என் மலர்

  நீங்கள் தேடியது "clay rosogollas"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு களிமண் ரசகுல்லாவைதான் பரிசாக அளிப்பார்கள் என கிண்டலாக குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #MamataBanerjee #Modi
  கொல்கத்தா:

  மேற்கு வங்காளம் மாநிலத்தின் அசன்கோல் நகரில் உள்ள ரானிகஞ்ச் பகுதியில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இதில் திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:  பாராளுமன்ற தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மேற்கு வங்காளத்துக்கு வந்து கொண்டிருக்கிறார். இதைப்புரிந்து கொண்டுள்ள கொல்கத்தா மக்கள் அவருக்கு களிமண்ணால் ஆன ரசகுல்லாவைதான் பரிசாக அளிக்கப் போகின்றனர். அதை கடித்து சாப்பிடும்போது அவரது பல் நிச்சயம் உடையத்தான் போகிறது என கிண்டலாக குறிப்பிட்டார்.

  இனிப்பு வகையில் ஒன்றான ரசகுல்லா வங்காளதேசத்தில் மிகவும் பிரபலமானது. மேலும் மாணவர்கள் தேர்வில் பூஜ்யம் வாங்கினால் உள்ளூர் மக்கள் பூஜ்யத்தை ரசகுல்லா எனக்கூறி கேலி செய்வது வழக்கமாகும். #LokSabhaElections2019 #MamataBanerjee #Modi
  ×