search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bahujan samajwadi"

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்துள்ளதால் பாஜகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். #Mamata #AntiBJPRally #AkhileshYadav
    கொல்கத்தா:
        
    கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

    பாராளுமன்ற தேர்தலுக்காக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது பாஜவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.



    நாங்கள் இருவரும் அமைத்துள்ள கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அங்கு ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டும் என பாஜக திட்டமிட்டு வருகிறது.

    எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என பாஜகவினர் கேட்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி நாட்டு மக்களை ஏமாற்றி விட்டார். அவருக்கு பதிலாக நாட்டுக்கு ஒரு பிரதமரை உங்களால் காட்ட முடியுமா? எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார். #Mamata #AntiBJPRally #AkhileshYadav
    2017-18ம் ஆண்டில் பா.ஜ.க.வுக்கு ரூ.1000 கோடி வருவாய் கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இன்னும் தனது ஆண்டு வருவாய் கணக்கை காட்டவில்லை. #BJP #Congress #ElectionCommission
    புதுடெல்லி:

    தேசிய மற்றும் மாநில கட்சிகள் ஆண்டுதோறும் தங்களுக்கு கிடைக்கும் வருமானத்துக்கு கணக்கு தெரிவிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அந்த வகையில் 2017-18ம் ஆண்டில் ஒவ்வொரு கட்சியும் எவ்வளவு வருவாய் பெற்றன என்ற விபரம் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

    மத்தியில் ஆளும் பா.ஜ.க. சமீபத்தில் தனது வருவாய் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. அதில் 2017-18ம் ஆண்டு பா.ஜ.க.வுக்கு ரு.1000 கோடிக்கு வருமானம் கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

    பாரதிய ஜனதாவுக்கு கிடைத்துள்ள வருமானத்தில் பெரும்பகுதி பங்குகள் வெளியிடப்பட்டு திரட்டப்பட்டுள்ளது. பங்குகள் வெளியிட்டதின் மூலம் மட்டும் பா.ஜ.க.வுக்கு பொதுத்துறை வங்கிகள் மூலம் 222 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

    தேர்தல் பங்குகளை வெளியிட்டதின் மூலம் பாரதிய ஜனதா கட்சிக்கு ரூ.210 கோடி வந்துள்ளது.

    மாயாவதி தலைமையில் இயங்கும் பகுஜன் சமாஜ் கட்சியின் வருமானம் ரூ.681 கோடியில் இருந்து ரூ.717 கோடியாக உயர்ந்துள்ளது.



    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஆண்டு வருவாய் ரூ.262 கோடியில் இருந்து ரூ.291 கோடியாக அதிகரித்துள்ளது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு வருவாய் ரூ.104 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தா மற்றும் கட்டணம் மூலம் இந்த வருவாய் கிடைத்து இருப்பதாக கம்யூனிஸ்டு கட்சி கூறியுள்ளது. இந்த ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆண்டு வருவாய் 40 சதவீதம் குறைந்துள்ளது.

    இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட 32 மாநில கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளின் ஆண்டு வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது.

    காங்கிரஸ் கட்சிக்கு 2017-18ம் ஆண்டில் எவ்வளவு பணம் கிடைத்தது என்று தெரியவில்லை. இன்னமும் காங்கிரஸ் கட்சி தனது ஆண்டு வருவாய் கணக்கை காட்டவில்லை. சரத்பவாரின் தேசியவாத காங்கிரசும் இன்னமும் கணக்கு காட்டவில்லை. #BJP #Congress
    ×