search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "litigation"

    • வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தனர்.
    • வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூரை சேர்ந்தவர் முருகன் (39). இவர் 2 ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்தார்.

    இந்த நிலையில் மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு செல்வதாக வேலை தேடி வந்தார். அப்போது பத்தி ரிக்கையில் வெளியான விளம்பரம் ஒன்றை பார்த்து திருநெல்வேலியில் செயல்படும் ஏஜென்சி ஒன்றை தொடர்பு கொண்டார்.

    அவர்கள் பிரேசில் நாட்டில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை தயாராக இருப்பதாகவும், அதற்கு ரூ. 1 ½ லட்சம் செலவாகும் என்று கூறியுள்ளனர். அதை நம்பிய முருகன் 3 தவணைகளில் ரூ.1 ½லட்சம் கொடுத்துள்ளார். பின்னர் மேலும் ரூ.50 ஆயிரம் வாங்கி கொண்டு விசா ஒன்றை கொடுத்துள்ளனர். ஆனால் அது போலியானது என தெரியவந்தது.

    அதுகுறித்து அவர் ஏஜென்சியிடம் கேட்ட போது, வேலை ஏற்பாடு செய்து தருகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.

    இதைத் தொடர்ந்து ராஜபாளையம் கோர்ட்டில் முருகன் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவின் பேரில் சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • எதிர்பாராமல் முரளிதரன் வீட்டில் பந்து விழுந்துவிட்டது.
    • மோதலில் முரளிதரன், முருகேஸ்வரி, பிரியதர்ஷினி ஆகிய 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் முரளிதரன் (வயது 21). அதே பகுதியில் 4 பேர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராமல் முரளிதரன் வீட்டில் பந்து விழுந்துவிட்டது. இது தொடர்பாக முரளிதரன் கிரிக்கெட் விளையாடிய நபர்களிடம் கேட்டபோது வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது.

    இந்த மோதலில் முரளிதரன், முருகேஸ்வரி, பிரியதர்ஷினி ஆகிய3 பேருக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் அதே பகுதியை சேர்ந்த விக்கி உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று சுற்றுலா பயணிகள் சிலர் ரிவர் ராப்டிங் செய்யும் போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி உள்ளது.
    • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் சுற்றுலா பயணிகள் சிலர் கங்கை ஆற்றின் நடுவே ரிவர் ராப்டிங் சென்றுள்ளனர். ரிவர் ராப்டிங் என்பது நீர் நிலைகளில் மிதக்கும் பலூன் போன்ற படகுகளில் சென்று விளையாடும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி ஆகும்.

    இதில் ஆபத்து அதிகம் என்றாலும் சுற்றுலா பயணிகள் இந்த விளையாட்டை அதிகம் விரும்புவார்கள். சம்பவத்தன்று சுற்றுலா பயணிகள் சிலர் ரிவர் ராப்டிங் செய்யும் போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறி உள்ளது. படகுகளில் அமர்ந்திருந்த 2 அணிகளை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் ராப்டிங் துடுப்பால் தாக்கி உள்ளனர்.

    அப்போது 3 பேர் படகில் இருந்து ஆற்றில் குதித்துள்ளனர். அவர்கள் லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆற்றில் வைத்து சுற்றுலா பயணிகள் சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள், இது வெட்கக்கேடான சம்பவம், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க உரிய முறையில் விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

    • இருதரப்பினர் மோதல்; பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட 15 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
    • விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டி தாவீது நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா கண்ணன். பாதிரியாரான இவர் செம்பட்டி என்.ஜி.ஓ. காலனியில் உள்ள விஜயலட்சுமி என்பவர் வீட்டில் ஜெபகூட்டத்தை நடத்தினார். அப்போது அங்கு வந்த அருப்புக்கோட்டை ஒன்றிய பா.ஜ.க. நிர்வாகிகள் சுரேஷ்குமார், பூலோகராஜா மற்றும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தங்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாக சுரேஷ்குமார் மற்றும் ஜோஸ்வா கண்ணன் ஆகிய இரு தரப்பினர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விருதுநகர் அருகே உள்ள பெரியபாளையத்தை சேர்ந்த திருமணமான 27 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துபாண்டி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பெண் அடிக்கடி பண உதவி செய்து வந்தார். இதனை அவரது கணவர் கண்டித்ததால் முத்துபாண்டி உடனான பழக்கத்தை அந்த பெண் தவிர்த்தார். இதனால் ஆத்திரமடைந்த முத்துபாண்டி சம்பவத்தன்று அந்த பெண்ணிடம் முகத்தில் ஆசிட் வீசுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • கர்நாடக மாநில தேர்தலில் பா.ஜ.க.விற்கு மிக பெரிய தோல்வி ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது.
    • இது ஒரு திருப்புமுனை தேர்தலாக அமைந்துள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார். அவர் கூறியதாவது:-   கர்நாடக மாநில தேர்த லில் பா.ஜ.க.விற்கு மிக பெரிய தோல்வி ஏற்பட்டு, காங்கிரஸ் ஆட்சி அமைக்க இருக்கிறது. இது ஒரு திருப்புமுனை தேர்தலாக அமைந்துள்ளது.  மோடி, அமித்ஷா கூட்ட ணிக்கும், பா.ஜ.க.விற்கும் மரண அடி கிடைத்துள்ளது. இந்த கூட்டணி தொடர்ந்து தோல்வி முகத்தை சந்தித்து வருகிறது. வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளு மன்ற தேர்தலிலும் பா.ஜ.க. படுதோல்வியை சந்திக்கும் என்பதற்கு கர்நாடகா மாநில தேர்தல் முன்னோட்டமாக அமைந்துள்ளது. குழந்தை திருமணம் நடந்து புகார் வந்து, அதன் பேரில் தான் போலீசார் நட வடிக்கை எடுத்துள்ளனர். நான் கூட குழந்தை திரு மணம் செய்தவன் தான் எனக் கூறி குழந்தை திருமணம் நல்லது என்பது போல கவர்னர் பேசி இருக்கிறார். இந்தியாவில் இதுநாள் வரை இவரை போல ஒரு கவர்னரை யாரும் சந்தித்தது இல்லை. இந்த கவர்னரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதற்காக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். வருகின்ற 15-ந்தேதி விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பட்டியலின, பழங்குடி மக்கள் பாதுகாப்பு மற்றும் உரிமை மீட்பு மாநாடு நடை பெற உள்ளது. இம்மாநாடு விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் மாலை 3 மணி அளவில் நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சி.பி.எம். பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அமைச்சர் பொன்முடி, மாநில செயலாளர் பால கிருஷ்ணன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி, சி.பி.ஐ. மாநில செயலாளர் முத்தரசன், ரவிக்குமார் எம்.பி., வேல்முருகன் எம்.எல்.ஏ. ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஹரிகிருஷ்ணன், முத்துக் குமரன், ராஜேந்திரன், முருகன், அறிவழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பண்ருட்டி ராஜாஜி சாலையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் வந்தனர்.
    • திடீரென ஊழியரின் கவனத்தை திசை திருப்பினார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி ராஜாஜி சாலையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு பர்தா அணிந்து 2 பெண்கள் வந்தனர். அவர்கள் நகை வாங்குவது போல் கடை ஊழியர்களிடம் பேச்சு கொடுத்தார்,தோடு வேண்டும் என்று கூறவே ஊழியர்களும் ஒவ்வொரு நகையாக எடுத்து மேஜையில் வைத்து காண்பித்தனர். அப்போது திடீரென ஊழியரின் கவனத்தை திசை திருப்பிய அவர்கள் 6 கிராம் தோடை திருடி பேக்கில் வைத்து கொண்டு அதற்கு பதிலாக தாங்கள் கொண்டு வந்திருந்த கவரிங் தோட்டைடேபிளில் வைத்து விட்டு அங்கிருந்து வேகம் வேகமாக வெளியேறினர்.

    இதையடுத்து ஊழியர் அவர்களை கூப்பிட்டு பார்த்தும் பயன் இல்லை. அதற்குள் அந்த பெண்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் தோடை பரிசோதித்தபோது அது கவரிங் என்றும், ஏமாற்றி விட்டு தங்க நகையை பெண்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.

    இந்த சம்பவம் பண் ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்கள் இதேபோல நெய்வேலி இந்திரா நகரில் உள்ள நகைக்கடை மற்றும் விருத்தாச்சலத்தில் உள்ள நகைகளை ஒன்றில் நகை திருடியது தெரிய வந்தது.

    இது குறித்து கடை மேலாளர் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்க வேலுஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டார். டி.எஸ்.பி. தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் தங்கேவல் தனிப்படை போலீ சார் ஆனந்த், ராஜி, கணேச மூர்த்தி, ஹலீமாபீவி ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கைது

    தனி படை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடை யில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பெண்கள் பர்தா அணிந்து முகத்தை முழுமையாக மூடி இருந்ததால் அவர்களின் முக அடையாளங்கள் பதிவாக வில்லை. இருந்தா லும் அந்த காட்சிகளை அடிப்படையாக கொண்டு அவர்கள் யார்? இதற்கு முன்னர் வேறு ஏதாவது கடையில் திருட்டு செயலில் ஈடுபட்டிருந்தனரா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம் ஆகிய இடங்களில் உள்ள நகைகடைகளில் பர்தா அணிந்து கொண்டு 10 கிராம் தோடை திருடிச் சென்றது மயிலாடுதுறை மாவட்டம் கொரநாடு மேல ஒத்த சரகு தெரு கவிதா (வயது 50), மயிலாடுதுறை கொர்க்கை மாரியம்மன் கோவில் தெருஷீலா தேவி (37 ) என தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் வேறு ஒரு நகைக்கடையில் கொள்ளை அடிக்க திட்டம் போட்டுக் கொண்டிருந்த 2 பெண்களையும் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

    அவர்களிடமிருந்து திரு டிய நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர் நகை திருட்டு வழக்கில் சிறப்பாக செயல்பட்ட பண்ருட்டி போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டு தெரிவித்தார்.

    • கடனை திருப்பி கேட்டவருக்கு மிரட்டல் விடுத்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டை தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (62). இவர் அந்த பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிக்காக இவரிடம் கோவில் நிர்வாக குழுவினர் ரூ.10 லட்சம் கடன் வாங்கி உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் கடனை திருப்பி தராமல் இருந்துள்ளனர். சந்திரசேகரன் அவரிடம் கடனை திருப்பி கேட்க சென்ற போது அவரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சந்திரசேகரன் வழக்கு தொடர்ந்தார்.

    அதில் கோர்ட் உத்தரவின்படி பெருமாள் (72), லட்சுமணன் (62), கோவிந்தராஜ், முத்துகுமார், சீனிவாசன், ராமசந்திரன் உள்ளிட்ட 9 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சேர்ந்தவர் காசிவேல் (வயது 40). கொத்தனார். இவரது மகன் ருத்திரபதி (18) வீட்டில் இருந்த போது, பக்கத்து வீட்டிலுள்ள கருப்பன் மகன் பாலு, இந்திரா ஆகியோர் வந்து, எனது வாத்தினை கொன்று போட்டுவிட்டு, பணத்தை தி ருடிவி ட்டாய் என திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
    • அவர்கள் தொடர்ந்து, வாய்கூசாமல் திட்டியதால், வீட்டின் படுக்கை அறையில் புடவையின் மூலம் ருத்திரபதி தூக்கு மாட்டிகொண்டார்.

    கள்ளக்குறிச்சி, மே.5-

    தியாகதுருகம் அருகே குரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிவேல் (வயது 40). கொத்தனார். இவரது மனைவி லட்சுமி அதே பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் வேலைக்குச் சென்றார். அப்பொழுது இவரது மகன் ருத்திரபதி (18) வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் உள்ள கருப்பன் மகன் பாலு, இவரது மனைவி இந்திரா ஆகியோர் மாட்டுக் கொட்டகையில் இருந்த ருத்திரபதியிடம் எனது வாத்தினை கொன்று போட்டுவிட்டு, பணத்தை திருடி சென்று விட்டதாக கூறி திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    தகவல் அறிந்த லட்சுமி விரைந்து வந்து தனது மகனை சமாதானம் செய்ததாகவும், அப்போது பாலுவும் அவரது மனைவியும் ருத்திரபதியை பார்த்து வாய் கூசாமல் பொய் பேசுறியே, நீ எல்லாம் செத்து தொலைய வேண்டியது தானே என கூறி மீண்டும் திட்டியதாகவும் கூறப்படுகிறது.  இதனை கேட்ட ருத்திரபதி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று விட்டார். இதனை தொடர்ந்து லட்சுமி மீண்டும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்குச் சென்று வேலை முடிந்து மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் படுக்கை அறையில் புடவையின் மூலம் ருத்திரபதி தூக்கு மாட்டி தொங்கியபடி இருந்தார்.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அக்கம், பக்கத்தினர் மாணவனை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து அவரது தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் பாலு அவரது மனைவி இந்திரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த மாணவன் ருத்திரபதி விருகாரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் - 2 படித்தார். வருகின்ற 8-ந் தேதி தேர்வு முடிவு வெளியாக உள்ள நிலையில் மாணவன் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சொத்து கேட்டு தாய், தந்தையை தாக்கிய மகன் கைது செய்யப்பட்டார்.
    • இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமான்தேவன்பட்டியை சேர்ந்தவர் முத்து(75). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு மணிமாறன் என்ற மகனும், 2மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் சொத்துகளை தனது பேரில் எழுதி வைக்குமாறு மணிமாறன் தந்தையிடம் வற்புறுத்தி வந்தார். ஆனால் 2மகள்கள் இருப்பதால் 3பேருக்கும் சரிசமமாக சொத்தை பங்கீடு செய்துதான் தரமுடியும் என முத்து கூறியுள்ளார்.இந்த நிலையில் சம்பவத்தன்று சொத்துக்களை எழுதி வைக்க கேட்டு மணிமாறன் பெற்றோருடன் தகராறு செய்துள்ளார்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மணிமாறன் பெற்றோரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பி சென்றார். இதுகுறித்து முத்துலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சந்திரா தண்ணீர் பிடிப்பதற்காக தனது பிளாஸ்டிக் குடத்தினை வைத்து விட்டு சென்றுள்ளார்.
    • அய்யாசாமி, அவரது மனைவி பாப்பாத்தி, மகன் ரமேஷ் ஆகியோர் சந்திரா, அவரது மகன் மற்றும் மகள் ஆகியோரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பொரசக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சந்திரா (வயது 39) இவர் சம்பவத்தன்று நீர்த்தேக்க தொட்டி அருகே தண்ணீர் பிடிப்பதற்காக தனது பிளாஸ்டிக் குடத்தினை வைத்து விட்டு சென்றுள்ளார். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது பிளாஸ்டிக் குடம் அருகில் உள்ள கிணற்றில் கிடந்துள்ளது. இது குறித்து கேட்டபோது அதே பகுதியைச் சேர்ந்த மொட்டையன் மகள் மலர், அய்யாசாமி, அவரது மனைவி பாப்பாத்தி, மகன் ரமேஷ் ஆகியோர் சந்திரா, அவரது மகன் மற்றும் மகள் ஆகியோரை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • இளவேனில் புவனகிரியில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார்.
    • பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    புவனகிரி அருகே கீரப்பாளையம் அடுத்த மேல வன்னியர் மேலத்தெரு இளங்கோவன். விவசாயி. இவரது மகள் இளவேனில் (வயது 23) கல்லூரி முடித்து விட்டு புவனகிரியில் உள்ள ஒரு தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று முன்தினம் காலை வயலில் வேலை செய்த அவருடைய தந்தைக்கு உணவு எடுத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் சித்ரா கொடுத்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன இளவேனிலை தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த வெங்கடாம்பேட்டையை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 65). இவர் தனது வீட்டின் அருகே சிறிய கோவில் கட்டி வருகிறார்.அப்போது இவரது தம்பி கண்ணன், பொது பாதையில் ஏன் கோவில் கட்டுகிறார்கள் என கேட்டபோது, 2 தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் ஜெயபால், செல்வமூர்த்தி, சிவமூர்த்தி, சுந்தரமூர்த்தி, கண்ணன், கருணாமூர்த்தி, கார்த்தி, நந்தகோபால் ஆகிய 8 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இது குறித்து குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் கண்ணன், நந்தகோபால், கிருஷ்ணமூர்த்தி, கார்த்தி, ஆகியோர் மீதும், கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஜெயபால், செல்வமூர்த்தி, ஜெயமூர்த்தி, சுந்தரமூர்த்தி, சிவமூர்த்தி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    ×