என் மலர்

  நீங்கள் தேடியது "called off"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் கடந்த 3 நாளாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி இன்று நிறைவு செய்தார். #MamataDharna #CBIvsMamata
  கொல்கத்தா:

  சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக, கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமாரிடம் விசாரிப்பதற்காக நேற்று முன்தினம் 8 சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென அவரது வீட்டுக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கொல்கத்தா போலீசார், சி.பி.ஐ. அதிகாரிகளை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்து, பின்னர் விடுவித்தனர். இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜி அரசுக்கும் மோதல் உருவாகி உள்ளது.

  போலீஸ் உயர் அதிகாரியிடம் மாநில அரசின் அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரிக்க முயற்சி செய்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார். அதோடு அரசியலமைப்பு சட்டத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கப் போவதாக சொல்லி கொல்கத்தா எஸ்பிளனேடு பகுதியில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் எதிரில் நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார். 

  அவரை தி.மு.க. சார்பில் கனிமொழி, ஆம் ஆத்மி சார்பில் கெஜ்ரிவால், ராஷ்டீரிய ஜனதா தளம் சார்பில் தேஜஸ்வி உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். பல்வேறு தலைவர்கள் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.  இதற்கிடையே, மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் தர்ணா நடத்தி வரும் மம்தா பானர்ஜியை தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர மாநில முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு சந்தித்து இன்று ஆதரவு தெரிவித்துள்ளார். அப்போது பேசிய நாயுடு, எதிர்க்கட்சிகளின் முக்கிய தூணாக விளங்குபவர் மம்தா பானர்ஜி. வரும் பாராளுமன்ற தேர்தலில் 42 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.

  இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் கடந்த 3 நாளாக நடத்தி வந்த தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜி இன்று நிறைவு செய்தார்.

  இதுதொடர்பாக அவர் கூறுகையில், நீதிமன்றம் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு காக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தர்ணா போராட்டத்தை நிறைவு செய்கிறேன் என அறிவித்தார். #MamataDharna #CBIvsMamata
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிப்ரவரி ஒன்று முதல் தொடங்குவதாக இருந்த தலைமைச் செயலக ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #JactoGeo
  சென்னை:

  பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  ஜாக்டோ ஜியோ போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தலைமை செயலக பணியாளர்கள் சங்கத்தினர் அறிவிப்பு செய்திருந்தனர்.

  இந்நிலையில், பிப்ரவரி ஒன்று முதல் தொடங்குவதாக இருந்த தலைமை செயலக ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக, தலைமை செயலக பணியாளர் சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கூறுகையில், பிப்ரவரி ஒன்று முதல் தொடங்குவதாக இருந்த தலைமைச் செயலக ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்படுகிறது. மாணவர்களின் நலன், தமிழக அரசின் நிதிநிலை மற்றும் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. அனைவரும் நாளை பணிக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார். #JactoGeo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உயர்மின்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 13 நாட்களாக நடத்தி வந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். #Powerlines #FarmersProtest
  சென்னை:

  தமிழகத்தில் விவசாய விளைநிலங்களின் வழியாக உயர் மின்கோபுர பாதை அமைத்து மின்சாரம் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மாவட்ட விவசாயிகள் கடந்த 17-ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
   
  கேரளாவில் உள்ளதைபோல் சாலையோரம் கேபிள் மூலம் தமிழகத்தில் மின்சாரப் பாதை அமைத்து கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. கோவையில் சுல்தான்பேட்டையிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கள்ளிப்பாளையத்திலும் போராட்டம் நடைபெற்றது.

  இதற்கிடையே கடந்த 23-ம் தேதி முதல் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி, விஸ்வநாதன், பச்சியப்பன், பால்ராஜ், சிவக்குமார், நாச்சிமுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட விவசாயிகள் 16 பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   இந்நிலையில், உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 13 நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டத்தை இன்று தற்காலிகமாக கைவிட்டுள்ளனர். 

  திருப்பூர், ஈரோடு, கோவையில் 13 நாட்களாக விவசாயிகள் நடத்தி வந்த காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜனவரி 3-ம் தேதி முதல் சென்னையில் சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். #Powerlines #FarmersProtest
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. #RationShopEmployeesStrike
  சென்னை:

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.

  இதற்கிடையே, தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம்போல் செயல்படும். ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பொருள்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில், தமிழகத்தில் நாளை நடைபெறவிருந்த ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

  இதுதொடர்பாக தொழிற்சங்கத்தினர் கூறுகையில், அரசுடன் கூட்டுறவு சங்க பதிவாளர், கூடுதல் பதிவாளர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர். #RationShopEmployeesStrike
  ×