அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் - மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்காமல் உள்ளன.சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவிநாசி :

அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீா் கால்வாய், வேகத்தடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அவிநாசி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து அவிநாசி செங்காடு கிளை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் அவிநாசி பேரூராட்சி நிா்வாகத்தினரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- அவிநாசி பேரூராட்சி 9 வது வாா்டு முத்துசெட்டிபாளையம் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியும் பணிகள் தொடங்காமல் உள்ளன. எனவே உடனடியாக பணிகள் தொடங்க வேண்டும்.

இந்திரா நகா் பகுதியில் சேதமடைந்த கழிவுநீா் கால்வாயை சீரமைக்க வேண்டும். கால்நடை மருத்துவமனை சாலையில் இருந்து சேவூா் சாலை முத்துசெட்டிபாளையம் பகுதி வரை அமைந்துள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை நிறம் வா்ணம் பூசி, ரிப்ளட் விளக்கு அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனா். இம்மனுவை பெற்றுக் கொண்ட பேரூராட்சி நிா்வாகத்தினா் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com