search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "November Revolution"

    • ரஷ்யப்புரட்சி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலனை முன்மொழிந்தது.
    • இங்கிலாந்து புரட்சி, அமெரிக்க புரட்சி, பிரெஞ்சு புரட்சி என உலக வரலாற்றில் பல புரட்சிகள் நிகழ்ந்துள்ளன.

    திருப்பூர் :

    திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 105- வது நவம்பர் புரட்சி தின செந்தொண்டர் பேரணி, பொதுக்கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இங்கிலாந்து புரட்சி, அமெரிக்க புரட்சி, பிரெஞ்சு புரட்சி என உலக வரலாற்றில் பல புரட்சிகள் நிகழ்ந்துள்ளன. அவை அந்தந்த நாடுகளின் நலன்களை மட்டும் சார்ந்தவை. அந்த நாட்டு மக்களுக்கு மட்டுமான சில உரிமைகளைப் பெற்றுத் தந்தவை. அந்த நாடுகளின் எல்லைகளுக்குள் மட்டும் அதிர்வை உண்டாக்கியவை. ஆனால் 1917 நவம்பர் 7-ந் தேதி ரஷ்யாவில், லெனின் தலைமையில் நடைபெற்ற ரஷ்யப்புரட்சி, இவை அனைத்திலும் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று. அந்தப் புரட்சி ஒட்டுமொத்த மனித குலத்திற்கான நலனை முன்மொழிந்தது.அதனால் அந்த புரட்சியின் அதிர்வுகள் உலகம் முழுவதும் உணரப்பட்டது.

    உலகில் உரிமைகளுக்காகப் போராடும் சக்திகள் அனைத்துக்கும் பல படிப்பினைகளை கொடுத்தது.தொழிலாளர்கள் நலன், பெண் உரிமை, முற்போக்கு சிந்தனை, அறிவியல் வளர்ச்சி, திட்டமிடப்பட்ட பொருளாதாரம், உலக சமாதானம் என ரஷ்ய புரட்சி பல்வேறு தளங்களில் முன் மாதிரிகளை உருவாக்கி தந்தது. அந்தப்புரட்சியை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் இருந்து இன்று 27ந்தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் செந்தொண்டர் பேரணி புஸ்பா தியேட்டர், குமரன் சாலை வழியாக நொய்யல் யுனிவர்சல் தியேட்டர் அருகே வந்து நிறைவு பெறுகிறது. பின்னர் அங்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டத்திற்கு செ. முத்துக்கண்ணன் தலைமையேற்கிறார். . தெற்கு நகர செயலாளர் ஜெயபால் வரவேற்கிறார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான பிருந்தா காரத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார் மாநில செயற்குழு ஜி. சுகுமாறன் , கோவை எம். பி., பி. ஆர். நடராஜன், மாநிலக்குழு கே. காமராஜ், தீக்கதிர் முதன்மை செயலாளர் என். பாண்டி, பொது மேலாளர் எஸ். ஏ. மாணிக்கம் , சி. மூர்த்தி, மாவட்ட செயற்குழு எஸ். ஆர். மதுசூதனன், மாவட்டக்குழு ஏ.ஷகிலா ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். ராஜகோபால், கே. உண்ணிகிருஷ்ணன், கே. ரங்கராஜ், ஜி. சாவித்திரி, எஸ். சுப்பிரமணியம், ஆர். குமார். ச. நந்தகோபால், எஸ். மணிகண்டன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் இடைக்குழு செயலாளர்கள் என். கனகராஜ், பி. ஆர். கணேசன், ஆர். காளியப்பன், கே. திருவேங்கடசாமி, பொறுப்பு செயலாளர் ஏ. ஈஸ்வரமுர்த்தி, கி. கனகராஜ், என்.சசிகலா, கே. தண்டபாணி, எஸ்.கே. கொளந்தசாமி, கோ. செல்வன், ஆர்.வி.வடிவேல், ஆர். பாலன் ஆகியோர் பங்கேற்கின்றனர். முடிவில் பல்லடம் தாலுகா செயலாளர் பரமசிவம் நன்றி கூறுகிறார். பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×