என் மலர்

  செய்திகள்

  உ.பி.யில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணியால் பாஜகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது - அகிலேஷ் யாதவ்
  X

  உ.பி.யில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணியால் பாஜகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது - அகிலேஷ் யாதவ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்துள்ளதால் பாஜகவுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். #Mamata #AntiBJPRally #AkhileshYadav
  கொல்கத்தா:
      
  கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

  பாராளுமன்ற தேர்தலுக்காக உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது பாஜவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  நாங்கள் இருவரும் அமைத்துள்ள கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அங்கு ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டும் என பாஜக திட்டமிட்டு வருகிறது.

  எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என பாஜகவினர் கேட்கின்றனர். ஆனால், பிரதமர் மோடி நாட்டு மக்களை ஏமாற்றி விட்டார். அவருக்கு பதிலாக நாட்டுக்கு ஒரு பிரதமரை உங்களால் காட்ட முடியுமா? எங்கள் கூட்டணியில் யார் பிரதமர் என்பதை நாட்டு மக்கள் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார். #Mamata #AntiBJPRally #AkhileshYadav
  Next Story
  ×