search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரிசிக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

    அரிசிக்கான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    • மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத, நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
    • அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.

    பல்லடம் :

    பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத, நடவடிக்கைகளை கண்டித்தும், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் கடுமையாக உயர்த்தியதை கண்டித்தும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதை கண்டித்தும், அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்ததை கண்டித்தும், கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை வழங்கி, ஏழை மக்களின் மீது வரிச்சுமையை அதிகரித்த மத்திய அரசின் மக்கள் விரோதபோக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் கோரிக்கைகளை விளக்கி இந்திய மாணவர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத்தலைவர் பிரவீன் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் பரமசிவம், ஒன்றியக்குழு உறுப்பினர் சுப்ரமணியம், மயிலாத்தாள், முருகசாமி, ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அரிசி மீதான ஜிஎஸ்டி. வரியை ரத்து செய்யக் கோரி தாராபுரத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆர்ப்பாட்டம் நடத்தினர் தாராபுரம் அண்ணாசிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினா் சத்தீஸ்வரன் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறியதாவது:- மத்திய அரசு அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி. வரியை ரத்து செய்ய வேண்டும்.மேலும், உணவுப்பொருள்களின் மீதான ஜிஎஸ்டி. வரி உயா்வை திரும்பப்பெற வேண்டும் என்றனா்.

    Next Story
    ×