தோட்டத்துப்பாளையம் சாலையை சீரமைக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆர்ப்பாட்டம்

தோட்டத்துபாளையம் பகுதி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூா் தோட்டத்துப்பளையத்தில் சாலையை சீரமைக்கக்கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் பி.மகாலிங்கம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அவா் கூறியதாவது: - திருப்பூா் மாநகராட்சி, தோட்டத்துபாளையம் பகுதி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இச்சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இது குறித்து மாநகராட்சியிடம் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தோட்டத்துப்பாளையம் சாலை, வாவிபாளையம் முதல் பூலுவபட்டி வரை உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும், சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரை வெளியேற்ற முறையான வடிகால் வசதி அமைக்க வேண்டும் என்றனா்.

ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.முத்துகண்ணன், ஒன்றியச் செயலாளா் ஆா்.காளியப்பன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆ.சிகாமணி, ஆா்.மைதிலி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com