர் ஜெயபால் வரவேற்கிறார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான பிருந்தா காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார் மாநில செயற்குழு ஜி. சுகுமாறன் , கோவை எம். பி., பி. ஆர். நடராஜன், மாநிலக்குழு கே. காமராஜ், தீக்கதிர் முதன்மை செயலாளர் என். பாண்டி, பொது மேலாளர் எஸ். ஏ. மாணிக்கம் , சி. மூர்த்தி, மாவட்ட செயற்குழு எஸ். ஆர். மதுசூதனன், மாவட்டக்குழு ஏ.ஷகிலா ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். ராஜகோபால், கே. உண்ணிகிருஷ்ணன், கே. ரங்கராஜ், ஜி. சாவித்திரி, எஸ். சுப்பிரமணியம், ஆர். குமார். ச. நந்தகோபால், எஸ். மணிகண்டன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் இடைக்குழு செயலாளர்கள் என். கனகராஜ், பி. ஆர். கணேசன், ஆர். காளியப்பன், கே. திருவேங்கடசாமி, பொறுப்பு செயலாளர் ஏ. ஈஸ்வரமுர்த்தி, கி. கனகராஜ், என்.சசிகலா, கே. தண்டபாணி, எஸ்.கே. கொளந்தசாமி, கோ. செல்வன், ஆர்.வி.வடிவேல், ஆர். பாலன் ஆகியோர் பங்கேற்கின்றனர். முடிவில் பல்லடம் தாலுகா செயலாளர் பரமசிவம் நன்றி கூறுகிறார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அக்னிபத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
    • ராணுவத்தில் கூலியாக ஆட்களை சோ்ப்பது கண்டனத்துக்குரியதாகும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் அக்னிபத் திட்ட ஆள்சோ்ப்பு முகாமுக்கு உள்ளாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட ரூ.36.50 லட்சத்தை மத்திய அரசு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து மாா்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்ட செயலாளா் செ.முத்துக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    இந்திய நாட்டை பாதுகாக்கும் உயா்ந்த பணியைச் செய்யும் ராணுவத்தில், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சோ்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இந்தியாவில் பல கோடி இளைஞா்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்புக்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த ராணுவத்தில் கூலியாக ஆட்களை சோ்ப்பது கண்டனத்துக்குரியதாகும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கும் மத்திய அரசு, இதற்கான நிதி ஒதுக்கீட்டைக்கூட தேசப் பாதுகாப்புக்கான நிதியில் இருந்து செலவிடாமல், நகா்ப்புற உள்ளாட்சிகளின் நிதியை ஒதுக்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது.

    திருப்பூா் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் நடைபெற்றஅக்னிபத் ஆள் சோ்ப்பு முகாமுக்கான செலவுக்கு திருப்பூா் மாநகராட்சி ரூ.12 லட்சம், 6 நகராட்சிகள் தலா ரூ.3 லட்சம் வீதமும், 15 பேரூராட்சிகளில் 11 பேரூராட்சிகள் தலா ரூ. 50 ஆயிரம் வீதமும், 4 பேரூராட்சிகள் தலா ரூ.25 ஆயிரம் வீதமும் நிதி வழங்கியுள்ளன. ஏற்கெனவே மாநில அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டைக்கூட முழுமையாக வழங்காமல் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வளா்ச்சிப் பணிகளுக்கு நிதியில்லாமல் சிக்கித் தவிக்கிறது. ஆகவே, அக்னிபத் திட்டத்துக்காக உள்ளாட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட ரூ.36.50 லட்சத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொழிலையும் மக்கள் வாழ்வையும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்.
    • மின்சாரம் வாங்க மத்திய அரசு, மாநில அரசை நிர்பந்தம் செய்யக்கூடாது,

    அவினாசி :

    கார்ப்பரேட் கம்பெனிகளிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க மத்திய அரசு, மாநில அரசை நிர்பந்தம் செய்யக்கூடாது, தொழிலையும் மக்கள் வாழ்வையும் பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவினாசி ஒன்றிய குழு சார்பில் மங்கலம் சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, சி ஐ டி யு .விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் முத்துசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடாசலம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, சண்முகம், உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத, நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத, நடவடிக்கைகளை கண்டித்தும், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் கடுமையாக உயர்த்தியதை கண்டித்தும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதை கண்டித்தும், அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்ததை கண்டித்தும், கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை வழங்கி, ஏழை மக்களின் மீது வரிச்சுமையை அதிகரித்த மத்திய அரசின் மக்கள் விரோதபோக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கோரிக்கைகளை விளக்கி இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத்தலைவர் பிரவீன் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பரமசிவம், ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், மயிலாத்தாள், முருகசாமி, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரிசி மீதான ஜிஎஸ்டி. வரியை ரத்து செய்யக் கோரி தாராபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆர்ப்பாட்டம் நடத்தினர் தாராபுரம் அண்ணாசிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினா் சத்தீஸ்வரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:- மத்திய அரசு அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.மேலும், உணவுப்பொருள்களின் மீதான ஜிஎஸ்டி. வரி உயா்வை திரும்பப்பெற வேண்டும் என்றனா்.

    • பெருமாநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி பொங்குபாளையம், காளிபாளையம், கணக்கம்பாளையம் என 10 ஊராட்சிகள் உள்ளன.
    • சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    திருப்பூர் :

    பெருமாநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் காளியப்பன், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    அவிநாசி வட்டம் பெருமாநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி பொங்குபாளையம், காளிபாளையம், கணக்கம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லூா், வள்ளிபுரம், பட்டம்பாளையம், சொக்கனூா், தொரவலூா், மேற்குபதி என 10 ஊராட்சிகள் உள்ளன. இதில் 2 லட்சத்துக்கும்மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.

    விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருகின்றனா்.சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.விபத்துகள் நிகழ்ந்தால், அவசர உதவிக்கு கோவை, ஈரோடு, திருப்பூா் நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் உயிரிழப்புகளும் தொடா்ந்து ஏற்படுகின்றன.எனவே பெருமாநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படக் கூடிய அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • மாவட்ட குழு உறுப்பினர் தாமஸ், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொறுப்பாளர் தமிழ்ச்செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    பாலையம்பட்டி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை சமீபத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த மருத்துமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை பற்றாக்குறை இல்லாமல் வழங்க வேண்டும், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    அதை இயக்குவதற்கு தேவையான ஊழியர்களையும் நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நகர செயலாளர் காத்தமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் தாமஸ், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொறுப்பாளர் தமிழ்ச்செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    வேலூர் தொகுதியுடன் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலையும் நிறுத்த சதி செய்கின்றனர் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #kbalakrishna

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ‘மாலை மலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் மத சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நான் பிரசாரம் செய்யும் இடங்களில் மக்கள் எழுச்சியை காண முடிந்தது. தெருமுனை கூட்டம் போட்டால் கூட 2 ஆயிரம் பேர் கூடுகின்றனர்.

    இதற்கு மத்திய-மாநில அரசு மீதான வெறுப்பு தான் முக்கிய காரணமாகும்.

    பிரதமர் மோடி தமிழகத்துக்காக எந்தவித நன்மையும் செய்யவில்லை. ஒக்கி புயல், கஜா புயல், வர்தா புயல் எதற்கும் போதிய நிவாரண நிதியை ஒதுக்கவில்லை. புயல் சேதத்தையும் வந்து பார்வையிட வில்லை. விலைவாசி உயர்வால் பெண்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


     


    மத்திய அரசை தட்டிக் கேட்கும் நிலையில் மாநில அரசு இல்லை. பிரதமர் மோடி சொல்வதை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்படியே கேட்கிறார்.

    இதனால் தான் தமிழக மக்களுக்கு மோடி மீது வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. தேர்தலுக்காக அவர் பிரசாரத்துக்கு வந்தாலும் மோடிக்கு ஆதரவான எண்ணம் வரவில்லை. அவர் அடிக்கடி பிரசாரத்துக்கு வருவது எங்களுக்கு நல்லது தான்.

    வேலூர் தொகுதியில் பணம் பிடிபட்டது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வருகிறது. எங்களுக்கு வரும் செய்தி என்னவென்றால், வேலூர் தொகுதியுடன் குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலையும் நிறுத்த சதி நடப்பதாக அறிகிறோம். எங்களது வேண்டுகோள் தேர்தலை நிறுத்தக்கூடாது என்பது தான்.

    இவ்வாறு அவர் கூறினார். #kbalakrishna

    பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து கரூர் மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #pollachiissue

    கரூர்:

    பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தை கண்டித்து கரூர் மாவட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜீவானந்தம், ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பொள்ளாச்சியில் மாணவிகள், இளம் பெண்கள் மீது பாலியல் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றிய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். இதில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா? என விசாரித்து அவர்கள் மீதும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகார பின்னணியில் உள்ளவர்களை காவல்துறை தப்பிக்க விடக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. இதில் ராஜாமுகம்மது, காதர்பாட்ஷா, நிர்மல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல், கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பொள்ளாச்சி பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை கண்டித்து மாவட்ட தலைவர் மகாவிஷ்ணன் தலைமையில், கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில துணை தலைவர் சுப்ரமணி, மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். #pollachiissue

    பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத தோகைமலை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
    தோகைமலை:

    தோகைமலை வாரச்சந்தையை சுத்தப்படுத்தி சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும், கீழவெளியூரில் துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத தோகைமலை ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். 

    இதற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலக்குவன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தர்ணாவில் ஈடுபட்டவர்களை, ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்று கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஒரு மாதத்தில் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றா விட்டால் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும் என்று கட்சி நிர்வாகிகள் கூறி விட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். 
    ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




    திருவாரூர்:

    ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திருவாரூர் பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் மாரிமுத்து கலந்து கொண்டு பேசினார்.

    இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் பழனிவேல், கலைமணி, குமாரராஜா, கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதேபோல் வேலை வாய்ப்பு வழங்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருவாரூர் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோதிபாசு தலைமை தாங்கினார். இதில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    பாரதிய ஜனதாவை விட காங்கிரஸ் தான் இந்துக்களுக்கு ஆதரவானதாக செயல்படுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடுமையாக விமர்சனம் செய்து உள்ளது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குஜராத், கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது கோவில்களுக்கும், மடங்களுக்கும் அடிக்கடி சென்று வழிபட்டார். நெற்றியில் குங்குமம் திலகமிட்டுக் கொண்டார்.

    இந்துக்களுக்கு ஆதரவாக பா.ஜனதா கட்சி செயல்படுவதாக கூறப்படுவதால் ராகுல்காந்தியும் போட்டிக்காக இந்து கோவில்களுக்கு சென்றார். தற்போது 5 மாநில சட்டசபை தேர்தலிலும் ராகுல்காந்தி கோவில்களுக்கு சென்றார்.

    ராகுல்காந்தியின் இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கடுமையாக விமர்சனம் செய்து உள்ளது. இது குறித்து அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான பிப்பிள்ஸ் டெமாக்ரசியில் எழுதியிருப்பதாவது:-

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சத்தீஷ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டார். இதன் மூலம் அவர் பா.ஜனதாவை விட காங்கிரஸ் தான் இந்துக்களுக்கு ஆதரவானதாக இருக்கிறது என்பதை காட்டிக்கொள்கிறார்.

    மத்தியப் பிரதேசதேர்தல் அறிக்கையில் கிராமம் தோறும் கோ சாலை (பசு இருப்பிடம்) அமைப்போம், பசு ஹோமியம் விற்பனை, ராமவனம் காக்கும் திட்டம் என்றும், ராஜஸ்தானில் பள்ளிகளில் வேதபாடம் கற்பிக்கப்படும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

    இது போன்ற இந்துத்துவா நடவடிக்கைகள் மூலம் பா.ஜனதாவை தோற்கடித்து விடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. ஆனால் பா.ஜனதாவோ இந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பு இன்மை, விவசாயிகள் பிரச்சினை, ஊழல் போன்றவற்றால் மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Congress, #BJP #MarxistCommunist
    2017-18ம் ஆண்டில் பா.ஜ.க.வுக்கு ரூ.1000 கோடி வருவாய் கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இன்னும் தனது ஆண்டு வருவாய் கணக்கை காட்டவில்லை. #BJP #Congress #ElectionCommission
    புதுடெல்லி:

    தேசிய மற்றும் மாநில கட்சிகள் ஆண்டுதோறும் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்துக்கு கணக்கு தெரிவிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் 2017-18ம் ஆண்டில் ஒவ்வொரு கட்சியும் எவ்வளவு வருவாய் பெற்றன என்ற விபரம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. சமீபத்தில் தனது வருவாய் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. அதில் 2017-18ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு ரு.1000 கோடிக்கு வருமானம் கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துள்ள வருமானத்தில் பெரும்பகுதி பங்குகள் வெளியிடப்பட்டு திரட்டப்பட்டுள்ளது. பங்குகள் வெளியிட்டதின் மூலம் மட்டும் பா.ஜ.க.வுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் 222 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

    தேர்தல் பங்குகளை வெளியிட்டதின் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.210 கோடி வந்துள்ளது.

    மாயாவதி தலைமையில் இயங்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் வருமானம் ரூ.681 கோடியில் இருந்து ரூ.717 கோடியாக உயர்ந்துள்ளது.



    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஆண்டு வருவாய் ரூ.262 கோடியில் இருந்து ரூ.291 கோடியாக அதிகரித்துள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு வருவாய் ரூ.104 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தா மற்றும் கட்டணம் மூலம் இந்த வருவாய் கிடைத்து இருப்பதாக கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது. இந்த ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு வருவாய் 40 சதவீதம் குறைந்துள்ளது.

    இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட 32 மாநில கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளின் ஆண்டு வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு 2017-18ம் ஆண்டில் எவ்வளவு பணம் கிடைத்தது என்று தெரியவில்லை. இன்னமும் காங்கிரஸ் கட்சி தனது ஆண்டு வருவாய் கணக்கை காட்டவில்லை. சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் இன்னமும் கணக்கு காட்டவில்லை. #BJP #Congress
    ×