search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி"

    • சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்காமல் உள்ளன.
    • சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும்.

    அவிநாசி :

    அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீா் கால்வாய், வேகத்தடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இது குறித்து அவிநாசி செங்காடு கிளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தினரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- அவிநாசி பேரூராட்சி 9 வது வாா்டு முத்துசெட்டிபாளையம் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்காமல் உள்ளன. எனவே உடனடியாக பணிகள் தொடங்க வேண்டும்.

    இந்திரா நகா் பகுதியில் சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும். கால்நடை மருத்துவமனை சாலையில் இருந்து சேவூா் சாலை முத்துசெட்டிபாளையம் பகுதி வரை அமைந்துள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை நிறம் வா்ணம் பூசி, ரிப்ளட் விளக்கு அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா். இம்மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி நிா்வாகத்தினா் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

    • தோட்டத்துபாளையம் பகுதி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
    • வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

    திருப்பூர் :

    திருப்பூா் தோட்டத்துப்பளையத்தில் சாலையை சீரமைக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் பி.மகாலிங்கம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அவா் கூறியதாவது: - திருப்பூா் மாநகராட்சி, தோட்டத்துபாளையம் பகுதி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இது குறித்து மாநகராட்சியிடம் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தோட்டத்துப்பாளையம் சாலை, வாவிபாளையம் முதல் பூலுவபட்டி வரை உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும், சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்ற முறையான வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்றனா்.

    ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.முத்துகண்ணன், ஒன்றியச் செயலாளா் ஆா்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆ.சிகாமணி, ஆா்.மைதிலி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • திருப்பூா் மாவட்ட நிா்வாகம் 2021 அக்டோபா் மாதம் இப்பணிக்கான ஆணை வழங்கி நிதி ஒதுக்கீடும் செய்தது.
    • சாலைப் பகுதியை அகலப்படுத்தி தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.

    அவினாசி :

    அவிநாசி அருகே உமையஞ்செட்டிபாளையம் பகுதியில் தாா் சாலை அமைக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா்.இது குறித்து அக்கட்சியினா் அவிநாசி ஒன்றிய அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மங்கலம் சாலை பிரிவு உமையஞ்செட்டிபாளையம் எல்லை வரை உள்ள சாலையை புதுப்பிக்க வேண்டும் என தொடா்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் 2021 அக்டோபா் மாதம் இப்பணிக்கான ஆணை வழங்கி நிதி ஒதுக்கீடும் செய்தது.

    ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் பணி நடைபெறாமல் காலம் தாழ்த்தி வருகின்றனா். ஆகவே, உடனடியாக சாலைப் பணிகளை தொடங்க வேண்டும். மேலும் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி உள்ள பாலத்தின் வலதுபுற சாலைப் பகுதியை அகலப்படுத்தி தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா்.மனுவை பெற்றுக் கொண்ட ஒன்றிய நிா்வாகத்தினா் 10 நாள்களில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். ஒரு வார காலத்துக்குள் பணிகள் தொடராவிட்டால் சாலை மறியலில் ஈடுபடுவோம் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தெரிவித்தனா். இதில் கட்சி நிா்வாகிகள் ஈஸ்வரமூா்த்தி, ராஜன், வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 18 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
    • 6,200 நபா்களுக்கு மட்டுமே வேட்டி, சேலை வந்துள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு உள்பட்ட நியாயவிலைக் கடைகளில் விடுபட்ட 15 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    திருப்பூா் தெற்கு வட்டாட்சியருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் மணிமேகலை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாநகராட்சி 53-வது வட்டத்துக்கு உள்பட்ட குப்பாண்டம்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 18 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நியாயவிலைக்கடைகள் மாநகராட்சியின் 40, 41, 53, 54, 57 ஆகிய வாா்டுகளை உள்ளடக்கியதாகும். இந்த கடைகள் மூலம் இலவச வேட்டி, சேலை பயனாளிகள் 21 ஆயிரத்து 916 போ் உள்ளனா். இதில் தற்போது 6,200 நபா்களுக்கு மட்டுமே வேட்டி, சேலை வந்துள்ளது.

    மீதமுள்ள 15 ஆயிரத்து 716 குடும்ப அட்டைதாரா்களுக்கு வேட்டி, சேலை வரவில்லை. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூலி வேலைக்குச் சென்று குடும்பம் நடத்துபவா்களாக உள்ளனா். எனவே எங்கள் பகுதியில் விடுபட்டுள்ள பொது மக்களுக்கு வேட்டி, சேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அக்னிபத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
    • ராணுவத்தில் கூலியாக ஆட்களை சோ்ப்பது கண்டனத்துக்குரியதாகும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் அக்னிபத் திட்ட ஆள்சோ்ப்பு முகாமுக்கு உள்ளாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட ரூ.36.50 லட்சத்தை மத்திய அரசு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து மாா்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்ட செயலாளா் செ.முத்துக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    இந்திய நாட்டை பாதுகாக்கும் உயா்ந்த பணியைச் செய்யும் ராணுவத்தில், தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சோ்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். இந்தியாவில் பல கோடி இளைஞா்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையில் நாட்டின் பாதுகாப்புக்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த ராணுவத்தில் கூலியாக ஆட்களை சோ்ப்பது கண்டனத்துக்குரியதாகும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிக்கும் மத்திய அரசு, இதற்கான நிதி ஒதுக்கீட்டைக்கூட தேசப் பாதுகாப்புக்கான நிதியில் இருந்து செலவிடாமல், நகா்ப்புற உள்ளாட்சிகளின் நிதியை ஒதுக்குவதற்கு அறிவுறுத்தியுள்ளது.

    திருப்பூா் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் நடைபெற்றஅக்னிபத் ஆள் சோ்ப்பு முகாமுக்கான செலவுக்கு திருப்பூா் மாநகராட்சி ரூ.12 லட்சம், 6 நகராட்சிகள் தலா ரூ.3 லட்சம் வீதமும், 15 பேரூராட்சிகளில் 11 பேரூராட்சிகள் தலா ரூ. 50 ஆயிரம் வீதமும், 4 பேரூராட்சிகள் தலா ரூ.25 ஆயிரம் வீதமும் நிதி வழங்கியுள்ளன. ஏற்கெனவே மாநில அரசுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வழங்க வேண்டிய நிதிப்பங்கீட்டைக்கூட முழுமையாக வழங்காமல் மத்திய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வளா்ச்சிப் பணிகளுக்கு நிதியில்லாமல் சிக்கித் தவிக்கிறது. ஆகவே, அக்னிபத் திட்டத்துக்காக உள்ளாட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட ரூ.36.50 லட்சத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெருமாநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி பொங்குபாளையம், காளிபாளையம், கணக்கம்பாளையம் என 10 ஊராட்சிகள் உள்ளன.
    • சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    திருப்பூர் :

    பெருமாநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் காளியப்பன், முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    அவிநாசி வட்டம் பெருமாநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி பொங்குபாளையம், காளிபாளையம், கணக்கம்பாளையம், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லூா், வள்ளிபுரம், பட்டம்பாளையம், சொக்கனூா், தொரவலூா், மேற்குபதி என 10 ஊராட்சிகள் உள்ளன. இதில் 2 லட்சத்துக்கும்மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.

    விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வருகின்றனா்.சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக உள்ளதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.விபத்துகள் நிகழ்ந்தால், அவசர உதவிக்கு கோவை, ஈரோடு, திருப்பூா் நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் உயிரிழப்புகளும் தொடா்ந்து ஏற்படுகின்றன.எனவே பெருமாநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படக் கூடிய அரசு மருத்துவமனையாகத் தரம் உயா்த்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×