என் மலர்
இந்தியா

SIR... மேற்குவங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- மேற்குவங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.
- தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தமிழகத்தை போல கடந்த நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 11 ஆம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில் மேற்குவங்கத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த செயல்முறையில் தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நீக்கியுள்ளது.
நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், 24.17 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர் என்றும் 19.88 லட்சம் வாக்காளர்கள் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர் என்றும் 12.20 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போகியுள்ளனர் என்றும் 1.38 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்களை நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






