என் மலர்

  செய்திகள்

  440 வோல்ட் மின்சாரம் போன்று மிகவும் அபாயகரமானது பாஜக - மம்தா கடும் தாக்கு
  X

  440 வோல்ட் மின்சாரம் போன்று மிகவும் அபாயகரமானது பாஜக - மம்தா கடும் தாக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, 440 வோல்ட் மின்சாரம் போன்று மிகவும் அபாயகரமானது பாஜக என கடுமையாக சாடியுள்ளார். #LokSabhaElections2019 #MamataBanerjee #Modi
  கொல்கத்தா:

  மேற்கு வங்காளம் மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் பாண்டுவா பகுதியில் தேர்தல் பிரசாரம் இன்று நடைபெற்றது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

  மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக கட்சி மிகவும் அபாயகரமானது. பாஜக மற்றும் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் நாட்டை கண்டிப்பாக அழித்து விடுவார்கள். 440 வோல்ட் மின்சாரம் போன்று மிகவும் அபாயகரமான கட்சி பாஜக. எனவே, மோடி மீண்டும் பிரதமராவதை மக்கள் நிராகரிக்க வேண்டும்.   திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு எந்த அழிவும் நேராது என நான் உறுதி அளிக்கிறேன் என கடுமையாக சாடினார். #LokSabhaElections2019 #MamataBanerjee #Modi
  Next Story
  ×