search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச வேட்டி, சேலை கிடைக்க நடவடிக்கை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
    X

    இலவச வேட்டி, சேலை கிடைக்க நடவடிக்கை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 18 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
    • 6,200 நபா்களுக்கு மட்டுமே வேட்டி, சேலை வந்துள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு உள்பட்ட நியாயவிலைக் கடைகளில் விடுபட்ட 15 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    திருப்பூா் தெற்கு வட்டாட்சியருக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் மணிமேகலை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாநகராட்சி 53-வது வட்டத்துக்கு உள்பட்ட குப்பாண்டம்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் 18 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த நியாயவிலைக்கடைகள் மாநகராட்சியின் 40, 41, 53, 54, 57 ஆகிய வாா்டுகளை உள்ளடக்கியதாகும். இந்த கடைகள் மூலம் இலவச வேட்டி, சேலை பயனாளிகள் 21 ஆயிரத்து 916 போ் உள்ளனா். இதில் தற்போது 6,200 நபா்களுக்கு மட்டுமே வேட்டி, சேலை வந்துள்ளது.

    மீதமுள்ள 15 ஆயிரத்து 716 குடும்ப அட்டைதாரா்களுக்கு வேட்டி, சேலை வரவில்லை. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கூலி வேலைக்குச் சென்று குடும்பம் நடத்துபவா்களாக உள்ளனா். எனவே எங்கள் பகுதியில் விடுபட்டுள்ள பொது மக்களுக்கு வேட்டி, சேலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×