search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cm mamata banerjee"

    பாஜக இளைஞரணி பிரமுகரை விடுவிக்க தாமதப்படுத்திய மேற்கு வங்காளம் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட  சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது.
     
    இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக பா.ஜ.க. இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை தாஸ்நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். 

    இதற்கிடையே, பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் என்.கே.கவுல் தாக்கல் செய்தார்.



    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், பா.ஜ.க. இளைஞரணி பிரமுகரை விடுவிக்க தாமதப்படுத்திய மேற்கு வங்காளம் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பிரியங்கா ஷர்மாவின் வழக்கறிஞர் தாக்கல் செய்து மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிமன்றம், பா.ஜ.க. பிரமுகரை விடுவிப்பதில் கால தாமதம் செய்வது ஏன் என மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியது, அத்துடன் தனது கண்டனத்தையும் தெரிவித்தது. 
    போட்டோ ஷாப் முறையில் மம்தாவின் மார்பிங் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்ததாக கைதான பெண்ணுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
    புதுடெல்லி:

    மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியை மிகவும் விகாரமாக சித்தரித்து சில நாட்களாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட  சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது.
     
    இந்த புகைப்படத்தை பகிர்ந்ததாக பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை தாஸ்நகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். 



    இதற்கிடையே, பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் அவரது வழக்கறிஞர் என்.கே.கவுல் தாக்கல் செய்தார்.

    இந்த மனு விடுமுறைக்கால நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கண்ணா ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்ததுடன், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
    மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, எங்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்காவிட்டால் 100 தோப்புக்கரணம் போடவேண்டும் என பிரதமருக்கு சவால் விடுத்தார். #LokSabhaElections2019 #MamataBanerjee #Modi
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்னும் இரண்டு கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் பான்குரா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:



    பிரதமர் மோடி அவர்களே, நிலக்கரி சுரங்க ஊழலில் எங்களுக்கு பங்குண்டு என நீங்கள் கூறியதை நிரூபிக்க வேண்டும். இந்த குற்றச்சாட்டை நீங்கள் நிரூபித்து விட்டால், 42 தொகுதிகளிலும் வேட்பாளர்களை வாபஸ் பெற்று விடுகிறேன்.

    அப்படி இல்லையென்றால், பொதுமக்கள் மத்தியில் நீங்கள் காதை பிடித்துக் கொண்டு 100 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். எனது சவாலுக்கு நீங்கள் தயாரா? என கேள்வி எழுப்பினார். #LokSabhaElections2019 #MamataBanerjee #Modi
    மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, 440 வோல்ட் மின்சாரம் போன்று மிகவும் அபாயகரமானது பாஜக என கடுமையாக சாடியுள்ளார். #LokSabhaElections2019 #MamataBanerjee #Modi
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் பாண்டுவா பகுதியில் தேர்தல் பிரசாரம் இன்று நடைபெற்றது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக கட்சி மிகவும் அபாயகரமானது. பாஜக மற்றும் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் நாட்டை கண்டிப்பாக அழித்து விடுவார்கள். 440 வோல்ட் மின்சாரம் போன்று மிகவும் அபாயகரமான கட்சி பாஜக. எனவே, மோடி மீண்டும் பிரதமராவதை மக்கள் நிராகரிக்க வேண்டும். 



    திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு எந்த அழிவும் நேராது என நான் உறுதி அளிக்கிறேன் என கடுமையாக சாடினார். #LokSabhaElections2019 #MamataBanerjee #Modi
    மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு களிமண் ரசகுல்லாவைதான் பரிசாக அளிப்பார்கள் என கிண்டலாக குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #MamataBanerjee #Modi
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் அசன்கோல் நகரில் உள்ள ரானிகஞ்ச் பகுதியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:



    பாராளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மேற்கு வங்காளத்துக்கு வந்து கொண்டிருக்கிறார். இதைப்புரிந்து கொண்டுள்ள கொல்கத்தா மக்கள் அவருக்கு களிமண்ணால் ஆன ரசகுல்லாவைதான் பரிசாக அளிக்கப் போகின்றனர். அதை கடித்து சாப்பிடும்போது அவரது பல் நிச்சயம் உடையத்தான் போகிறது என கிண்டலாக குறிப்பிட்டார்.

    இனிப்பு வகையில் ஒன்றான ரசகுல்லா வங்காளதேசத்தில் மிகவும் பிரபலமானது. மேலும் மாணவர்கள் தேர்வில் பூஜ்யம் வாங்கினால் உள்ளூர் மக்கள் பூஜ்யத்தை ரசகுல்லா எனக்கூறி கேலி செய்வது வழக்கமாகும். #LokSabhaElections2019 #MamataBanerjee #Modi
    மேற்கு வங்காளத்தின் தினாஜ்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசுகையில், பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ரசகுல்லாதான் கிடைக்கும் என கிண்டலாக குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தின் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பாலுர்காட் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி இந்த தேர்தலில் பா.ஜ.க. அதிகப்படியான இடங்களை கைப்பற்றும் என பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு ரசகுல்லா தான் கிடைக்கும்.

    இந்த தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ஒட்டுமொத்தமாக 100 இடங்களுக்கு மேல் கிடைக்காது. குறிப்பாக ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட பா.ஜ.க. வெற்றி பெறாது என தெரிவித்தார்.

    இனிப்பு வகையில் ஒன்றான ரசகுல்லா வங்காளதேசத்தில் மிகவும் பிரபலமானது. மேலும் மாணவர்கள் தேர்வில் பூஜ்யம் வாங்கினால் உள்ளூர் மக்கள் பூஜ்யத்தை ரசகுல்லா எனக்கூறி கேலி செய்வது வழக்கமாக உள்ளது நினைவிருக்கலாம். #LokSabhaElections2019 #MamataBanerjee
    மேற்கு வங்காளத்தின் கூச் பெகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்கள் கொல்கத்தா மக்களை சென்றடைய மம்தா பானர்ஜி தடையாக உள்ளார் என குற்றம்சாட்டினார். #LokSabhaElection2019 #PMModi #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 11, 18, 23,29 மற்றும் மே 6, 12, 19 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    முதல்கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, முதல் மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். 

    இந்நிலையில், கூச் பெகாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய மம்தா பானர்ஜி தடையாக உள்ளார் என குற்றம்சாட்டினார்.

    இதுதொடர்பாக அவர் பேசுகையில், பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். ஆனால் மம்தா ராணுவ நடவடிக்கைக்கு எதிராக இருக்கிறார். நமது தாயகத்தை மம்தா மதிக்க தவறிவிட்டார். எல்லையில் ஊடுருவல்காரர்களுக்கு மம்தா துணைபோகிறார். இந்தியாவை துண்டாடும் முயற்சிக்கு மம்தா துணைபோகிறார்.

    மத்திய அரசின் திட்டங்கள் கொல்கத்தா மக்களை சென்றடைய மம்தா பானர்ஜி தடையாக உள்ளார். தற்போது பா.ஜ.,வுக்கு ஆதரவான அலையால் மம்தாவின் தூக்கம் பறிபோய் விட்டது. சாரதா சிட்பண்ட் ஊழல் நடந்துள்ளது. இதற்கு மம்தா துணைபோகிறார். இந்த மாநிலத்தில் ஏற்பட்ட ஊழல்கள் குறித்து இம்மக்கள் அறிவர். இந்த மாநிலத்தை காவலாளியான நான் காப்பேன் என தெரிவித்தார். #LokSabhaElection2019 #PMModi #MamataBanerjee
    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் சிபிஐ 8 மணிநேரம் விசாரணை நடத்தியது. நாளையும் விசாரணை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #MamataDharna #CBI #KolkataCommissioner
    ஷில்லாங்:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்தச் சென்ற சிபிஐ அதிகாரிகளை போலீசார் தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 
     
    போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து தடைகளை ஏற்படுத்துவதாகவும், அவரை விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி உத்தரவிட வேண்டும் எனவும் சிபிஐ தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கமிஷனருக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

    மேலும், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



    இந்நிலையில், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் இன்று ஷில்லாங்கில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காலை 11.30 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவருடன் வக்கீல்கள் பலர் வந்திருந்தனர். 

    சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 8 மணி நேரம் நீடித்தது.  பின்னர் இரவு 7.30 மணியளவில் கிளம்பிச் சென்றார். நாளையும் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடைபெறும் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #MamataDharna #CBI #KolkataCommissioner
    மேற்கு வங்காளத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஊழல்களின் மாஸ்டராக பிரதமர் மோடி விளங்குகிறார் என கடுமையாக தாக்கிப் பேசினார். #MamatBanerjee #PMModi
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று தொடங்கி, இன்றுடன் நிறைவு பெற்றது. மாநாடு முடிந்ததும் முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் மோடிக்கு இந்தியாவை பற்றி தெரியாது. அவர் கோத்ரா மற்றும் பிற மோதல்களில் இருந்து வந்தவர். தேர்தலுக்கு முன்னால் அவரை சாய்வாலா என அழைத்தோம். ஆனால் தேர்தலுக்கு பிறகு அவர் ரபேல் வாலா என அழைக்கப்பட உள்ளார்.



    நாட்டின் மிகப்பெரிய ஊழலாக ரபேல் ஊழல் இருந்து வருகிறது. அந்த வகையில் காங்கிரசுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ரபேலின் மாஸ்டர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மாஸ்டர். பிரதமர் மோடி ஊழல்களின் மாஸ்டராக விளங்குகிறார்.

    பணத்தின் பலத்தால் மோடி பிரதமர் ஆனது மிகவும் துரதிஷ்டவசமானது. எதிர்க்கட்சிகள் ஒன்றாக பணியாற்றுவதால் பிரதமர் மோடி பயப்படுகிறார். ஆனால், எனக்கு பயம் கிடையாது. நான் என்னுடைய பாதையில் போராடுகிறேன். எங்களது கொள்கைக்கு நான் எப்போதும் மதிப்பளிக்கிறேன். 

    நாங்கள் பிரதமர் நாற்காலியை தான் மரியாதை அளிக்கிறோம். அவருக்கு அல்ல என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். #MamatBanerjee #PMModi
    மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் கடந்த 3 நாளாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி இன்று நிறைவு செய்தார். #MamataDharna #CBIvsMamata
    கொல்கத்தா:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென அவரது வீட்டுக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்து, பின்னர் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் மோதல் உருவாகி உள்ளது.

    போலீஸ் உயர் அதிகாரியிடம் மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரிக்க முயற்சி செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதோடு அரசியலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கப் போவதாக சொல்லி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார். 

    அவரை தி.மு.க. சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.



    இதற்கிடையே, மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு சந்தித்து இன்று ஆதரவு தெரிவித்துள்ளார். அப்போது பேசிய நாயுடு, எதிர்க்கட்சிகளின் முக்கிய தூணாக விளங்குபவர் மம்தா பானர்ஜி. வரும் பாராளுமன்ற தேர்தலில் 42 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் கடந்த 3 நாளாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி இன்று நிறைவு செய்தார்.

    இதுதொடர்பாக அவர் கூறுகையில், நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு காக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தர்ணா போராட்டத்தை நிறைவு செய்கிறேன் என அறிவித்தார். #MamataDharna #CBIvsMamata
    மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்கு உரியவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான பாரதி கோஷ் பாஜகவில் இணைந்தார். #MamataBanerjee #BharatiGhosh
    புதுடெல்லி:

    மேற்கு வங்காள மாநிலத்தின் முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்கு உரியவரும், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமாக இருந்தவர் பாரதி கோஷ்.

    மாவோயிஸ்ட்களுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதால் இவர் முதல் மந்திரி மம்தாவுக்கு நெருக்கமானார். ஆனால், ஆள்கடத்தல் வழக்கு தொடர்பாக சிஐடி விசாரணைக்கு ஆளாகி பதவிநீக்கம் செய்யப்பட்டார்.



    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பாஜக தலைவர்கள் முகுல் ராய், கைலாஷ் விஜய்வர்கியா மற்றும் சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத்  முன்னிலையில் பாரதி கோஷ் பாஜகவில் இணைந்தார். வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட  அவருக்கு வாய்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. #MamataBanerjee #BharatiGhosh
    மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். #MamataDharna #CBIvsMamata #ChandrababuNaidu
    கொல்கத்தா:

    சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென அவரது வீட்டுக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்து, பின்னர் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் மோதல் உருவாகி உள்ளது.

    போலீஸ் உயர் அதிகாரியிடம் மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரிக்க முயற்சி செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதோடு அரசியலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கப் போவதாக சொல்லி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார். 



    அவரை தி.மு.க. சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு சந்தித்து இன்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, 22 எதிர்க்கட்சிகள் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளன. இவையனைத்தும் பிரதமர் மோடி சி.பி.ஐ.யை ஏவி விட்டு மாநில அரசுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டி உள்ளன. #MamataDharna #CBIvsMamata #ChandrababuNaidu
    ×